Tuesday, January 19, 2010

"நானா? என் கவிதையா?" கடலை கார்னர் (40)

"என்ன என் பெட் ல படுத்து இருக்கீங்க, பிருந்தா மேடம்?"

"எனக்கு அந்த "ட்வின் சைஸ்" பெட் பிடிக்கலை!"

"நான் வேணா அங்கே படுத்துக்கவா?"

"ஏன் உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்லையா?"

"அப்படினா?"

"ஒரே பெட்ல படுத்து தூங்கினா என்ன? ஏன் பயப்படுற?"

"உங்க பக்கதிலேயா?"

"நான் யாரோ ஒரு பெண்ணுனு நெனச்சுக்கோ. மனசு சுத்தமா இருந்தா பக்கத்திலேயே படுத்து தூங்கலாம்!"

"இப்போ என்ன சொல்றீங்க, மேடம்?"

"நம்ம ரெண்டு பேரும் ஒரே பெட்லதான் இப்போ தூங்குறோம்!"

"சரி மேடம்! எனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு!"

"அப்போ நான் அலையிறேன்னு சொல்றியா?"

"இல்லை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்! அதுவும் இந்த கெட் அப் ல அதான் கொஞ்சம் பயம்மா இருந்தது."

"உனக்கு கவிதை எழுதத்தெரியுமா?"

'தெரியாது! உங்களுக்கு?"

" எனக்கும் தெரியாது!"

"பொதுவா அறிவியல்ல இண்டெரெஸ்ட் உள்ளவங்களுக்கு கவிதை எல்லாம் வராதாம், மேடம்!"

"ஏனாம்?"

"அதென்னனு தெரியலை. அவங்களுக்கு இயற்கை ரசனை கம்மியாம்!"

"அதெல்லாம் இல்லை! எனக்குத்தெரிய அறிவியல் படித்தவர்கள் நெறையப்பேர் நல்ல கவிதை எழுதி இருக்காங்க! சும்மா விடாதே!"

"அப்படியா? சரி, என் ரசனைக்கு முன்னாடி எந்தக் கவிஞனும் பக்கத்தில்கூட நிக்க முடியாது. உங்களை நான் எப்படி ரசிக்கிறேன் தெரியுமா?"

"எப்படி ரசிக்கிற?"

"ரொம்ப ரொம்ப!"

"நெஜம்மா?"

"எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது மேடம். அதான் உங்களுக்கு எடு பிடி வேலையெல்லாம் செய்றேன்."

"பொய் தானே?"

"நெஜம்மாத்தான்! அதை ஏன் திரும்ப திரும்ப கேக்குறீங்க?'

"சும்மாதான். அப்போ என்னை வச்சு ஒரு கவிதை எழுது!"

"அதுமட்டும் வராதே!"

"என்னை ரசிக்கத் தெரியுதுல?"

"ஆமா"

"அதையே சும்மா எழுத வேண்டியதுதானே?"

"நான் என்ன எழுதினாலும் அதை ஏற்கனவே யாராவது அழகா எழுதி இருப்பாங்க! அதுனால ஒரிஜினல் கவிதையா இருக்காது. அதான் இந்த கவிதைப் பக்கமே போறதில்ல"

"சும்மா ஏதாவது எழுது"

"கவிதை எப்படி எழுதுறதுனு இலக்கண்ம் படிக்கலையே!"

"இலக்கியத்தில் இருந்து வந்ததுதான் இலக்கணம்!"

"அதனால?"

"நீ என்னை வச்சு ஒரு கவிதை எழுது. நீ எழுதுறதுதான் கவிதை. ஹைக்கூ மாதிரி அது ஒரு புதிய இலக்கியம். அதுக்கு பின்னால இலக்கணம் எழுதிக்கலாம்!"

"அய்யோ உங்களுக்கு சுத்திப்போடனும் மேடம்! என்ன ஒரு அறிவு உங்களுக்கு?"

"அதெல்லாம் அப்புறம் போடலாம். மரியாதையா ஒரு கவிதை எழுது! சும்மா ட்ரைப் பண்ணு."

"சரி எழுதுறேன்"

"என்ன என்னையே பார்க்கிற?"

"சரி நீங்க கோவிச்சுக்காம கொஞ்சம் எனக்கு ஒர் டம்ளர்ல தண்ணி எடுத்துட்டு வர்றீங்களா?!

"கவிதை எழுத ஆரம்பிச்சதும் ஆட்டிட்டுடே மாறுது?'

"பொதுவா கவிஞர்கள் எல்லாம் அப்படித்தானே, மேடம்?"

"சும்மா கதை பேசாமல் ஒரு நல்ல கவிதை எழுது. நான் போய் எடுத்துண்டு வர்றேன்!"

"இங்கே வாங்களேன்!"

"என்ன?'

"இல்லை சும்மா ஒன்ஸ் மோர்க்காகத்தான்! இப்போ அழகா நடந்து போங்க!"

"நடக்கிறதை ரசிக்கிறயாக்கும்?"

"ஆமா!"

"கவிதையை எழுது!"

*************************************

"எங்கே பார்க்கலாம்! என்ன கவிதை எழுதி இருக்க?"

"கவிதையே வர மாட்டேங்கிது, மேடம்!"

"ஏன்?"

"எத்தனை தர சொல்றது? நான் அந்த விசயத்தில் மக்கு!"

"முயன்றால் முடியாதது இல்லைனு சொல்றாங்க?"

"அதெல்லாம் பொய் மேடம். ஒரு சிலரால் ஒரு சில விசயம் செய்ய முடியாது!'

"சரி என்ன தான் எழுதி இருக்கனு பார்ப்போம்?"

"யார்ட்டயும் சொல்லக்கூடாது?"

"சரி, காட்டு!"

"சிரிக்கக் கூடாது?"

"சரி, சிரிக்கமாமல் வாசிக்கிறேன்"

"யார்ட்டயும் சொல்லிக் கேவலப்படுத்தக்கூடாது?"

"சே சே அதெல்லாம் பண்ண மாட்டேன்"

"இந்தாங்க மேடம்!"


ஏய் பிருந்து!

நீ லுங்கியில் இருக்கும் அழகு

என் கண்களுக்கு விருந்து!"


ஏய் பிருந்து!

நீ என் இதயத்தை

திருடி வைத்திருக்கும் பருந்து!


ஏய் பிருந்து!

என் இதயவலிக்கு

உன் புன்னகைதான் மருந்து!


"என்ன சிரிப்பு? சொன்ன வார்த்தையை காப்பாத்தனும், மேடம்!"

"எனக்கு சிரிப்பு அடக்க முடியலை!"

"இப்படித்தான் ஏதாவது எழுத வருது!"

"எனக்குப் பிடிச்சு இருக்கு. ஆனால் இது என்ன கவிதையா?"

"யாருக்குத் தெரியும்? உங்களுக்கும் கவிதைனா என்னனு தெரியாதே மேடம்!"

"எனக்குக் கொஞ்சம் தெரியும்!"

"எழுதவா?'

"இல்லை இல்லை, கவிதைனா எதுகை மோனையுடன் இருக்கனும். அது இதுனு படிச்சி இருக்கேன்"

"அதெல்லாம் அந்தக் காலம். இப்போ புதுக்கவிதைலாம் அப்படி இல்லையாம்!"

"ஆனா நிச்சயம் இது கவிதை இல்லை!"

"சரி நான் ஒரு ஏ கவிதை சொல்றேன் கேக்கிறீங்களா?"

"என்னைப் பத்தியா?"

"ஆமா"

"சொல்லு"

"பக்கத்தில் வாங்க! உங்க காதில் சொல்லுறேன்"

" "

"இப்படியெல்லாம் வார்த்தை போட்டு கவிதை எழுதுவாங்களா? ரொம்ப மோசமான கற்பனை! ரொம்ப ரொம்ப மோசம்!"

"நானா? என் கவிதையா?"

"ரெண்டும்தான். ஆனா உனக்கு நல்லா ஏ கவிதை எழுத வருது"

"உங்களைப் பார்த்தால் இந்த மாதிரி கவிதைதான் வருது எனக்கு"

"பார்த்தா பக்கா ஜெண்டில் மேனா இருக்க? இப்படி எல்லாம் கவிதை எழுதுற?"

"சரி நீங்க ஹிப் ஹாப் சாங் ல உள்ள லிரிக்ஸ்லாம் வாசிச்சு இருக்கீங்களா?'

"இல்லையே!"

"லவ் ஹம்ப்ஸ் லிரிக்ஸ் கேட்டுப்பாருங்க!"

"அதெல்லாம் என்ன கவிதையா?'

"கதைக்கா லிரிக்ஸ் இருக்கும்?"

"சரி வந்து படு தூங்கலாம்!"

-தொடரும்

No comments: