Friday, October 9, 2009

தமிழ் இலக்கியத்துக்கு நோபல்- சாருவா? ஜெயமோவா?

தமிழன் வேதியிலில் நோபல் பரிசு வாங்கியாச்சு! இயற்பியலில் ரெண்டு நோபல் பரிசுகள் வாங்கியாச்சு. பெங்காளியைவிட, ஏன் ஹிந்திக்காரன், மலையாளி, ஆந்திராக்காரன், கன்னடிகா எல்லோரையும் விட தமிழன் அறிவியலில் பெருசா சாதிச்சுட்டான்னு நம்ம சொல்லிக்குவோம்.

இப்போ அறிவியலில் சாதிக்கனும்னா அதற்கான ஆய்வுக்கூடம் வேணும். பணம் வேணும். பணம் இல்லைனா, நல்ல அறிவியற்கூடம் இல்லைனா அறிவியலில் ஒண்ணும் பண்ண முடியாது. அதனால தமிழன் இந்திய பிரஜையைத் துறந்து, வேற நாட்டில் இருந்துதான் ரெண்டு நோபல் பரிசு வாங்கி இருக்கார்கள். இராமனைத்தவிர மற்ற இருவரும் இந்தியர்கள் அல்ல! ஆனால் தமிழர்கள்.

இப்போ இலக்கியத்தில் ரவீந்திரநாத் தாகூர் ஒரு நோபல் பரிசு வாங்கிட்டாரு. அதனால பெங்காளிகள் இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கிவிட்டார்கள். மேலும் இலக்கியத்தில் சாதிச்சு நோபல் வாங்க பணம் தேவையில்லை. பெரிய வசதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் ஒருவர் சிறந்த படைப்பாளியா மட்டும் இருக்கனும். ஏழையா இருந்தாலும் அறிவாளியா, க்ரியேட்டிவா இருந்தால், நோபல் பரிசு இலக்கியத்தில் வாங்கிவிடலாம்.

அதனால என்ன சொல்ல வர்றேன்னா நம்ம சாரு நிவேதிதா, கமலஹாசனைப்பத்தி விமர்சிக்கிறதுலையும், உலக சினிமா பத்தி பேசுறதுலயுமே நேரத்தை கழிச்சு, சும்மா அரை டவுசர்களிடம் வலையுலக சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியே எவ்வளவு நாள்தான் ஓட்டப்போறாரோ? என்னைக்கேட்டால் பெருசா அவர் ஏதாவது உலக இலக்கியத்தில் சாதிக்கனும். உலக சினிமா பத்தி எத்தனையோ பேசும் இவர் உலக இலக்கியம் பத்தி பேசனும். பேசி, இவருடைய சிந்தனைகளை, ஆக்கத்தை படைப்பை வைத்து தமிழ் இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கிய முதல் தமிழனா ஆகனும்!

அதேமாதிரி நம்ம ஜெயமோகனும், சும்மா ஒரு நோபல் பரிசுகூட வாங்காத மலையாளிகளை தமிழர்கள் ரோல் மாடலா நெனைக்கனும்னு சொல்லாமல், மலையாளிகள், தெலுங்குக்காரங்க, கன்னடக்காரங்க எல்லாம் தமிழர்கள்போல் அறிவியலில் நெறையா சாதிச்சு நோபல் பரிசு வாங்கனும்னு ஒரு கட்டுரை எழுதனும்.

அப்புறம் ஜெயமோகன் சும்மா இந்த பொணம் திங்கிற அஹோரிச்சாமியார் களை எல்லாம் பத்தி ஆராய்ச்சி பண்ணாமல், அதையெல்லாம் பத்திக் கவலைப்படாமல், எதாவது இலக்கியத்தில் பெருசா சாதிச்சு தமிழ் இலக்கியத்தில் ஒரு நோபல் பரிசு வாங்கி பெருசா சாதிக்கனும். நான் தமிழ்ல எழுதினாலும் பிறப்பால் நான் ஒரு மலையாளினு உலகத்துக்கு சொல்லனும்னு நான் தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நமக்கு நோபல் பரிசு பக்கத்தில்தான் இருக்கிறது. கூடிய விரைவில் அமரிக்க ஜனாதிபதி ஆகி எல்லா வகையிலும் நோபல் பரிசு வாங்கி விடுவோம்

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
நமக்கு நோபல் பரிசு பக்கத்தில்தான் இருக்கிறது. கூடிய விரைவில் அமரிக்க ஜனாதிபதி ஆகி எல்லா வகையிலும் நோபல் பரிசு வாங்கி விடுவோம்

9 October, 2009 6:59 PM***

ஒபாமாவே தனக்கு தகுதி இருப்பதாக சொல்லலைங்க. வேற வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார். நான் பார்த்து பேசியவரையில் எல்லா அமெரிக்கர்களும், "இது ஒரு ஜோக்" மாதிரி இருக்குனுதான் சொல்றாங்க! :))