Friday, January 15, 2010
சினிமாப் பதிவுகள் எழுதுவது தப்பா?
பதிவுலகில் சினிமா பற்றி பதிவுகள் எழுதுவது ஏதோ தரக்குறைவான பதிவை எழுதுவதுபோல ஒரு சில பெரிய மனிதர்கள் விமர்சிக்கிறாங்க. என்னை கேட்டீங்கனா சினிமா சம்மந்தமா எழுதுறதென்னவோ அவ்வளவு தரக்குறைவான விசயம் இல்லை. வியாபார நோக்கில்லாமல், உண்மையைச் சொல்லி உங்கள் மனதில் உள்ளதை எழுதினால் எந்த எழுத்தும் தரமான எழுத்துத்தான். அதான் கல்கி, விகடன் ல கூட சினிமா பத்தி இன்னும் எழுதுறாங்க!
இன்னொரு மேட்டர் என்னன்னா, பொதுவா சினிமாப் பத்தி ஏதாவது எழுதினாத்தான் பலர் உங்க வலைதளப் பக்கமே வர்ராங்க. நீங்க உங்க நெட்வொர்க்கை பில்ட் பண்ண நேரமில்லைனு வச்சுக்கோங்க, நீங்க ஏதாவது நல்ல பதிவு எழுதினாலும் அதை யாரும் கண்டுக்கப் போவதில்லை. அப்படி நீங்க எழுதிய பதிவை பலர் பார்வைக்கு கொண்டு செல்லனும்னா, அதுக்கப்புறம் ஏதாவது சினிமாப் பதிவு எழுதி அவங்களை அழைச்சு வந்து அந்தப்பதிவை பார்க்க வைக்கலாம். சினிமாப்பதிவு ஒரு 'பெய்ட்" மாதிரி. உங்க வலைதளத்துக்கும் நாலு பேர் வர்ராங்கனு ஒரு ஃபீலிங்ஐ கொடுப்பதே சினிமாவும் சினிமாப்பதிவும்தான். சினிமா இல்லாமல் தமிழ் வலையலகம் இல்லவே இல்லை.
சினிமாவ விட்டுப்புட்டு பொதுவா நம்ம என்ன செய்றோம்?
* எனக்குப்பிடித்த பதிவர்னு சொல்லி யாரையோ ஒருவரை சந்தோஷப்படுத்துறோம்னு பல நல்ல பதிவர்களை கஷ்டப்படுத்துகிறோம். உங்களுக்கு பிடிச்ச பதிவரை மைக் போட்டு கூப்பிட்டு சொல்லனுமா என்ன?
* ஜோக் அடிக்கிறோம்னு சொல்லி பல குறையுள்ளவர்களை சங்கடப் படுத்துறோம்
* ஞாநியும் சாருவும் அடிச்சுக்கிட்டு நாறுவதை எழுதுறோம். அவங்க எழுத விசயம் இல்லாமல்தான் இப்படி சண்டை போட்டு கூட்டம் சேர்க்கிறாங்க! நம்ம அவங்க சண்டையை வச்சு கொஞ்சம் கூட்டம் சேர்க்கிறோம்!
* அப்புறம் இந்த மதவெறியன் துக்ளக் சோ, எங்கே பார்ப்பான்னு தேடுறானாம்! ஏதோ ஒருவகையில் பாப்பானை திட்டுவதுபோல பார்ப்பான் பெருமை பேசி, பாப்பானைப்பத்தி ஆராஞ்சி, பாப்பானை விமர்சனம் பண்ணி, நானும் பாப்பான், நானும் பிராமணன் னு சொல்லிக்கொண்டு திரியலலைனா சில லூசுப் பார்ப்பான்களுக்கு தூக்கம் வராது . சரி, அவந்தான் ஏதோ லூசுப்பய, பார்ப்பான், பார்ப்பான்னு சொல்லி தன் பத்திரிக்கையை விக்க வைக்க எழுததுறான் போகட்டும்னு விட்டுறலாம். அதை காப்பி- பேஸ்ட் பண்ணி அதுக்கு ஒரு பெரிய விளம்பரம் இணைத்தில் வேற. ரொம்ப அவசியம் பாருங்க, இல்லாத பார்ப்பாணை தேடிக் கண்டுபிடிக்கிறது!
* அப்புறம் நம்ம அரசியல் சாக்கடை பத்தி விஜய்ல இருந்து விசயகாந்து வரைக்கும் பேசி, நம்ம காலஞ்சென்ற கடவுள் எம் சி ஆர்ல போய் முடிப்போம்! நாட்டை பிடிக்கிறவரைதான அவன் நடிகன் கூத்தாடி! பிடிச்சு ஆண்டுட்டா, அவர் தலைவராயிடுவாரே! இல்லை தெய்வம் ஆயிடுவார்.
இதுபோல மேட்டரெல்லாம் எழுதினால் என்ன பெரிய விசயங்களை அலசி ஆராய்ந்துட்டோமா என்ன?
சினிமாவா இருந்தால் என்ன சில உண்மைகளை அடிப்படையா வைத்து எழுதினால் எந்த எழுத்துமே நல்ல எழுத்துத்தான்!
Labels:
அரசியல்,
அனுபவம்,
திரைவிமர்சனம்,
பதிவர் வட்டம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
***ராஜாதி ராஜ் said...
Nope.
15 January 2010 1:32 PM***
LOL!
Happy New Year, Rajathi Raj! :)
repeateeei
சரியாகச் சொன்னீர்கள் தலீவா..?
thanks...
அட இப்படியும் எழுதலாமா? வித்தியாசமான பார்வை
விமர்சனம் எழுதுவது தப்பில்லை, கொஞ்சமாவது அதைபற்றிய அறிவு இருந்தால்.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி, சுரேஷ், ஒரு வார்த்தை, ஜெட்லி, ஜோதி மற்றும் அஹோரி! :-)
பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள், ஒருவார்த்தை, ஜெட்லி, ஜோதி மற்றும் அஹோரி :)
Post a Comment