Saturday, October 31, 2009

நோபல் பரிசையும் விட உயர்ந்த பரிசு!

“அங்கேயிருந்தும் திருப்பி அனுப்பிட்டானுகளா?! ஏன்டா டேய்! இதுவரை நூறு ஜேர்னலுக்கு இந்த ஆர்ட்டிகிளை அனுப்பிட்ட! ஒருத்தன்கூட உன் ரிசல்ட்டை சரினு ஏற்றுக்கொள்ளவில்லை! எல்லோரும் ரிஜெக்ட் பண்ணிடுறானுக!” என்று சிரித்தான் நண்பன் பாலு.

“இல்லடா, அந்த ஆளு ஜான்சனுடைய ஃப்ரெண்டு எவனுக்காவது ரிவியூ வுக்கு போயிருக்கும். அதான் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க! ஜான்சன் வெள்ளைக்காரன் மற்றும் நோபல்பரிசு வென்றவர். அவரை இன்னொரு வெள்ளைக்காரனே விட்டுக்கொடுப்பானா?” என்றான் மதிமாறன் வருத்தத்துடன்.

“நம்ம இந்தியன் ஜேர்னல் எதுலயாவது பப்லிஷ் பண்ணப்பாருடா, மதிமாறா!”

“நம்ம மக்கள் அதைவிட மோசம்டா. அதெப்படி நோபல்பரிசு பெற்ற ஜான்சன் ரிசல்ட்ஸ் தப்பா இருக்கும்? நீ ஏதோ உளறுற என்பதுபோல் எழுதி எல்லோரும் ரிஜெக்ட் பண்ணுறானுக. எனக்கு இதுவரை ஒரு நல்ல பப்ளிக்கேசன்கூட இல்லையேடா. அதான் பிரச்சினை”

“உன் பாஸ் என்னடா சொல்றான்?”

“அவனுக்கும் எனக்கும் என்னைக்கு ஒத்துப்போச்சு? அவனும் என் ரிசல்ட்டை இப்ப நம்ப மாட்டேன்கிறான். இதுவரை 100 ஜேர்னலுக்கு அனுப்பியாச்சா? இனிமேல் இதை வேற எங்கேயும் அனுப்ப அவனால் முடியாதுனு சொல்றான்”

“ஒண்ணு பண்ணுடா, ஜான்சன் ஆர்ட்டிக்கிள் சயன்ஸ்லதானே வந்தது? அதனால் சும்மா சயன்ஸ்க்கே உன் ஆர்ட்டிக்கிளையும் அனுப்பிப் பாருடா”

“நீ வேற! சயன்ஸ்ல எல்லாம் நம்ம பேப்பர் எடுப்பார்களா? அது டாப் க்ளாஸ் ஜேர்னல்டா. மேலும் அதுலதான் ஜான்சன் எடிட்டோரியல் அட்வைசரா இருக்கான். போன வேகத்தில் நேர திரும்பி வந்துடும். அவர் ரிசல்ட்டை எப்படி தப்புனு ஒரு இந்தியன் சொல்றதுனுதான் எல்லோரும் ஏகமனதாக திருப்பி அனுப்பிடுவானுக”

நண்பன் பாலு போன பிறகும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு அங்கேயே இருட்டில் உட்கார்ந்திருந்தான் மதி. சிறு வயதில் இருந்தே அவனுக்கு பிடிவாதம் மட்டுமன்றி தன்னம்பிக்கையும் அதிகம். இதனால் அவனுக்கு கெட்ட பெயரும் அதிகம். இந்த ஆராச்சிக்குறிப்பை அவன் ஏதாவது ஒரு ஜேர்னலில் பப்ளிஷ் செய்தால்தான் அவன் தீசிஸ் எழுதமுடியும். ஆராய்ச்சிப் படிப்பில் ஐந்தாவது வருடத்தில் இருக்கும் மாணவன் அவன். பிரச்சினை என்னனா நோபல் பரிசு வின்னர் வில்லியம் ஜான்சனுடைய ஒரு ஆராச்சிக்குறிப்பில் கொடுத்த எல்லாமே இவனுடைய ஆராய்ச்சியின்படி தவறு என்று வருகிறது. இவனுடைய அனுகுமுறையில் தயாரித்த வேதிப்பொருள்கள் ஜான்சன் தயாரித்த அதே வேதிப்பொருள்களின் வேதித்தன்மைகளைவிட முற்றிலும் மாறுபடுகிறது. எந்த முறையில் தயாரித்தால் என்ன? ஒரே வேதிப்பொருளுக்கு ஒரே ப்ராபர்டீஸ்தான் இருக்கனும். யார் தயாரித்த தண்ணீராக இருந்தாலும் தண்ணீருக்கு பாய்லிங் பாய்ண்ட் 100 செல்சியஸ்தான் இருக்கனும். அதன் ஃப்ரீஸிங் பாயிண்ட் 0 செல்சியஸாகத்தானே இருக்கனும்? அதே போல்தான் இவன் தயாரித்த வேதிப்பொருளும், ஜான்ஸன் தயாரித்ததும் ஒரே வேதிப்பொருள். அவைகளின் வேதித்தன்மை மாறக்கூடாது. ஆனால் ஜான்சன் சொல்லுவதற்கும் இவனுக்கு வரும் ரிசல்ட்ஸ்கும் சம்மந்தமே இல்லாமல் வருகிறது. யாரோ ஒருவர் சொல்வது தவறு. அது ஜான்சன் என்று இவன் நம்புகிறான். ஆனால் உலகத்தில் எந்த ஒரு சயன்டிஸ்ட்டும் இவனை நம்ப மாட்டேன்கிறாங்க.

மதியைப் பொறுத்தவரையில் அவன் தயாரித்தமுறையிலோ, அல்லது தயாரித்த வேதிப்பொருள்களிலோ எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த ஜேர்னலுக்கு அனுப்பினாலும், உடனே திரும்பி வந்துவிடுகிறது. காரணம்? ஜான்சன் ஒரு நோபல் பரிசு பெற்ற வெள்ளைக்காரன். மதிமாறன் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழன். அதனால் இவனுடைய ஆராய்ச்சி ரிசல்ட்ஸை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எங்கே போனாலும் ஜான்சன் நண்பர்கள், அதனால் இவன் அனுப்பிய அடுத்த நாளே, இவன் ஆர்ட்டிகிள் திரும்பி வந்துவிடுகிறது. மதிமாறனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் பாலு சொன்னது போல சயன்ஸுக்கும் அவன் பாஸிடம் கெஞ்சி அனுப்பினான். 100% திரும்பி வந்துவிடும் என்று தெரிந்தும் சும்மா பேருக்கு அனுப்பி வைத்தான்.

ஒரு 6 வாரம் கழித்து வந்த இ-மெயிலில்:

Your paper has been accepted for Publication in Science என்று வந்தது, சயன்ஸ் ஜேர்னல் எடிட்டரிடம் இருந்து! இதுவரை அவன் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் யுனிவேர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் ல இருந்து ஒரு ஆர்டிக்கிள் கூட சயன்ஸ் போன்ற ப்ரஸ்டிஜியஸ் ஜேர்னலில் வந்ததில்லை. இவன் பாஸ் மற்றும் இவனுக்கு மட்டுமல்ல, அந்த யுனிவேர்ஸிட்டிக்கே இதுதான் சயன்ஸ் ஜேர்னலில் முதல் பப்ளிக்கேஷன்.

நிச்சயம், எப்படியோ ஜான்சனை பிடிக்காத யாரோ ஒருவரிடம் இந்த ஆர்ட்டிக்கிள் ரிவியூவுக்கு போயிருக்கு. அதனால்தான் இதை அக்சப்ட் பண்ணிக் கொண்டார்கள் என்று புரிந்தது, மதிமாறனுக்கு. நண்பர்கள், தோழிகளெல்லோருக்கும் ஒரு பெரிய பார்ட்டியே கொடுத்தான் மதிமாறன். ஒழிந்தான் ஜான்சன்! என்று கத்திக்கொண்டே அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.

பார்ட்டியெல்லாம் முடித்துவிட்டு திங்கள் கிழமை ஆய்வகம் சென்றதும் இ-மெயில் செக் பண்ணினான். அவன் பாஸிடம் இருந்து ஒரு ஃபார்வேர்டெட் மெயில் ஒண்ணு வந்திருந்தது.

Dear Shanmugam and Mathimaran,

I am William Johnson from Harvard University. Congratulations for your recently accepted Publication in Science. In an unofficial note, I just want to let you know that I am the one who reviewed your article, and accepted for publication in Science. It took a long 5 weeks to complete reviewing your paper because I asked my co-worker to repeat your experiments and prepare those compounds and check the results to make sure your results are really reproducible as you claimed. Then I wanted to compare them with what I reported two years ago. Well we learnt that your results are reproducible and perfectly all right. Then I asked my coworker to repeat my own research work and asked him to make those compounds we reported again by the method published by me. To my surprise, what we found was, the compounds prepared by our method are not as pure as yours and the results we published are not reproducible. Somehow the coworker of mine who carried out these experiments earlier did hide the problems associated with the procedure, we published. So, my results and what we claimed in our paper have problems. But your method seems to work perfectly all right. So, I decided to accept your paper in the Science magazine in order to fix the FACTS and SCIENCE right. I will also withdraw my published paper with an apology in the near future.

I am really sorry that I published misleading irreprodicible results. Because of my published contradictory results, you might have gone through difficulites to publish your results, mainly because of my reputation as a Nobel Prize winner. Best wishes!

Sincerely yours,

William Johnson.

கடித்ததை வாசித்தவுடன் மதிமாறன் தொண்டையெல்லாம் அடைத்தது. இந்த அளவுக்கு ஹானஸ்டான, பெருந்தன்மையுள்ள ஒரு விஞ்ஞானி ஜான்சனை அவன் திட்டாத நாளே இல்லை. ஒவ்வொரு முறையும் அவன் பேப்பர் ரிஜெக்ட் ஆகும்போது, இது ஜான்சன் வேலையாக இருக்கும் என்பான். உலகமெல்லாம் அவன் நண்பர்கள் இருக்காங்க, அவங்கதான் வேணும்னே அவன் பேப்பரை ரிஜெக்ட் பண்ணுவதாக நம்பினான் மதிமாறன். ஆனால் இன்று அதே ஜான்சன், தன் தவறை ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் மதிமாறனுடைய ஆர்ட்டிக்கிளை பப்லிஷ் செய்ய உதவியதால் அவனைப்பொறுத்தவரையில் அவர் நோபல் பரிசை விட பெரிய பரிசை பெற்றுவிட்டார். திரு ஜான்சன் உண்மையிலேயே எவ்வளவு பெரிய மனிதர் என்று நினைக்கும்போது அவன் கண்களில் நீர் வந்தது.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கற்பனைக் கதை போல தெரியவில்லை

Unknown said...

யூகிக்க முடிகிற முடிவு

லதானந்த் said...

சயண்ஸ் என்று விடாப் பிடியாகத் தப்பா எழுதுகிறீர்களே?
சயன்ஸ் அப்படினு சொல்லிப் பழகுங்க. உங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளைப் படிச்சா எனக்கும் நீர் வந்து விட்டது கண்ணில்!

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
கற்பனைக் கதை போல தெரியவில்லை

31 October, 2009 10:11 PM***

வாங்க,சுரேஷ்!

இதிலே நெறைய கற்பனையும் கலந்துதான் இருக்குங்க :)

வருண் said...

***முகிலன் said...
யூகிக்க முடிகிற முடிவு

31 October, 2009 10:49 PM***

உண்மைதான் முகிலன் :)))

வருண் said...

^^^லதானந்த் said...
சயண்ஸ் என்று விடாப் பிடியாகத் தப்பா எழுதுகிறீர்களே?
சயன்ஸ் அப்படினு சொல்லிப் பழகுங்க. உங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளைப் படிச்சா எனக்கும் நீர் வந்து விட்டது கண்ணில்!

31 October, 2009 11:49 PM***

வாங்க லதானந்த் சார் :)

என் தவறுதான். இப்போ ஓரளவு சரி செய்துவிட்டேன்.

உங்களை "அழ" வைத்ததற்கு மன்னிச்சுக்கோங்க :)))