Saturday, January 23, 2010

"A" for "கோவA" வாம்!



ரஜினி பொண்ணு சவுந்தர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிக்கும் படமான "கோவா" வுக்கு "சென்சார் போர்டால்" "எ" சான்றிதழை தவிர்க்க முடியாதாம்! என்ன இப்படி 21 ம் நூற்றாண்டுல "எ" படம்னா என்ன பெரிய டீலா? இதப்போயி என்னத்தை பெருசாபேசிக்கிட்டு நீங்க யோசிக்கலாம்.

ஆனால், அது ஒரு முக்கியமான மேட்டர்தான்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலா "A" படம் எதுலயுமே நடிக்கத்தயங்குவார். காரணம்? நம்ம ஊரில் குடும்பமா வந்து யாரும் படம் பார்க்க மாட்டாங்க! குழந்தைகள், பெண்கள் வந்து படம் பார்க்கமாட்டாங்க. ரஜினி போன்ற ஹீரோக்களின் கமர்சியல் வெற்றிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும் என்பதால் அடல்ட்ஸ் ஒன்லி படத்தை ரஜினிகாந்த் சமீப காலங்களில் பண்ணுவதில்லை. சிவாஜிக்கு "எ" கிடையாது. எந்திரனுக்கும் அது கவனமாகத் தவிர்க்கப்படும்!

கமர்சியல் சக்ஸஸ்னு பார்க்கலைனா, "எ" படம் என்பது ஒண்ணும் பெரிய டீல் இல்லைதான். பாலசந்தருக்கு நெறைய "எ" படங்கள் தான் க்ரிட்டிக்கல்லா பேர் பெற்று தந்தன.

ஏன், நம்ம ரஜினி ஆரம்பகாலத்தில் நடிக்காத எ படமா?

* காயத்ரி

* தப்புத் தாளங்கள்

* அவள் அப்படித்தான்

* புவனா ஒரு ?

எல்லாமே "எ" படங்கள்தான். பிறகு கமர்சியல் ஹீரோவான பிறகு "எ" படங்களை கவனமாகத் தவிர்த்தார். ஒரு படத்தின் கமர்சியல் வெற்றிக்கு "எ" நிச்சயம் தடையா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

"எ" சான்றிதழுடன் வரும் நம்ம கோவா க்ரிடிக்கலா பெரிய சாதனை படைக்க சாத்தியமுண்டு! கமர்சியல்லா "எ"முத்திரையுடன் பெரிய வெற்றிபெறுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் "எ"படம் என்பதால் கமர்சியல்லா வெற்றிக்கு சாத்தியமே இல்லைனும் சொல்ல முடியாது.

No comments: