செல்வராகவன் நெறைய பொருட்செலவில் இரண்டுவருடங்களாக எடுத்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப்படம் விழுந்தால் செல்வாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான். கார்த்திக்கும் இது இரண்டாவது படம். இவருடைய எதிர்காலமும் இந்தப்படம் நிர்ணயிக்கலாம். குசேலனில் அறிமுகமான ஜி வி ப்ரகாஷ் தான் இசையமைப்பாளர். பொதுவா செல்வா படத்தில் யுவன் தான் இசையமைப்பார். இது ஒரு மிகப்பெரிய மாற்றம்.
பல இடஞ்சலுக்குப்பிறகு பொங்கல் தினமான தமிழ்ப்புத்தாண்டுக்கு படத்தை எப்படியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க! எங்க ஊரில் படம் ரிலீஸ் ஆகலை!
சரி, ஆன்லைன் பத்திரிக்கை விமர்சனங்கள என்ன சொல்கிறதுனு பார்ப்போம்!
Rediff : 3 1/2 Stars! (+ve review)
Sify: Verdict: Engaging (+ve review)
Indiaglitz: Aayirathil Oruvan - Sweet and sour (+ve review as usual)
பத்திரிக்கை விமர்சகர்களுக்குப் படம் பிடிச்சி இருக்கு! செல்வராகவன், நிச்சயமாக ஏதோ புதுமையாக பழைமையைப் புகுத்தி இருக்கார் போல இருக்கு. இப்படி ஒரு ஆதிகாலத்து மன்னர்கள் சம்மந்தப்பட்ட கதையா இருக்கும்னு நானும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை! படம் பெரிய ஸ்க்ரீன்ல கட்டாயம் பார்க்கனும்போலதான் இருக்கு.
விமர்சனங்களைப் பார்க்கும்போது குழந்தைகளையும், நம்ம ஊர் பெண்களை படம் அவ்வளவாக் கவராதுனு தோனுது. அதனால ஒண்ணும் பெரிய நட்டம் இல்லை. அப்படியிருந்தும் படம் வெற்றியடைய வாய்ப்பு இருக்க்த்தான் செய்யுது.
பொதுவா ரெடிஃப் (Rediff) விமர்சனம் நல்லா இருந்தால் படம் நல்லாப் போகும்! அதனால் ஆயிரத்தில் ஒருவன் ஒரு வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்!
படம் வெற்றியடையுதோ இல்லையோ, வேட்டைக்காரன் கலக்சனை நிச்சயம் நிறுத்திவிடும் என்பது தெளிவா தெரியுது.
7 comments:
நல்லாருக்கு விமர்சனம்... வாழ்த்துக்கள்....
குசேலனில் அறிமுகமான ஜிவி ப்ரகாஷ்.........சரி பாருங்கள் நண்பரே
***அண்ணாமலையான் said...
நல்லாருக்கு விமர்சனம்... வாழ்த்துக்கள்....
14 January 2010 9:01 AM**
நன்றிங்க, அண்ணாமலையார்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!:)
***ஜாகிர் said...
குசேலனில் அறிமுகமான ஜிவி ப்ரகாஷ்.........சரி பாருங்கள் நண்பரே
14 January 2010 9:25 AM***
நன்றி, ஜாகிர்!
அவர் ரொம்பக்காலமா இருக்கார் போல இருக்கு :)))
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், ஜாகிர்!
படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..
ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..
சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..
கதை இது தான்..
கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..
யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..
அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..
எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?
முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..
பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..
நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..
மாயோன்!
மிகுந்த சிரத்தையுடன் எழுதிய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களுக்கு பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
g.v. prakash first movie : VEYIL
thanks.
Post a Comment