Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்! வீணாப்போன கார்த்தி!

முதல்ப்பாதியில் ரீமா சென், ஆண்ட்ரியா, கார்த்தியை வைத்து ஒரு சாப்ட் போர்ன் த்ரீசம் எடுக்க முயற்சி செய்துள்ளார் இந்த சைக்கோ ராகவன்! இல்லைனு சொன்னா அது பச்சைப் பொய்! இது முதல் பாதி. சரி, இரண்டாம் பாதி? ஒருமாதியான போர் அடிக்கும் காமசூத்ரா கான்சப்ட்தான்!

கார்த்தி ஒரு மாவீரனாக பருத்திவீரனில் அறிமுகமாகி இன்னும் நம் மனதில் நிற்கிறார். இன்று இந்த அரைகுறை ஜீனியஸ் செல்வாவின் படத்தில் இப்படி வீணாகிவிட்டார்! 36 கோடி செலவழித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில் பலியாக்கப் பட்டுள்ளார் கார்த்தி!

பிரம்மாண்டம்! இருக்கத்தான் செய்யுது. அதுக்காக? பிரம்மாண்டத்துக்காக பார்க்கனும்! இவர் போட்டிருக்க எஃபர்ட்க்காக பார்க்கனும் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு! அவன் ஆசையை தீர்க்க அவன் முயற்சிக்கிறான்? காசு கொடுத்து படம் பார்க்கிறவனுக்கும் ஆசை இருக்கு! ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வேணும் என்கிற ஆசை. இரண்டாவது பாகத்தில் பொறுமையை சோதித்து சோதித்து கொல்றாங்கப்பா! க்ளைமேக்ஸ்? அதில் ஒண்ணும் பெருசா இல்லை!

* பார்த்திபன்! என்னத்தைச் சொல்ல? He did not do ANYTHING impressive at all!

ஆதிகால கத்திச்சண்டை போடும் ஆதிவாசிகளை துப்பாக்கி பீரங்கி வைத்து கொல்வதில் பிரம்மாண்டம்! எதற்காக இந்த பிரம்மாண்டம்? மாடர்ன் டெக்னாலஜி கத்தியை வெல்வதை வீரபாண்டியகட்டப்பொம்மனிலேயே பார்த்தாச்சு! இதுக்காக ஒரு படமா?

படத்தில் காதலும் இல்லை, எந்த இரண்டுக் கேரக்டர்கள் இடையிலும் எந்த விதமான பிடிப்பும் இல்லை! நட்பும் இல்லை! அன்பும் இல்லை! இதயமே இல்லா மனித மிருக கேரக்டர்கள்தான் மிஞ்சுகிறது.

* Remo Sen acts like a real BITCH!

* Andrea's character is worthless as it has nothing like a loveable or likeable character!

எம் ஜி ஆர் நடிக்க பந்துளு இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு க்ளாசிக்! இன்றும் ரசிக்கலாம்.

ஆனால் இன்று, சைக்கோராகவன் இயக்கத்தில்வந்துள்ள ஆயிரத்தில் ஒருவன்? 36 கோடியை இப்படியும் வேஸ்ட் செய்யலாம் என்கிற ஒரு பாடம்.

இதில் சாதிச்சது ஒண்ணே ஒண்ணுதான். தன் சைக்கோத்தனமான ஆசையை 36 கோடியை செலவழித்து கார்த்தியை பலிகொடுத்து தீர்த்துக்கிட்டார்.
ஆயிரத்தில் ஒருவன் பெரிய அளவில் வெற்றிபெற சாண்ஸே இல்லை!

ஆயிரத்தில் ஒருவன் சாதித்தது? வேட்டைக்காரனுக்கு பாக்ஸ் ஆஃபிசில் மறுவாழ்வு கொடுத்தது!

பின்குறிப்பு: நண்பர் ஒருவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவது தப்பு. அதாவது பல விமர்சனங்களை தொகுத்து வழங்குவது வெட்டி வேலை என்கிறார். பொதுவா என் விமர்சனம் இப்படித்தான் இருக்கும் அதான் மற்றவர்கள் விமர்சனத்தை முதலில் தருவது. :)

23 comments:

Murali said...

after reading ur review i got a doubt..
Whether selva is psycho or you?

மணிகண்டன் said...

***
முதல்ப்பாதியில் ரீமா சென், ஆண்ட்ரியா, கார்த்தியை வைத்து ஒரு சாப்ட் போர்ன் த்ரீசம் எடுக்க முயற்சி செய்துள்ளார் இந்த சைக்கோ ராகவ
***

இல்லை என்பதை இல்லை என்று தானே சொல்லமுடியும் :)-

வருண் said...

***Murali said...
after reading ur review i got a doubt..
Whether selva is psycho or you?

18 January 2010 11:38 AM***

You still have doubt?

Why are you so indecsisive?

Get that treated! LOL!

வருண் said...

***மணிகண்டன் said...
***
முதல்ப்பாதியில் ரீமா சென், ஆண்ட்ரியா, கார்த்தியை வைத்து ஒரு சாப்ட் போர்ன் த்ரீசம் எடுக்க முயற்சி செய்துள்ளார் இந்த சைக்கோ ராகவ
***

இல்லை என்பதை இல்லை என்று தானே சொல்லமுடியும் :)-

18 January 2010 11:58 AM***

It is true he does not know "what is love" all about. I see what he is doing from the way he is potraying "love". Of course he can deny my accusations. :)

முகிலன் said...

தலைவா, அப்பிடியே நீங்க கடலை கார்னர்ல எழுதுறது போர்னோவா சாஃப்ட் போர்னோவான்னு சொல்லிட்டிங்கன்னா தெரிஞ்சிக்குவோம்.

வருண் said...

***முகிலன் said...
தலைவா, அப்பிடியே நீங்க கடலை கார்னர்ல எழுதுறது போர்னோவா சாஃப்ட் போர்னோவான்னு சொல்லிட்டிங்கன்னா தெரிஞ்சிக்குவோம்.

18 January 2010 6:56 PM***

Mukilan!

You are welcome to criticize as you have done now. Only a critic knows what is what, not the creator! Unfortunately in KC, I am only creator and YOU ARE THE CRITIC! :))

So, I am learning from your criticisms! :)

SurveySan said...

:)

maddy said...

எப்படி படம் எடுத்தாலும் அதை திட்டறதுக்கு என்று ஒரு குரூப் அதுல நீங்களும் ஒருத்தரோ...

பேநா மூடி said...

வருண் said...
It is true he does not know "what is love" all about. I see what he is doing from the way he is potraying "love". Of course he can deny my accusations. :)

உங்களுக்கு மட்டும் தெர்யுமா... மோசமான விமர்சனம்....

linelogesh said...

try to welcome new idea's other wise you will be treated like Villu, Vettaikaran for next 20 years

Karna said...

the same veerapandiya kattabomman fight is showed in Avatar..palla ilichukittu patheenga... common first half la evvlavo nalla visayam irukku 3some nu solreenga..appa neenga murali nadicha punitha kadal padama poi paarunga boss..

Vilvaraja Prashanthan said...

வித்தியாசமான முயற்ச்சிய வாழ்த்திட்டு போவியா .... அத விட்டுட்டு .. இங்க வந்து உளருர ...

அப்புறம் சொல்லுவானுகள் ஹாலிவுட்ட பாரு ஹாலிவுட்ட பாரு என்னா மாதிரி படம் வருது எண்டு ...

அவனா நீயி ????

மா.சதீஷ் குமார் said...

உங்கள் ப்ளாக் பிரபலம் ஆக நல்ல பதிவு போட்டு பிரபலம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு நல்ல படைப்பை திட்டி புகழ் சேர்காதிர்கள்...

இன்னும் நீங்கள் கிணற்று தவளையாக தான்....

வருண் said...

***SurveySan said...

:)

18 January 2010 7:16 PM**

வருகைக்கு நன்றி, சர்வேசன். உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

வருண் said...

***maddy said...

எப்படி படம் எடுத்தாலும் அதை திட்டறதுக்கு என்று ஒரு குரூப் அதுல நீங்களும் ஒருத்தரோ...

18 January 2010 8:14 PM***

தெரியலை, மேடி!

எனக்கு தோன்றியதை எழுதினேன்!

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேடி! :)

வருண் said...

***பேநா மூடி said...
வருண் said...
It is true he does not know "what is love" all about. I see what he is doing from the way he is potraying "love". Of course he can deny my accusations. :)

உங்களுக்கு மட்டும் தெர்யுமா... மோசமான விமர்சனம்....

18 January 2010 8:50 PM***

நீங்க என்ன சொல்லுங்க, பிரம்மாண்டம், எஃபர்ட்டுனு பாராட்டினாலும், ஓவெராலா படம் நல்லா வரலை என்பதுதான் உண்மை.

பொங்கல் வாழ்த்துக்கள் பேநா மூடி! :)

வருண் said...

*** linelogesh said...

try to welcome new idea's other wise you will be treated like Villu, Vettaikaran for next 20 years

18 January 2010 10:06 PM***

வேட்டைக்காரன், வில்லுக்கு எல்லாம் நான் நல்ல விமர்சனம் எழுதலைங்க!

அதைவிட வித்தியாசமா இருக்குனா நல்லா இருக்குனு சொல்லனுமா?

என்னால் முடியலை!

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,linelogesh! :)

வருண் said...

***Karna said...

the same veerapandiya kattabomman fight is showed in Avatar..palla ilichukittu patheenga... common first half la evvlavo nalla visayam irukku 3some nu solreenga..appa neenga murali nadicha punitha kadal padama poi paarunga boss..

18 January 2010 10:11 PM***

For you kind information, Karna, I have not seen Avatar but it is a commercially successful movie and it will beat த்itanic's record unlike I thought. It has earned 1.6 billion as of today.

I dont think AO will last long in theatres. Let us see!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள், கருணா!

வருண் said...

***Vilvaraja Prashanthan said...

வித்தியாசமான முயற்ச்சிய வாழ்த்திட்டு போவியா .... அத விட்டுட்டு .. இங்க வந்து உளருர ...

அப்புறம் சொல்லுவானுகள் ஹாலிவுட்ட பாரு ஹாலிவுட்ட பாரு என்னா மாதிரி படம் வருது எண்டு ...

அவனா நீயி ????***

சார், ரொம்ப கோவமா இருக்கீங்க போல. எனக்கு தோனியதை எழுதினேன். அவளோதான் சார்!

ஹாலிவுடை நான் எப்போ பார்க்கச்சொன்னேன். உங்க செல்வராகவந்தான் நெறையா பார்த்து அதை இறக்குமதி செய்ய முயன்றிருக்கிறார்.

எனிவே,

தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

வருண் said...

*** மா.சதீஷ் குமார் said...

உங்கள் ப்ளாக் பிரபலம் ஆக நல்ல பதிவு போட்டு பிரபலம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு நல்ல படைப்பை திட்டி புகழ் சேர்காதிர்கள்...

இன்னும் நீங்கள் கிணற்று தவளையாக தான்....

19 January 2010 12:14 AM***

இந்தப்பதிவுனால எல்லாம் எங்க ப்ளாக் பிரபலம் ஆகாது சதீஸ் சார். பலபேர் வருவதை வேணா நிறுத்துவாங்க!

எனக்கு மனதில் தோனியதை எழுதினேன். அவ்வளவுதான்!

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

RamaKarthik said...

Chellam... Kannaaa.... Rajaa.... Theriyama Click pannitaenma.... athan ulla vanthutaenma....
sorry...

வருண் said...

ரமா கார்த்திக்!

Take care! :)

கடும் விமர்சகர் வெங்குடு said...

என்னை பொறுத்தவரை இந்த படம் செல்வராகவனின் கொடூர குணத்தினை 32 கோடி ரூபாய் துணையுடன் பிரதிபலித்துள்ளது.
60 % காட்சிகளில் ஒரே ரத்த களரி. காரணம் கேட்டால் போரில் அப்படி நடப்பது இயல்பு என்பார்கள். இயல்பாகவே இருந்தாலும் இப்படி ஒரு காட்சியை பார்க்கும் ஒரு தடுமாறும் மனதுள்ள மனிதனுக்கு எப்படி ஒரு கொடூர எண்ணங்கள் ஏற்படும் என்பது அந்த முட்டா* இயக்குனருக்கு தெரியாதா? இதனை நிஜமாக குழந்தைகளுடன் சென்று சந்தோஷமாக பார்க்கமுடியும் எனில் அது ஒரு கொலையை பார்த்து ரசிப்பதற்கோ அல்லது ஒரு ஆபாச படத்தை பார்ப்பதற்கோ சமம். அதிலும் அந்த குண்டன் கல்லை வைத்து மக்களை கொல்லுவதில் தெரிகிறது இயக்குனரின் கீழ்த்தனமான குரூர சிந்தனை. மேலை நாடுகளில் உள்ளதை போல இங்கேயும் சைக்கோகளை உருவாக்குவது தான் இது போன்றவர்களின் நோக்கம் போலும்... யாரடி நீ மோகினி பார்த்து பாராட்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதே போன்று ஆயிரத்தில் ஒருவனை பார்த்து கொதித்த பலரில் நானும் ஒருவன்.... இது போன்ற சைக்கோ படங்களுக்கு மக்கள் ஒரு போதும் ஆதரவு அளிக்கவே கூடாது. இதை முழுவதும் விரும்பி ஒருவன் பார்ப்பான் எனில் அவனுக்குள் ஒரு சைக்கோ ஒளிந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும்....