Tuesday, October 27, 2009
புரட்சி திராவிடன் சத்யராஜின் அடுத்த இன்னிங்ஸ்!
வில்லனாக அறிமுகமானவர்தான் சத்யராஜ். அந்தக்காலத்து எ வி எம் படம் பாயும்புலி ல எல்லாம் ஒரு சின்ன வில்லன் ரோல்தான் செய்தார். பிறகு தனக்கே உள்ள தனித்திறமையால் வில்லனாகவே கலக்கு கலக்குனு கலக்கினார் . காக்கிச்சட்டையில் இவர் செய்த வில்லன் ரோலும், மிஸ்டர் பாரத்தில் இவர் செய்த அப்பா-வில்லன் ரோலும், கமலையும் ரஜினியையும் விட நடிப்பில் கிளப்பியதாக பலராலும் பேசப்பட்டது.
அதன் பிறகு ஹீரோவாக நடித்து தன்க்கென்று ஹீரோ அந்தஸ்தை சம்பாரித்து ஒரு பெரிய ஸ்டாரானார், சத்யராஜ். இவர் நடித்த கடலோரக்கவிதைகள், வேதம் புதிது, நடிகன், கடமை கன்னியம் கட்டுப்பாடு, பூவிழி வாசலிலே போன்றவை இவருக்கு ஹீரோ அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய படங்களில் சில.
சத்யராஜ் கொஞ்சம் அதிகமாக மேடைப்பேச்சில் பேசி கெட்டபெயர் கொஞ்சம் சம்பாரித்துக்கொண்டார். மற்றபடி நடிப்பில் இவரை யாரும் சோடை சொல்ல முடியாது.
இப்போது இவர், ஆயிரம் விளக்கு என்கிற படத்தில் , பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் ஒரு முக்கிய ரோல் செய்கிறார். இது தவிர, ஒரு தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிப்பதாகவும், ஒரு மலையாளப்படத்தில் ஒரு வித்தியாசமான ரோல் செய்வதாகவும் வதந்திகள் உலவுகின்றன. புரட்சித்தமிழன் இப்போது பலமொழிகளிலும் நடித்துப் புரட்சி திராவிடன் சத்யராஜாகிவிட்டார்!
ஹீரோவாக நடித்து சாதித்ததைவிட சத்யராஜ் இதுபோல் ரோல்களில் சிறப்பாக நடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை! இவருடைய புது அத்தியாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Labels:
அனுபவம்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"புரட்சி தமிழன்
"புரட்சி திராவிடன்"
பணத்திற்காக
எதையும் செய்வார்கள்
***DHANA said...
"புரட்சி தமிழன்
"புரட்சி திராவிடன்"
பணத்திற்காக
எதையும் செய்வார்கள்
27 October, 2009 8:26 PM***
அடுத்து ஹிந்திக்குப்போனார்னா, புரட்சி இந்தியன்" னு நம்ம சொல்லீட்டுபோயிடுவோம்.
ஒரு நடிகன்னா எல்லோரையும் அரவணைச்சுத்தான் போகனும் என்பதை சத்யராஜ் கற்றுக் கொள்வார் :)))
Post a Comment