Tuesday, January 5, 2010

"அசல்" அஜீத்தின் இன்றைய ஸ்டார் வால்யு என்ன?நடிகர் அஜித், சமீரா ரெட்டியுடன் ஜோடியாக நடிக்கும் அசல் பாடலகள் ரிலீஸ் ஆகிவிட்டது. பாடல்கள் விமர்சனம் வந்துகொண்டு இருக்கின்றன. அசல் படத்தை சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்க, வைரமுத்து பாடல்கள் எழுத பரத்வாஜ் இசையுடன், சரண் இயக்கத்தில் ரெடியாகி வருகிறது. ஆனால் இந்தப்படம், பொங்கலுக்கு வெளிவரும் ஆயிரத்தில் ஒருவன் (கார்த்தி), குட்டி (தனுஷ்), நாணயம், போற்களம் போன்றவைகளுடன் மோதவில்லை! அனேகமாக விஷாலின் தீராதவிளையாட்டுப்பிள்ளையும் அசலும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜீத்தின் இன்றைய ஸ்டார் வால்யு என்ன?

இவருடைய பில்லா நீண்ட நாளைக்குப் பிறகு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், இவர் கடைசிப்படம் ஏகன் சரியாகப்போகவில்லை. இதனால் அசலின் வெற்றி அஜீத்துக்கு ரொம்ப அவசியம். இப்போதைக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா வுக்கு அடுத்த இடத்தில்தான் அஜீத் இருக்கிறார். அஜீத்தின் ஸ்டார் வால்யு கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கு. இவர் இந்த ஒரு நிலைமையில் மிகவும் கவனமான இருக்க வேண்டும். நல்ல படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்கனும். இல்லைனா அஜீத் நிலைமை கஷ்டம்தான்.

சமீபகாலமாக அஜீத், வருடம் ஒரு படம்தான் செய்கிறார். கடந்த 2009 ல் இவர் படம் ஒண்ணுகூட வெளிவரவில்லை! ஆனால் இவருக்கு தீவீர விசிறிகள் கோடிக்கணக்கில் உண்டு. இதுபோல் கோடிக்கணக்கில் விசிறிகள் உள்ளபோது ஏன் இத்தனை இடைவெளினு தெரியலை. தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாம் இப்போ ஹாலிவுட் சினிமா ஹீரோ மாதிரி ஆகிவிட்டாங்க. விக்ரம், அஜீத், விஜய் எல்லாம் ரொம்ப நிதானமாகத்தான் படம் வெளிவிடுறாங்க. ஆனால் இது நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியலை.

சரி, இத்தனைநாள் இடைவெளியில் வருகிற அசல் முதல்ப் பார்வையில் எப்படி இருக்குனு பார்ப்போம்!

* இந்த "அசல்" என்கிற பேரே எதுவும் ரொம்ப கவர்ச்சியா இல்லை! எங்கே இருந்து பிடிச்சாங்கனு தெரியலை இந்தப்பெயரை! ஆனால் பேரைவச்சு படத்தை எடைபோட முடியாதுதான்.

* அஜித் ஒரு பெரிய கிருதாவுடன் வருவது என்னத்துக்குனு தெரியலை! அழகான அஜீத்தை இந்த வேஷம் கண்றாவியா காட்டுது. இந்த மாதிரி ஒரு "முகஅழகுடன்" இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை!

* இன்னும் ஒரு ஸ்டில்ல பெரிய சுருட்டு ஒண்ண வேற குடிக்கிறார். இவர் சினிமால புகைபிடிப்பதை இன்னும் நிறுத்தலையா? இல்லைனா ராமதாஸ் நிலைமை மோசமா இருப்பதால் எல்லோரும் ஒரு தம்மை பத்த வச்சு அவரை சீண்டுறார்களானு தெரியலை!ஏன்னு தெரியலை, எனக்கு இந்தப்படம் இதுவரைக்கும் நல்லாவோ, ஒரு அப்பீலிங்காவோ தோனலை. இந்த "வியேடான" கெட்-அப் எல்லாம் பார்க்கும்போது எனக்கு இது ஒரு ஏதாவது ஆங்கிலப்பட காப்பியா இருக்குமோனு தோனுது.

சரி, என்னுடைய இந்தப்பார்வை குருட்டுப்பார்வையாகப்போயி நான் நினைப்பது, இங்கே எழுதியது எல்லாமே தவறாகி, அசல் ஒரு வெள்ளிவிழாப்படமாக அஜீத்துக்கு அமையுனும், சிவாஜி ஃபில்ம்ஸ்க்கு இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக ஆகி பலகோடி ரூபாய் இலாபத்தை அள்ளித்தரனும் என்பதுதான் என் ஆசை!

14 comments:

T.V.Radhakrishnan said...

//நாயனம்,//

நாணயம் ???

வருண் said...

ஆமா அது நாணயம்தான் டி வி ஆர் :)))

நான் திருத்திடுறேன் :)

VELAN said...

wait and see. thala rocks...
(I am not a Ajith fan).

ரமேஷ் கார்த்திகேயன் said...

//சரி, என்னுடைய இந்தப்பார்வை குருட்டுப்பார்வையாகப்போயி நான் நினைப்பது, இங்கே எழுதியது எல்லாமே தவறாகி, அசல் ஒரு வெள்ளிவிழாப்படமாக அஜீத்துக்கு அமையுனும், சிவாஜி ஃபில்ம்ஸ்க்கு இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக ஆகி பலகோடி ரூபாய் இலாபத்தை அள்ளித்தரனும் என்பதுதான் என் ஆசை //

?????

ரமேஷ் கார்த்திகேயன் said...

ye padam odirum de
don't feel
be happy

வருண் said...

***VELAN said...

wait and see. thala rocks...
(I am not a Ajith fan).

5 January 2010 9:05 PM***

சரிங்க வேலன், தல கிளப்புறாரானு பார்ப்போம்! :)

வருண் said...

***ரமேஷ் கார்த்திகேயன் said...

//சரி, என்னுடைய இந்தப்பார்வை குருட்டுப்பார்வையாகப்போயி நான் நினைப்பது, இங்கே எழுதியது எல்லாமே தவறாகி, அசல் ஒரு வெள்ளிவிழாப்படமாக அஜீத்துக்கு அமையுனும், சிவாஜி ஃபில்ம்ஸ்க்கு இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக ஆகி பலகோடி ரூபாய் இலாபத்தை அள்ளித்தரனும் என்பதுதான் என் ஆசை //

?????

6 January 2010 1:48 AM***

ரமேஷ்!

என்னுடைய ஸ்பெக்குளேசன் தவறா இருக்கனும், படம் வெற்றியடையனும்னு சொல்றேன். :)

வருண் said...

** ரமேஷ் கார்த்திகேயன் said...

ye padam odirum de
don't feel
be happy

6 January 2010 1:48 AM***

ஓடிருமா? சரி, அப்போ சந்தோஷம்தான் :)

ராஜ நடராஜன் said...

இன்னும் களத்திலதான் இருக்குறீங்களா வருண்?

நடிகர்களை டரியல் பண்ணாம விடமாட்டீங்க போல இருக்குதே:)

ganesh said...

நீங்கள் விஜய் விசிரியா....

வருண் said...

***ராஜ நடராஜன் said...

இன்னும் களத்திலதான் இருக்குறீங்களா வருண்?

நடிகர்களை டரியல் பண்ணாம விடமாட்டீங்க போல இருக்குதே:)***

வாங்க நடராஜன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அஜீத்பத்தி நான் ரொம்ப எழுதியதில்லையே, நடராஜன். :)

வருண் said...

**ganesh said...

நீங்கள் விஜய் விசிரியா....

6 January 2010 7:35 AM
Delete**

வாங்க கணேஷ்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இல்லங்க, நான் விஜய் விசிறியெல்லாம் இல்லை!

ஆனால் இந்த தமிலிஷ்ல ஓட்டுப்போட்டவங்க எல்லாம் விஜய் விசிறியா இருக்கலாம் :)

STANLY said...

ETHU UNAKKU VENDATHA WORK .

THALAYA PATHI SOLLA UNAKKU ENNA THAGUTHI ERUKKU ..

ASAL HIT AGUTHO ILLAYO THALA THALATHA.

வருண் said...

வாங்க, தல, ஸ்டேன்லி!

தகுதி இல்லைனு சொல்றீங்களா? அதுவும் யோசிக்க வேண்டிய விசயம்தான் :)))

உங்களுக்கும் உங்க தலைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், ஸ்டேன்லி!