Wednesday, January 27, 2010

நேற்றைய சூப்பர் ஸ்டார்! இன்றைய பரிதாப ஸ்டார்!


அழகும் இளமையும் நம்மைவிட்டு சீக்கிரம் போயிடம்! யாருமே என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது உலக நியதி!

ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார், மைக்கேல் ஜார்டனை இன்று ஒரு இளம் என் பி எ ப்ளேயர் ஈஸியாக பீட் பண்ண முடியும்! ஏன்னா ஜார்டனுக்கு வயதாகிவிட்டது. அதே நிலைமைதான் டென்னிஸ் வீரர்கள் பீட் சாம்ப்ராஸ், ஆண்ரியா அகாஸி மற்றும் எல்லா ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கும்!

ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல! அதேபோல்தான் சினிமாவும்! ஹாலிவுட் சினிமா சூப்பர் ஸ்டார்கள் இதில் விதிவிலக்கெல்லாம் இல்லை! நடிகைகள் மிளிர்வது ரொம்ப கம்மியான நாட்கள்தான். நடிகர்கள்? அவர்களுக்கும் வயதாக ஆக அவர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வால்யு குறைந்துகொண்டேதான் போகிறது.

ஹாரிசன் ஃபோர்ட் ஸ்டார் வார்ஸ்ல ஹான் ஸோலோ வாக அறிமுகமானார். அதுதான் அவருக்கு டேர்னிங் பாயிண்ட். ஒரு சமயம், எல்லா ஹாலிவுட் ஸ்டார்களையும் விட அதிக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் கொடுத்த அமெரிக்காவின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக இருந்தவர்தான் ஹாரிசன் ஃபோர்ட்.

போனவாரம் ரிலீஸ் ஆன எக்ஸ்ட்ராடினரி மெஷர்ர்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஓபெனிங் வீக் எண்ட் கலக்ஷன் 7 மில்லியன் மட்டுமே. இது மட்டுமல்ல, சமீபத்தில் இவர் நடித்த இண்டி-4 த்தவிர அனைத்துப் படங்களுமே ஃப்ளாப்தான். இண்டியானா-4 வின் வெற்றியும் இவரால் என்று சொல்ல முடியாது. கதை ப்ளாட், டைரெக்டர் போன்ற க்ரிடிட்களால் என்றுதான் சொல்லனும்.

நேற்றைய சூப்பர் ஸ்டாரின் இன்றைய பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கிறது என்பதற்கு ஹாரிசன் ஃபோர்ட் நல்ல உதாரணம்.

அதனால்தானோ என்னவோ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, மிகக்கவனமாக மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கிறார். சாதாரணப் படங்களில் நடித்தால் அவர் சூப்பர் ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் ஸ்டேட்டசை தக்க வைக்க முடியாதோ என்கிற ஐயம்மாக இருக்கலாம்! ஆனால் நம்ம சூப்பர் ஸ்டாரின் இன்றைய நிலைமை ஹாரிசன் ஃபோர்டைவிட ஓரளவுக்கு தேவலாம்தான்! :)

வயதாவது அவர்களுக்கு சாதகமாக அமைவது பொதுவாக எழுத்தாளர்களுக்கு மட்டும்தான்! அனுபவம் அதிகமாவதால் எழுத்தில் நிதானம் அதிகமாவதுண்டு. ஆனால் வயதாக ஆக, அவர்கள் எழுத்தில் "பர்வேர்ஸ்" அதிகமாவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஜானகிராமனுடைய "நளபாகம்" எல்லாம் பலவித விமர்சனத்துக்குள்ளானதாகவும், வயதாக ஆக அவர் எழுத்தில் பர்வேர்ஸ் அதிகாமவாதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்மேல் விழுந்ததாக கேள்வி! ஆனால் இன்றைய எழுத்தாளர்களுக்கு "பர்வேர்ஸ்" அதிகமாக ஆக பல ரசிக ரசிகர்களை அள்ளித்தர வாய்ப்பும் இருக்கு!

No comments: