Thursday, January 14, 2010

அதெப்படி பாத்ரூம் பெட்ரூமாகும்? கடலை கார்னர் (39)

"போய் டைனிங் டேபிள்ல உட்காருங்க பிருந்தா மேடம்! நான் எல்லாவற்றையும் எடுத்துட்டு வந்து டேபிள் செட் பண்ணுறேன்! அப்புறம் சாப்பிடலாம்"

"பாத்ரூம் எங்கே இருக்கு?"

"நீங்க போனமுறை வந்தபோது இருந்த அதே இடத்திலேதான் இருக்கு!"

"என்ன நக்கலா? வந்து காட்டு!"

"நான் வேணா வந்து ஹெல்ப் பண்ணவாங்க மேடம்?"

"பாத்ரூம்ல வந்து என்ன ஹெல்ப் பண்ணப்போற?”

“என்ன ஹெல்ப்னாலும் கேளுங்க, மேடம், பண்ணுறேன்.”

“வந்து எனக்கு பேண்டிஸ் கழட்டிவிடுனு சொன்னா செய்வியா?!"

"உங்க கை நல்லாத்தான இருக்கு, மேடம்?"

"நான் உன் எஜமானி! நான் என்ன சொன்னாலும் செய்யனும்! புரியுதா?"

" நீங்க என்ன கைல மருதாணீயா வச்சு இருக்கீங்க?"

" மருதாணி வச்சிருந்தா செய்வியா?"

"இதெதுக்கு விபரீதம், மேடம்? அப்புறம் உங்க அழகுல நான் மயங்கி, பாத்ரூம் பெட் ரூமாயிடும்! அதான் சொன்னேன்"

"அதெப்படி பாத்ரூம், பெட்ரூம் ஆகும்?"

"அந்த மேட்டரை அப்புறம் சொல்றேன். சீக்கிரம் போயிட்டு வாங்க சாபிடலாம்!"

*************************

"வாங்க! எதிரெரா உட்காருவோமா? இல்லை பக்கதுல பக்கத்தில் உட்காரனுமா, மேடம்?"

"என் பக்கத்திலேயே உடகாரு! அப்போத்தான் ஊட்டிவிட முடியும்?"

"எல்லாம் என் தலை எழுத்து மேடம்!"

"என்ன ரொம்ப சலிச்சுக்கிற?"

"இல்லை மேடம் நான் கொடுத்து வச்சிருக்கனும். சரி சாப்பிடுவோமா? ஒரே ப்ளேட்தான். சரியா?"

"சரி"

"கைலயே தரவா? இல்லை ஸ்பூன்ல தரவா?"

"ஸ்பூன்லாம் வேண்டாம்!"

" ஆ காட்டுங்க!"

"ஆ!"

அவள் வாயில் கிஸ் பண்ணினான் கண்ணன்.

"பொறுக்கி! என்ன கிஸ் பண்ணுற!"

"எனக்கு உங்க வாயைப்பார்த்தா கிஸ் பண்ணத்தான் தோனுது"

"ஏய் ரொம்ப நல்லா இருந்துச்சு"

"அது ஏன் தெரியுமா?"

"ஏன்?"

"நானா ஆசைப்பட்டு கொடுத்தது. உங்க அதட்டலுக்காக இல்லை!"

"சரி, இப்போ எனக்கு பசிக்கலை. இன்னொரு தர கிஸ் பண்ணு!"

"பொய் சொல்லக்கூடாது மேடம். அது சும்மா அப்பெட்டைசர். இப்போ கொஞ்சம் சாப்பிடலாம்"

"நீ ஊட்டிவிடுறதுனால இந்த தயிர்சாதம் ரொம்ப டேஸ்டா இருக்கு!"

"சரி கொஞ்ச நேரம் பேசாமல் சாப்பிடுங்க!"

"எனக்கு ஒரு வாய் உனக்கு ஒண்ணு, சரியா?"

"சரி, மேடம்!"

****************************

"நல்லா சாப்பிட்டீங்களா?"

"உன் சமையல் நல்லா இருந்துச்சு. நீ ஹவ்ஸ் ஹஸ்பண்டா இருக்கலாம்."

"இப்படி ஒரு ஆசையா?"

"ஏன் இருக்ககூடாதா?"

"இருக்கலாம். உங்களுக்கு கை கழுவுற வேலை இல்லை. பக்கத்தில் வாங்க!"

"எதுக்கு?"

"உதட்டில் தயிர் கொஞ்சம் ஒட்டி இருக்கு! அதை மட்டும் க்ளீன் பண்ணி விடுறேன்"

"கிஸ் பண்ணியே என் வாயை க்ளீன் பண்ணி விடுறியா?"

"நல்ல ஐடியா. எதுக்கு, தேவையில்லாமல் வாட்டர் வேஸ்ட் பண்ண?"

"இந்த கிஸ் என்ன டெஸ்ஸேர்ட்டா?"

"ஆமா! எது பிடிச்சது?"

"ரெண்டும்தான்!"

************************

"சரி எனக்கு லுங்கியும் சட்டையும் கொடு! நான் நைட் ட்ரெஸ் போட்டு வரேன்!"

"ஒரு நிமிஷம் இருங்க மேடம்! இந்தா வர்றேன்.”

“நான் பாத்ரூம்ல இருக்கேன். வந்து கதவைத் தட்டு”*******************

“ட்க் டக் டக்! கதவைத்திறங்க மேடம்!”

“எங்கே என் நைட் ட்ரெஸ் ?”

“இந்தாங்க லுங்கியும், என் சட்டை ஒண்ணும் . இந்த ப்ரிண்ட் அவுட் ல எப்படி லுங்கி கட்றதுனு எப்படினு தெளிவா சொல்லி இருக்கு மேடம். நல்லா சமர்த்தா கட்டிட்டு, சட்டையை மாட்டிட்டு வாங்க!”

“சரி போ. நான் ஹெல்ப் வேணும்னா கேக்கிறேன்.”

**************************

“இந்த லுங்கி கெட் அப் ல ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்!”

“என்ன கொழுப்பா? எனக்கு லுங்கி இடுப்பிலே சரியா நிக்க மாட்டேங்கிது. சும்மா ஏதோ முடிச்சுப்போட்டு வச்சிருக்கேன்”

"திரும்பி நில்லுங்க பின்னால எப்படி இருக்குனு பார்ப்போம்?"

"பின்னாலயா? எதுக்கு?"

"அதான் லுங்கி எப்படி ஃபிட் ஆகி இருக்குனு"

"எப்படி இருக்கு?"

"சட்டை அந்த ஏரியாவை மறைச்சிருச்சு. அதனால சரியா தெரியலை. சரி திரும்பி நில்லுங்க!"

"லுங்கி சரியா இடுப்பிலே நிக்க மாட்டேன்கிது."

“நல்லாத்தானே கட்டி இருக்க மாதிரி இருக்கு? எங்கே சட்டையை மேலே தூக்குங்க! இடுப்பிலே எப்படி கட்டி இருக்கீங்கனு பார்க்கிறேன்?”

" போடா!" ”

"லோ ஹிப்பா ஹை ஹிப்பா?"

"அப்படினா?"

" அப்படினா...என்னதான் செஞ்சிருக்கீங்கனு காட்டுங்க, பார்ப்போம்!"

"இல்லை வேணாம்!"

“ஆமா, அதுக்குள்ள உங்களை யாரு இது ரெண்டையும் கழட்டிப் போடச் சொன்னா?”

“ அதை எல்லாம் தொடாதேடா பொறுக்கி! நைட் எனக்கு ஃப்ரீயா இருந்தாத்தான் பிடிக்கும்.”

“சரி, தொடலை. இது ரெண்டையும் எடுத்து இந்த பாஸ்கட்ல போடுங்க!'

"போட்டாச்சு! ஆமா என்ன நமட்டுச் சிரிப்பு? "

"லுங்கி இடுப்பிலேதான இன்னும் இருக்கு! கழண்டு விழுந்தாலும் சட்டை உங்க உடம்பை மறைச்சுக்கும். கவலைப்படாதீங்க!”

"வேணும்னே என்னை லுங்கிகட்ட வச்சு வேடிக்கை பார்க்கிறயா?”

"நீங்க ரொம்ப மோசம் மேடம்!"

"நானா மோசம்? "

“ஆமா, லுங்கி சரியா கட்டப்பழகிறதுக்கு முன்னாலே உங்க அண்டர்கார்மெண்ஸை எல்லாம் நானா கழட்டச் சொன்னேன்? வேணும்னே அதை கழட்டிப்போட்டு என் கற்பனையை தூண்டி விடுறீங்க.”

"என்ன கற்பனை பண்ணுற இப்போ?"

"இடுப்பிலே எப்படி அந்த லுங்கி நிக்குதுனுதான்"

"பொய்!"

"வேறென்ன நான் கற்பனை பண்ணுறேன்?"

" எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்! நீ ரொம்ப கெட்ட பையன்!"

" சரி, சரி, போய் உங்க பெட்ல உட்காருங்க மேடம். நான் வர்றேன்!"

"சீக்கிரம் வந்து சேரு!"

"பார்த்து! லுங்கி தடுக்கி விழுந்துடாதீங்க!"

"எல்லாம் உன்னால்தான்."

"லுங்கியை மடிச்சுக் கட்டிக்கிறீங்களா?"

"மடிச்சா!"

"ஆமா, எங்க ஊரு ரவ்டிகள் மாதிரி?"

"அதெல்லாம் வேணாம், போ!"

"சரி, பெட் ரூம்க்கு தடுக்கி விழுந்திடாமப் போங்க! நான் கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டு வர்ரேன்."

-தொடரும்

4 comments:

வடிவேலன் ஆர். said...

தம்பி வரூண் ரொம்ப நல்லா எழுதுறிங்க உங்களோட சொந்த வாழ்க்கையில நடந்த கதை மாதிரி எழுதுறிங்க வாழ்த்துக்கள் மிகவும் அருமை முடிந்தால் தொடர் முடிந்தவுடன் ஒரு புத்தகமாக வெளியிடவும் கட்டாயம் அடுத்த புத்தக கண்காட்சியில் பிச்சிக்கிட்டு போகும் இந்த புத்தகம். காதலர்களிடையே உள்ள ஊடல் சிறு மனக்கசப்புகள் அதன் பிறகு உருவாகும் மகிழ்ச்சி போன்றவைகளை சரியாக எழுதுகிறீர்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய மெயில் முகவரிக்கு உங்கள் மெயில் ஐடி அனுப்பி வைக்கவும் முடிந்தால் உங்கள் பிருந்தா தொடரை ஒரு முழு பிடிஎப் ஆக மாற்றி ஒரு காப்பி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுக்க பிரர்த்திக்கிறேன்

வருண் said...

நண்பர் வடிவேலன்!

உங்கள் ஊக்குவிப்புக்கு மிகவும் நன்றி. Not many can appreciate others' creativity. It is very kind of you!

KASBABY said...

நான் உங்களது அணைத்து கடலை கார்னர்-உம் படித்திருக்கிறேன்.சில சமயம் தேடி தேடி....
சில சமயம் திரும்ப திரும்ப.....

அருமை...அன்பரே...வாழ்த்துக்கள்.

வருண் said...

***KASBABY said...
நான் உங்களது அணைத்து கடலை கார்னர்-உம் படித்திருக்கிறேன்.சில சமயம் தேடி தேடி....
சில சமயம் திரும்ப திரும்ப.....

அருமை...அன்பரே...வாழ்த்துக்கள்.

19 February 2010 4:51 AM***

அழகான பின்னூட்டம், KASBABY !
வாசிப்பிற்கும் ஊக்குவிப்பிற்கும் ரொம்ப நன்றிங்க!