Wednesday, October 28, 2009

சினிமா தயாரிப்பு என்கிற சூதாட்டம்!

சினிமா தயாரிச்சு சம்பாரிச்சு எத்தனை பேர் வெற்றியடைந்துள்ளார்கள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணி விடலாம். இதில் பணத்தைப்போட்டு அழிந்தவர்கள்தான் ஏராளம். சரி அழிந்தவர்கள்ல கொஞ்சப்பேரைப் பார்ப்போம்!

* அசோகன் ( எம் ஜி ஆர் வைத்து நேற்று இன்று நாளை தயாரித்து பல இன்னல்களில் மாட்டியதாக கேள்வி).

* சந்திரபாபு (எம் ஜி ஆர் வைத்து மாடி வீட்டு ஏழை என்கிற படம் தயாரிக்க முயன்று தோல்விடயந்ததாக கேள்வி)

* எ எம் ரத்னம் ( நல்லா மேலே வந்து கொண்டிருந்த இவர் இப்போ மகனை வச்சு ஒரு படம் எடுத்து விழுந்து ஆண்டியாயிட்டார்னு கேள்வி)

* காலஞ்சென்ற ஸ்ரீதர் (பல வெற்றிப்படங்களை தந்த இவர், கடைசிக்காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டதாகக் கேள்வி)

* ஜி வெங்கடேஸ்வரன் (எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இவர் தற்கொலைக்கதை)

* ஸ்ரீ ப்ரியா (தயாரித்த "நீயா" ஓரளவுக்கு போச்சு . அப்புறம் வந்த "நட்சத்திரம்" ஃப்ளாப். நெறையா பணத்தை விட்டதாகக் கேள்வி)

* வி கே ராமசாமி கார்த்திக்கை வச்சு எடுத்த படங்கள் படுதோல்வியை தழுவின.

* தேவர் ஃபில்ம்ஸ் (எம் ஜி ஆரை வைத்து நிறைப்படங்கள் எடுத்த தேவர் ஃபில்ம்ஸ், பிறகு ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களையும் தந்தது. ஆனால் இப்போ என்ன ஆச்சுனு தெரியலை). நல்ல நிலையில் இல்லை என்கிறார்கள் சிலர்.


சினிமா எடுத்து அப்போ யார்தான் சம்பாரிச்சா?

* எ வி எம் (அவர்கள் ஸ்டுடியோ இருந்தது பெரிய பலம்)

* காலஞ்சென்ற பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் (இவர் ஒரு ரீமேக் பாலாஜி)

* எம் ஜி ஆர், ரஜினியை வைத்து சம்பாரிச்ச சத்யா மூவீஸ்

* பஞ்சு அருணாச்சலம் (பி ஏ ஆர்ட் ப்ரொடக்ஷன்ஸ்)

* பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் (இயக்கி, நடித்து, தயாரித்து சம்பாரிச்சாங்க)

* இளையராஜாவின் பாவலர் க்ரியேசன்ஸ்

* கமலஹாசனின் ராஜ்கமல் பிக்ச்சர்ஸ்

* சிவாஜி ஃபில்ம்ஸ்

* பாலசந்தரின் கவிதாலயா (குசேலனில்கூட நஷ்டம் ப்ரமிட் சாய்மீராவுக்குத்தான்)

* மணிரத்னம்.

சினிமா தயாரிப்பு ஒரு மாதிரியான பெரிய அள்வுல விளையாடுகிற சூதாட்டம்தான். இதில் இறங்காமல் இருப்பது நல்லது!

7 comments:

ILA (a) இளா said...

//எ எம் ரத்னம் ( நல்லா மேலே வந்து கொண்டிருந்த இவர் இப்போ மகனை வச்சு ஒரு படம் எடுத்து விழுந்து ஆண்டியாயிட்டார்னு கேள்வி)//
இது கிட்டதட்ட உண்மைன்னாலும், நீங்க சொல்ல வர்றது குஞ்சுமோன்னு நினைக்கிறேன்

வருண் said...

வாங்க இளா! :)

நாயக்- தி ஹீரோ விழுந்தபிறகு, "கேடி"னு ஒரு படம் எடுத்தார். இது தெலுகு படம். இதில் இவர் மகன் ரவி கிருஷ்ணாதான் ஹீரோ. படம் அட்டர் ஃப்ளாப், அது பெரிய அடினு சொன்னாங்க! :)

****************

நீங்க சொல்கிற *சூரியன், *ஜெண்டில்மேன் போன்ற படங்களைத் தயாரித்த குஞ்சுமோனும் இன்னைக்கு மோசமான நிலையில் இருப்பதாகத்தான் சொல்றாங்க. ஆனால் அவர் எப்படி அடி வாங்கினார்னு தெரிலை :)

ராஜாதி ராஜ் said...

dir ஷங்கர விட்டுடீங்க????

அது சரி, நிறைய 'கேள்வி' இருக்கு....ஆனா, '?' (question mark) ஒண்ணையும் காணோமே.?

ச்சும்மா...உல்லுல்லாயி..

ராஜாதி ராஜ் said...

மேல சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேன்..

>>சினிமா எடுத்து அப்போ யார்தான் சம்பாரிச்சா?

ஒரு கேள்வி குறி இருக்கு. ஹி ஹி

வருண் said...

வாங்க, ராஜாதி ராஜ்!

இந்தமாதிரி மேட்டரை எல்லாம் "கேள்வி" போட்டுத்தான் சொல்லனும்ங்க. இல்லைனா வம்புலமாட்டிக்குவோம் :)))

வருகைக்கும், நக்கலுக்கும் நன்றி :)

Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு ஸார். பாக்ய‌ராஜும், இளைய‌ராஜாவும் ச‌ம்பாரிச்சாங்க‌ன்ற‌து கொஞ்ச‌‌ம் ச‌ந்தேக‌மா தாங்க‌ இருக்கு.

-Toto
www.pixmonk.com

வருண் said...

பாக்யராஜ் படங்கள்,

* விடியும் வரை காத்திரு

* இன்றுபோய் நாளை வா

* மவுன கீதங்கள்

* அந்த ஏழு நாட்கள்

* தூறல் நின்னு போச்சு

* இது நம்ம ஆளு

எல்லாமே பெரிய அளவில் கமர்சியல் சக்ஸஸ் ஆன படங்கள்.

கடைசியில்தான் அவரே ம்யூசிக் அடிச்சு எல்லாரையும் கொல்ல ஆரம்பிச்சுட்டார்.

பாவலர் க்ரியேசன்ஸ்

* கரகாட்டக்காரன்

* கோழி கூவுது

* ராஜாதி ராஜா எல்லாம் மெகா ஹிட் படங்கள் ங்க!

வேற பின்னால படு தோல்வி அடைஞ்சாங்களானு எனக்கு தெரியலை.

வருகைக்கு நன்றிங்க,Toto :)