Monday, January 4, 2010

மறைந்த இதய நிபுணரின் இதயம், சிறுநீரகங்கள்!


இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ண கோபால் (வயது 40) மதுரையில் அவர் வீட்டில் நடந்த ஒரு விபத்தால், தலையில் பயங்கரமாக அடிபட்டு, கோமா ஸ்டேஜ்க்கு போய்விட்டதால், அவர் மனைவி ஜெயப்ரியாவின் ஒப்புதலுடன் அவர் இதயம் கே எம் செரியன் ஃபவுண்டேஷன் மூலம் இன்னொருவருக்கு வழங்கப்பட்டது. இவருடைய இரண்டு சிறுநீரங்களில் ஒன்றை மதுரை மீனாக்ஷி மிஷன் ஹாஸ்பிட்டலுக்கும், இன்னொன்று திருநெல்வேலி கேலக்ஷி ஹாஸ்பிட்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப்படிக்கும்போது, ஒரு பக்கத்தில் நம்நாடு ஒரு பக்கம் கெட்டொழிந்து போய்க்கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் இதுபோல் நல்ல காரியங்கள் சாதாரணமாக நடப்பதை கண்கூடகப் பார்க்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. மருத்துவத்தில் நாம் பெரிய விசயங்களை சாதிக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றும் உலலுறுப்புகள் தானம் செய்வதில் பல ரோல் மாடலாக உருவாகி இருக்கிறார்கள்- நடிகர் கமலஹாசனையும் சேர்த்து.

எனக்கு இந்தச் செய்தியில் நெருடும் விசயம் ஒண்ணே ஒண்ணுதான். மறைந்த டாக்டர் கிருஷ்ணகோபால், வீட்டில் (மாடியில் இருந்து? )விழுந்து அடிபட்டு இந்தக் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவர், கார் அல்லது பைக் ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு இப்படியாவதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் வீட்டில் இருக்கும்போது தடுக்கி விழுந்து அல்லது வழுக்கிவிழுந்து எப்படி அளவுக்கு தலையில் அடிபடும்? அதுவும் ஒரு 40 வயதில் உள்ள படித்த இளைஞருக்கு!

கிருஷ்ணகோபால் இரண்டு பாடங்கள் நமக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு போகிறார்.

* தன் இதயம், சிறுநீரகத்தைக்கொடுத்து மற்றவர்களை வாழவைத்தது, ஒன்று.

* இன்னொன்னு, என்னைப்போல் கவனக்குறைவாக இருந்து உங்கள் உயிரை இழந்து உங்கள் மனைவி, குழந்தைகளை இதுபோல் விட்டுவிட்டுப் போகாதீர்கள்! கவனமாக இருங்கள்! என்பது.

இந்த விபத்து பற்றி யாருக்காவது முழு விபரம் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன். அதாவது உண்மையிலேயே எப்படி இவர் விழுந்தார்? இந்த அளவுக்கு தலையில் எப்படி அடிபட்டது? ஒருவேளை, 24 மணி நேரமும் உழைத்து வேலை செய்து சரியான தூக்கமின்மையால் இந்த விபத்து நடந்ததா? எனக்குத்தெரிய நம்ம ஊரில் உள்ள டாக்டர்கள் ஒரு நாளைக்கு தூங்கும் நேரம் 5 மணி நேரம்தான். 365 நாளும் வேலை வேலைதான். இவருடைய "டெடிக்கேஷன்" தான் இவருக்கு எமனாகிவிட்டதா?

8 comments:

ராமலக்ஷ்மி said...

வருத்தத்துக்குரிய நிகழ்வு. அதேநேரம் அவர் குடும்பதார் எடுத்த முடிவுக்கு நம் வணக்கங்கள்.

வருண் said...

*** ராமலக்ஷ்மி said...

வருத்தத்துக்குரிய நிகழ்வு. அதேநேரம் அவர் குடும்பதார் எடுத்த முடிவுக்கு நம் வணக்கங்கள்.

5 January 2010 5:25 AM***

பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி!

Bruno said...

//மருத்துவத்தில் நாம் பெரிய விசயங்களை சாதிக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.//

மேலும் விபரங்களுக்கு

http://dmrhs.org/tnos/

Bruno said...

//ஆனால் வீட்டில் இருக்கும்போது தடுக்கி விழுந்து அல்லது வழுக்கிவிழுந்து எப்படி அளவுக்கு தலையில் அடிபடும்? அதுவும் ஒரு 40 வயதில் உள்ள படித்த இளைஞருக்கு!
//

மாடியில் இருந்து விழுந்தால் அடிபடும்

Bruno said...

http://www.dmrhs.org/tnos/faq-information-for-hospitals படித்துப்பாருங்கள்

ராமலக்ஷ்மி said...

//மாடியில் இருந்து விழுந்தால் அடிபடும்//

உண்மைதான். எனக்குத் தெரிந்த 3 பேர் அப்படித் தவறி விழுந்ததால் அடிபட்டு காலமாகியும் விட்டார்கள்.

வருண் said...

நன்றிங்க, டாக்டர் புருனோ, நான் நீங்க கொடுத்த அந்த தொடுப்பை வாசிக்கிறேன். :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//புருனோ Bruno said... மாடியில் இருந்து விழுந்தால் அடிபடும்//

உண்மைதான். எனக்குத் தெரிந்த 3 பேர் அப்படித் தவறி விழுந்ததால் அடிபட்டு காலமாகியும் விட்டார்கள்.***

பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி!