கமலுக்கு பாஷா கண்டனம்!!!

சென்னை, அக்.8: உன்னைப் போல் ஒருவன் படத்தின் கதை தொடர்பாக நடிகர் கமலஹாசனுக்கு எஸ்.ஏ.பாஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கமல் நடிப்பில் "உன்னைப்போல் ஒருவன்" திரைப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பாஷா அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
வன்முறைக்குக் காரணமானவர்களை கொல்வதில் தவறில்லை என்கிற கருத்தின் அடிப்படையில் கதையை அமைத்திருப்பதன் மூலம் சட்டத்தை தன் கையில் கமல் எடுத்துக் கொண்டிருக்கிறார் என அந்தக் கடிதத்தில் பாஷா குறிப்பிட்டிருக்கிறார்.
கோவை குண்டுவெடிப்பில் தண்டனை பெற்றுள்ள என்னைப் போன்றவர்கள் அமைதிவழியில் தீர்வுகாணத் திட்டமிட்டிருக்கும்போது, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்கிற ரீதியில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இதுபோன்ற படத்தை எடுக்கும்போது தம்மைப் போன்றவர்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வன்முறைக்கு உண்மையிலேயே காரணமானவர்களைக் குறிப்பிட்டுப் படமெடுக்க கமலுக்குத் துணிவுண்டா எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-நன்றி தினமணி
No comments:
Post a Comment