Saturday, January 23, 2010

கற்பு, கடவுள், நன்னடத்தை & சுரேஷின் அப்பா!

“என்னடா சுரேஷ்! திடீர்னு யு எஸ் இருந்து வந்து நிக்கிற?”

“வீட்டிலே ஒரு பிரச்சினைங்க, சந்துரு!”

“என்ன ஆச்சுடா?”

“தங்கை கால் பண்ணி உடனே வா னு சொன்னா.”

“எப்போ திரும்பிப் போற?”

“தெரியலைங்க.”

“என்ன பிரச்சினைனு சொல்லுடா?”

“அப்பாவுக்கு ஏதோ ஒரு கொஞ்ச வயசு லேடியோட பழக்கம் ஆகி விசயம் பெருசாயிருச்சுங்க!”

“அப்பாவா! அவருக்கு என்னடா வயசு?”

“அம்பதாச்சுங்க ஆனா, ஹி வில் லுக் லைக் ஃபார்ட்டி!”

“இந்த வயசுல அஃபையரா!”

“ஆமாங்க, தங்கை ஃப்ரெண்டு பீச்ல ரெண்டு பேரையும் பார்த்து இருக்கா. அம்மாவை அவளுக்கு நல்லாத் தெரியும்.”

“கொடுமைடா!”

“அம்மா ஒரே அழுகை. எனக்கு இந்தாளு முகத்தைக்கூடப் பார்க்க முடியலை..அதான் பெங்களூர் வந்துட்டேன்.”

“சரி, இப்போ அப்பாட்ட பேசி ஒரு வழியா பிரச்சினை தீர்ந்ததா?”

“அந்த லேடி இவர்ட்ட வேலை பார்க்கிற செக்ரெட்டரி. அவ ஃபேமிலில பிரச்சினை போல இருக்கு. இவங்க ரெண்டு பேரும் ஃபாரின்ல போயி செட்டில் ஆகிறாப்பிலே ப்ளானாம். இப்போ பெரியவங்க பேசி ஒரு வழியா நிறுத்தீட்டாங்க. சட்டப்படி எதுவும் பண்ணல. ஆனா எனக்கு அவரைப் பார்க்கவே பிடிக்கலை. தங்கைதான் ஓரளவுக்கு பேசி சமாளிக்கிறா. அம்மா எந்நேரமும் அழுகை.”

“எப்படிடா இப்படி இர்ரெஸ்பாண்ஸிபிளா இருக்காரு அப்பா?”

“தெரியலைங்க. நானும் தங்கையும் 25 ப்ளஸ். கல்யாண வயசு எங்களுக்கு. இந்த நேரத்தில் இவர் இப்படி. சொந்த பந்தமெல்லாம் கேவலமாப் பார்க்கிறாங்க.”

“அட் ல்லீஸ்ட் அவரு கில்ட்டியா ஃபீல் பண்றாரா?”

“தெரியலை. ஐ டோண்ட் திங்க் சோ. ஐ ஹேட் ஹிம்!”

“எனக்கு என்ன சொல்றதுனுனே தெரியலைடா, சுரேஷ். என்னால இது மாதிரி ஒரு நிலைமை எனக்கு வருவதா யோசிக்கக்கூட முடியலைடா. ஐ டோண்ட் நோ ஹவ் டு மேக் யு ஃபீல் பெட்டர்.”

“என்னவோ போங்க! ஐ லவ்ட் ஹிம். ஐ ஹாட் லாட்ஸ் ஆஃப் ரெஸ்பக்ட் ஃபார் ஹிம்! ஹி ஃபக்ட் அப் எவ்வெரிதிங் நவ்!”

“இந்த எழவுக்காகத்தான், கற்பு, நன்நடத்தை, மாரல்ஸ், கடவுள்னு நமக்கு நாமா சில கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டியிருக்கு. அப்பா, அம்மா தங்களுடைய சின்றின்பங்களை குழந்தைகளுக்காக சேக்ரிஃபைஸ் பண்ணியே ஆகனும். இல்லைனா தே ஆர் கோயிங் டு ஃபக் அப் எவ்வெரிபடிஸ் லைஃப்!”

“ஒவ்வொரு 10 வருடமும் இவங்களுக்கு புதுசா ஒரு பெண் வேணும்னா எதுக்கு கல்யாணம் பண்றாங்க? இவங்களுக்கு எதுக்கு குழந்தைங்க? சும்மா பேச்சளரா இருந்திருக்கலாம்ல இவரு?”

“இந்தா பாருடா! நடந்தது நடந்துருச்சு. ஒரே ஒருபாடம்தான் நம்ம எடுத்துக்கனும்! நம்ம உங்க அப்பா மாதிரி நம்ம எதிர்காலத்தில் எதுவும் தப்பு செய்யாமல் இருப்போம். உனக்குத்தான் தெரியும் இது எந்த அளவுக்கு உன் குழந்தைகளை பாதிக்கும்னு! சரியா?”

“சரிங்க! வெளிய எம் ஜி ரோட் போவோமா?”

“நான் லாப் வரை போயிட்டு வரவா? ஒரு 10 நிமிஷம் வேலை இருக்கு”

“நானும் வர்றேன். அப்படியே அங்கேயியிருந்து போவோம்.”

No comments: