Saturday, October 24, 2009

“போடா லூசு!” -கடலை கார்னர் (28)

“Hi Stacy! Let me ask you this. Are you proud of being an American?”

“I would say, I just happened to be an American. Why, Kannan?”

“I don't know. Someone says “if there were no oil in middle east, there would have been peace.”

“Unfortunately it is true, US gets involved in their affairs because they have oil.”

“I don't know, it is kind of bothering me.”

“We can't control that Kannan. It does not matter, we have to be patriotic and loyal to our country or not?”

“OK, Stacy.”

“Let us not worry about things which can't be controlled by us.”

“That is right!”

“Hi Stacy! Hello Kannan!”

“Hi Brindha!”

“Hi Stacy! You forgot about your appointment now or what?”

“Oh, I almost forgot. See you later Kannan! I have to run now!”

“நீயும் போகனுமா?”

“இல்லையே. பாவம் உங்க கம்பெணியை அனுப்பிட்டேன் அதனால கொஞ்ச நேரம் இருக்கேன்”

“எப்படி இருக்க பிருந்தா?”

“நீங்களே பார்த்து சொல்லுங்க. எப்படி இருக்கேன்?”

“சரியா பார்க்க முடியலை. உன் ட்ரெஸ் உடம்பை மறைக்குது. மத்தபடி நல்லாத்தான் இருக்க”

“நல்லானா?”

“உன்னை அப்படியே கடிக்கனும் போல இருக்கு.”

“ஆமா, இன்னும் ரெண்டு நாள் இருக்கே?”

“எதுக்கு?”

“எதுக்குனா?”

“உன் பேசாவிரதம் முடியவா? ரெண்டு நாளைக்கு அப்புறம் ஏதாவது பெருசா தரப்போறியா?”

“பெருசானா?”

“யு நோ.”

“நோப், ஐ டோண்ட் நோ.”

“இங்கே பக்கத்தில் இந்தப்பக்கம் வந்து உட்காரு சொல்லுறேன்”

“சரி” நு சொல்லீட்டு அவன் பக்கத்தில் வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள் பிருந்தா.

“காதுல சொல்லவா?” அவள் இடது கையை தன் வலது கையால் பிடித்தான்.

“உங்க மூச்சுக்காத்து ஏதோ செய்து. ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கீங்க போல, கண்ணன். என் கன்னத்தை கடிச்சுடாதீங்க”

“நீயும்தான். நீ, என் கன்னத்தை கடிங்க, கண்ணன்னு சொல்றமாதிரி இருக்கு”

“இருக்கும் இருக்கும்”

“இவ்ளோ நாள் பேசாமலிருந்ததுக்கு உன் வீட்டிலே டின்னர் தாவேன்?”

“அதுக்கென்ன? என்ன சாப்பாடு வேணும் வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“நீ என்ன?”

“நானா? என்னை சாப்பிடப்போறீங்களா?”

“சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடுவேன். ஏண்டி இப்படிப் படுத்துற?”

“ஆமா நான் என்ன உங்க ஆத்துக்காரியா? வாடி போடினு சொல்றீங்க?"

“ஆத்துக்காரினா?”

“ஃஒய்ஃபானு கேட்டேன்.”

“உங்காத்து பாஷைலாம் எனக்குப்புரியாது! ஆனா ஆத்துக்காரிங்கிறது ஒரு மாதிரி செக்ஸியாத்தான் இருக்கு.”

“நெஜம்மாவா?”

“ஆமா, ஒய்ஃப்னா வாடி போடினு சொல்லலாமா? வாங்க பிருந்தா போங்க பிருந்தானு சொல்லக்கூடாதா?”

“சொல்லலாமே.”

“நீ என் ஒய்ஃப்னா உன்னை வேற என்ன செய்யலாம்?”

“வேறன்னா?”

“அதான் ஒய்ஃப்னா வாடிபோடினு சொல்லலாம்னு சொன்ன இல்லை?'

“ஆமா.”

“வேற என்ன செய்யலாம்?”

“எனக்கு கால்வலிச்சா, கால் அமுக்கிவிடலாம்”

“அப்புறம்?”

“எனக்கு முத்தம் கொடுக்கலாம்”

“அப்புறம்?”

“எனக்கு ஊட்டி விடலாம்”

“அப்புறம்?”

“அவ்வளவுதான்!”

“ஏய் என்னை ஏமாத்தாதே! இதுக்காக உன்னை கட்டிக்கனுமா?”

“சரி, எங்கேனாலும் முத்தம் கொடுக்கலாம்.”

“உன் நெத்தியிலேகூட கொடுக்கலாமா?”

“நெத்தியிலேயா? நெத்தி மட்டும்தானா இருக்கு என்ட்ட?”

“வேறென்ன இருக்கு?”

“**** யு கண்ணன்!”

“ஆண்ட்டிட்ட சொல்றேன். இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி என்னைத் திட்டுறனு”

“LOL! நான் சொன்னதை அப்படியே சொல்லிச் சொல்லுங்க. சரியா? கண்ணன்! எல்லோரும் நம்மள ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க.”

“சரி பார்க்கட்டும். உன்னை அப்படியே கிஸ்பண்ணவா?”

“உதட்டிலேயா?”

“உதட்டிலேயா வேணும்?”

“எங்க கொடுக்கப் போறீங்கனு கேட்டேன்.”

“உனக்கு அச்சம், மடம், நாணம் இதெல்லாம் இல்லையா? இந்த பாட்டு கேட்டு இருக்கியா, "நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ" ?”

“கேட்டதில்லையே. சரி, ஏன்?”

“இப்படி பப்ளிக்கா உதட்டில் முத்தம்கொடுடானு ஒத்தக்காலில் நிக்கிற?”

“நீங்க பாட்டுக்கு நெத்தியிலே கொடுத்தால், எல்லோரும் நம்மள வேற மாதிரினு நெனச்சுக்குவாங்க. எனக்கு ரொம்ப அவமானமாப்போயிடும்.”

“ஏன்டா இப்படி இருக்க?”

“யு ட்ரைவ் மி க்ரேஸி!”

“சரி வேலைக்கு போ! ரொம்ப நேரமாச்சு. உன் பாஸ் தேடி வந்துறப்போறாரு.”

“சரி, முத்தம் இல்லையா?”

“இன்னொரு நாளைக்கு.”

“போடா லூசு!”

“இவ்ளோ செல்லமா திட்டுற! உனக்கு என் மேலே அவ்ளோ லவ்வா?”

“ஆமா. சரி நான் போயிட்டு வர்றேன்.”

“லெட் மி வாட்ச் யுவர் பட் வென் யு வால்க் அவே!”

“ச்சீ.!”

“ஏதோ உன்னைப்பார்த்து ரசிப்பது பிடிக்காத மாதிரி..”

“சரி வர்றேன்.”

-தொடரும்

No comments: