Sunday, October 25, 2009
சிவாஜியை ஓவெர்டேக் செய்த தசாவதாரம்!
ரஜினி நடித்து சங்கர் இயக்கிய எ வி எம் மின் சிவாஜி ஜூன் 2007 ல வெளிவந்தது. இந்தப்படம் பல முந்திய சாதனைகளை பாக்ஸ் ஆஃபிசில் முறியடித்தது. மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் டி வி ரைட்ஸ் கலைஞர் டிவி பெற்றது.
ஆஸ்கர் பிலிம்ஸ் பெரும்பொருட்செலவில் தயாரித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கி, கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் ஜூன் 2008 ல் வெளிவந்தது. அதாவது சிவாஜி வெளியாகி ஒரு வருடம் கடந்த பிறகுதான் தசாவதாரம் திரையிடப்பட்டது. இதுவும் மிகப்பிரம்மாண்டமாக திரையிடப்பட்டு மிக வெற்றிகரமாக ஓடியது. இதனுடைய டி வி ரைட்ஸையும் அதே கலைஞர் டி விதான் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியது.
சிவாஜியைவிட ஒரு வயது குறைவான தசாவதாரம், கடந்த தீபாவளிக்கு சின்னத்திரையில் (கலைஞர் டிவி) ஒளிபரப்பட்டது. ஆனால் சிவாஜி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை! சிவாஜிக்கு ஏதோ ஸ்பெஷல் ரூல்ஸ் எ வி எம் போட்டதாக அந்நேரம் ஒரு பெரிய வதந்தி உலவியது. அதாவது படம் வெளிவந்து 3 ஆண்டுகள் சென்றபிறகுதான் டி வி யில் ஒளிபரப்பப்படும் என்று. அது வதந்தி அல்ல, உண்மை என்று இப்போது தோன்றுகிறது! அதேபோல் ஒரு ஸ்பெஷல் ரூல் தசாவதாரத்துக்கு இல்லை என்று இப்போதுதான் தெரிகிறது. சிவாஜி அளவுக்கு மிகப்பெரிய படமான தசாவதாரத்துக்கும் அதே ரூல்ஸ் இருந்ததாக நான் கேள்விப்பட்டதாக ஞாபகம்.
Labels:
சமூகம்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
என்னது படம் விட்டுட்டாங்களா!
எல்லா படங்களுக்குமே அப்படிப்பட்ட ரூல் உண்டு...ஆனால் அதை மீறும் தயாரிப்பாளர்களும் அதிகம்
ஷ்ரேயா படம் மட்டும் இருக்கு, அசின் படம் கிடைக்கல?
***ராஜ நடராஜன் said...
என்னது படம் விட்டுட்டாங்களா!
25 October, 2009 9:43 AM***
ஆமாங்க, நடராஜன். :)
***T.V.Radhakrishnan said...
எல்லா படங்களுக்குமே அப்படிப்பட்ட ரூல் உண்டு...ஆனால் அதை மீறும் தயாரிப்பாளர்களும் அதிகம்
25 October, 2009 12:46 PM***
அப்படியா டி வி ஆர்!!! பகிர்தலுக்கு நன்றி, சார் :)
*** பீர் | Peer said...
ஷ்ரேயா படம் மட்டும் இருக்கு, அசின் படம் கிடைக்கல?
25 October, 2009 2:09 PM***
வாங்க,பீர்! :)
அசின், ஹிந்திக்குப் போனதுனால தலைமுழுகியாச்சி, அவங்களை! :)))
தமிழ்ப்படங்களை புறக்கணிச்சா அப்படித்தான் செய்வோம் :))))
Post a Comment