Wednesday, January 13, 2010
ஆதவன் சூர்யா vs வேட்டைக்காரன் விஜய்!
ஓரளவுக்கு வேட்டைக்காரன் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஆடி அடங்கிவிட்டான். தமிழ்ப்புத்தாண்டுதினமான பொங்கல் ரிலீஸ்க்கு அப்புறம் கலக்ஷன் குறைந்துவிடும். சரி, விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் னு நான் இன்னும் சொல்லிக்கொண்டு இருந்தாலும். ஆதவனைவிட வேட்டைக்காரன் பெருசா ஒண்ணும் சாதிக்கவில்லை என்பது சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் மற்றும் ஓவெர் சீஸ் பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட்ஸ்ல ல இருந்து தெரிகிறது.
ஒருவேளை பி அண்ட் சி செண்டர்களில் வேட்டைக்காரன் ஓரளவுக்கு கொஞ்சம் கலக்சன் அதிகம் கொடுத்து இருக்கலாம்தான். ஆனால் வேட்டைக்காரன் ஒரு ஹிட் படமே ஒழிய சூப்பர் ஹிட் படமோ, ப்ளாக் பஸ்டரோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது!
இதுவரை சென்னையில் வேட்டைக்காரன் கலக்ஷன் 3.7 கோடிகள். (3 வாரம்)
ஆதவன், 6 வார கலக்சன் 4.66 கோடிகள்!
வேட்டைக்காரன் தமிழ்ப்புத்தாண்டு தினமான பொங்கலுக்கு அப்புறம் நல்லா போனாலும், 6 வாரங்களில் ஆதவன் கலக்சனை தொடும் அவ்வளவுதான். அதைவிட பெரிதாக சாதிக்க சாண்ஸ் இல்லை!
பாக்ஸ் ஆஃபிஸை ல, சூர்யா, விஜய்க்கு மிக அருகில் வந்துவிட்டார் என்பது தெளிவாகத்தெரிகிறது. இதேபோல் நிலைமை தொடர்ந்தால், விக்ரம், அஜீத்தை ஓவெர் டேக் பண்ணிய சூர்யா, விஜயையும் ஓவெர் டேக் பண்ண முடியும் என்றுதான் தோன்றுகிறது.
சிங்கம் எப்படிப் போகுதுனு பார்க்கலாம்!
Labels:
அனுபவம்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//சூர்யா, விஜய்க்கு மிக அருகில் வந்துவிட்டார் என்பது தெளிவாகத்தெரிகிறது.//
இடைவெளி குறைந்ததில் விஜய் பங்கே அதிகம் என்றே நினைக்கிறேன்..,
வாங்க சுரேஷ்!
பொங்கல் வாழ்த்துக்கள்!
விஜய்க்கு இருக்கிற மார்க்கட் அப்படியேதான் இருக்கு. இல்லையா?
சமீபத்ஹ்டில் சூர்யா படத்தை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்னு நினைக்கிறேன் :)
Post a Comment