Friday, January 1, 2010

சாரு நிவேதிதா மில்லியனராக முடியும்!சமீபத்தில் சாரு எழுதிய ஒரு ஆர்ட்டிக்கிள்ல தன் புத்தகம் ரூ 1000 தான். நம்ம தமிழ் மக்கள் சினிமாவுக்கு செலவழிக்கும் இந்தச் சிறிய தொகையை வைத்து அருமையான என் புத்தகத்தை ஏன் வாங்கக்கூடாது? என்கிற ஆதங்கத்துடனும், தன் புத்தகம் 25,000 பிரதிகளாவது விற்கனும் அப்போதுதான் கெளரவமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் தொகை பல கோடிகள் என்பதை நினைவில் கொள்வோம். தமிழ் எழுத்தாளர் கோடீஸ்வர்னாவது என்பது பெரிய கஷ்டமெல்லாம் இல்லை. உதாரனமாக நம்ம டேன் ப்ரவ்ன் (Dan Brown) எழுதிய புத்தகங்கள் முதலில் ஒரு 10,000 பிரதிகள்தான் விற்றன. அவர் பெரிய ஆளாவாரானு அவருக்கே தெரியாது! அவருக்கு ப்ரேக் த்ரு வந்தது அவருடைய ட வின்சி கோட் (Da vinci code) நாவல்தான். உலகம் முழுவதும் இந்த நாவல் 80 மில்லியன் பிரதிகள் (பல மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்றவைகளும்) விற்று, உலகிலேயே அதிக பிரதிகள் விற்ற நாவல் என்கிற ஒரு ரெக்கார்ட் செய்தது!

ஒரு எழுத்தாளன், கோடீஸ்வரனாவது என்பது நம்ம ஊரில் நடக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. டா வின்சி கோட் வெற்றிபெறுமுன்னே டேன் ப்ரவ்ன் கனவுகூட கண்டிருக்க மாட்டார், அதுவும் 80 மில்லியன் பிரதிகள் அவர் புத்தகம் விற்குமென்று. இந்த வெற்றியால் இன்று அவருக்கு வருடவருமானம் 76 மில்லியன் டாலர்கள் ஆனது. முன்னால் 10,000 பிரதிகள் விற்ற புத்தகங்களும் மில்லியன் கணக்கில் விற்க ஆரம்பித்தது.

எழுத்து என்கிற ஆயுதம் ஒருவரை புகழ் உச்சிக்கும், பண மூட்டைகளை அள்ளித்தர முடியும். நம்ம மாரியோ பூஸோ (mario puzo) வுடைய காட்ஃபாதர் (The Godfather) நாவலும் 21 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்றது.

Just one good book is enough to take you to the TOP!

எழுத்து என்பது என் உயிர், ஆவி என்று சொல்வதைவிட “பணம்” என்பதும் உண்மை. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்கமுடியாதா? ஏன் முடியாது? உலகம் முழுவதும் தமிழர் ஜனத்தொகை என்ன? ஒரு தமிழ் நாவல் 10 லட்சம் பிரதிகள் ஏன் விற்கக்கூடாது?

தமிழ் நடிகர்கள், ரஜினிகாந்த், 4 மில்லியன் டாலர் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும்போது, தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்று கோடீஸ்வரனாக நிச்சயம் முடியும். நம்ம எழுத்தாளன் அதுக்கு என்ன செய்யனும்? உழைக்கனும். எழுத்தில் தமிழ் மக்கள் எல்லோரையும் கவரனும்! எல்லோரையும் கவரும்படி ஒரு நாவல் எழுதினால் போதும்!

ஒரு விசயம்! நம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டியது!

* டேன் ப்ரவ்னும் (Dan Brown) மைக்கேல் க்ரைக்டனும்( Michael Crichton) ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு யாருக்கு நெறைய கெட்ட வார்த்தை பேசத்தெரியுதுனு போட்டி போடுவதில்லை! தன் எழுத்தின்மூலம் உலகை கவர்ந்தார்கள்! அதனால்தான் அவர்கள் புத்தகம் 10 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்கின்றன.

* டேன் ப்ரவ்ன், ஷிட்னி ஷெல்டன் புக் 10 பிரதிதான் விற்கும் நாந்தான் பெரிய புடுங்கினு வாய் சவடாலும் விடுவதில்லை!

நம்ம எழுத்தாளர்கள்தான் சும்மா கெட்ட வார்த்தை பேசுவதில் தங்கள் திறமையை வீணடித்து பிச்சைக்காரனாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

நம்ம எழுத்தாளர்கள் என்ன செய்யனும்?

* They just have to use their brain in their imagination.

* They should shut their filthy mouth and work hard and wait for others to comment and praise them!

This is what professional tamizh writers need to do instead of fingering at each other and showing their filthy language skills to each other like a sore loser!

18 comments:

arumbavur said...

உடனே தமிழ் மக்களை குறை கூற வேண்டாம் மக்கள் வாங்கும் விலையில் புதகமும் நல்ல புரியம் படியான கருத்து .இருந்தால் மக்கள் வாங்குவார்கள் பத்திரிக்கை தொலைக்காட்சி திரைப்படத்திற்கு தரும் முக்கியதுவத்தை புத்தகத்திற்கு தந்தால் நல்ல மாற்றமாக இருக்கும்

துளசி கோபால் said...

உலகத்தமிழரை விடுங்க. இங்கே தமிழ் நாட்டில் 6 கோடி ஜனமாம். புத்தகம் ஒரு பதிப்பு என்பது வெறும் 1000. இந்த ஆயிரத்துலேயே விக்காமக்கிடப்பது ஏராளமாம்.

குறைஞ்ச பட்சம் ஒரு சதவீதம் தமிழ்மக்கள் ஒரு 'நல்ல' புத்தகத்தை
வாங்குனாவே எத்தனை பதிப்பு போடணுமுன்னு பாருங்க.

க.நா.சாந்தி லெக்ஷ்மணன் said...

ஏங்க எல்லாத்தையும் தமிழ்ல அழகா எழுதிட்டு கடசி முக்கியமானத மட்டும் இங்க்லீசுல எளுதிப்புட்டீக.எங்கள மாதிரி ஆளுகலுக்குப் புரியலையில்ல.உண்மையான அருமையான பதிவு.நல்ல புத்தகங்கள் நல்ல சமுதாதயத்தை உருவாக்குவது நமது படைப்பாளிகளுக்குப் புரியாதது நமது சாபம்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

வருண் said...

***arumbavur said...
உடனே தமிழ் மக்களை குறை கூற வேண்டாம் மக்கள் வாங்கும் விலையில் புதகமும் நல்ல புரியம் படியான கருத்து .இருந்தால் மக்கள் வாங்குவார்கள் பத்திரிக்கை தொலைக்காட்சி திரைப்படத்திற்கு தரும் முக்கியதுவத்தை புத்தகத்திற்கு தந்தால் நல்ல மாற்றமாக இருக்கும்

1 January 2010 5:41 PM***

வாங்க arumbavur!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் மக்களை எதுவும் சொல்லலைங்க. குமுதம், விகடன் எல்லாம் வாரம் 4 லட்சம் பிரதி விற்கும்போது. இதுபோல் நாவல்கள் வருடம் லட்சம் பிரதி விற்காதா? னு யோசித்தேன்.

வருண் said...

*** துளசி கோபால் said...
உலகத்தமிழரை விடுங்க. இங்கே தமிழ் நாட்டில் 6 கோடி ஜனமாம். புத்தகம் ஒரு பதிப்பு என்பது வெறும் 1000. இந்த ஆயிரத்துலேயே விக்காமக்கிடப்பது ஏராளமாம்.

குறைஞ்ச பட்சம் ஒரு சதவீதம் தமிழ்மக்கள் ஒரு 'நல்ல' புத்தகத்தை
வாங்குனாவே எத்தனை பதிப்பு போடணுமுன்னு பாருங்க.

1 January 2010 6:12 PM***

வாங்க டீச்சர்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஒரு பதிப்பு 1000 பிரதினு நீங்க சொல்லித்தான் தெரியும், டீச்சர்.

குமுதம், விகடன் எல்லாம் வாங்கிறாங்க இல்லயா டீச்சர்?

பொன்னியின் செல்வன் போன்ற கதைகள்கூட லட்சம் பிரதி விற்கவில்லைனா அதிசயம்தான்.

எந்த நாவல் எத்தனை பிரதி விற்றது என்கிற டேட்டா எங்கேயும் கெடைக்க மாட்டேன்கிறது டீச்சர். :(

வருண் said...

***க.நா.சாந்தி லெக்ஷ்மணன் said...
ஏங்க எல்லாத்தையும் தமிழ்ல அழகா எழுதிட்டு கடசி முக்கியமானத மட்டும் இங்க்லீசுல எளுதிப்புட்டீக.எங்கள மாதிரி ஆளுகலுக்குப் புரியலையில்ல.உண்மையான அருமையான பதிவு.நல்ல புத்தகங்கள் நல்ல சமுதாதயத்தை உருவாக்குவது நமது படைப்பாளிகளுக்குப் புரியாதது நமது சாபம்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.***

வாங்க சாந்தி லெட்சுமணன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

தமிழ்ல சொன்னதைத்தாங்க ஆங்கிலத்திலும் சொல்லி இருக்கேன். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் கவனம் சொலுத்தனும். சும்மா கெட்டவார்த்தையில் ஒருவரை ஒருவர் திட்டி திறமையைக் காட்டினால், பெருசா எதுவும் சாதிக்க முடியாதுங்கிற மாதிரி சொல்லி இருக்கேங்க :)

தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க!

நிலாரசிகன் said...

//ஒரு பதிப்பு 1000 பிரதினு நீங்க சொல்லித்தான் தெரியும், டீச்சர்.
//

ஒரு பதிப்பு ஆயிரம் பிரதி விற்றாலே பெரிய விஷயம். அதற்கு பயந்தே 500 பிரதிகள்தான் புத்தகம் போடுகிறார்கள். அதிலும் நூலக ஆணையை எதிர்பார்த்தே புத்தகங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.மேலும் கவிதை நூல்கள் எனில் காத தூரம் ஓடிவிடுகிறார்கள் பதிப்பாளர்கள்.அவர்கள் மீது தவறில்லை.கவிதை நூலுக்கு நூல ஆணை கிடைப்பது மிக அரிதான விஷயம் என்பதால்

//குமுதம், விகடன் எல்லாம் வாங்கிறாங்க இல்லயா டீச்சர்?
//

குமுதம் விகடனுக்கும் நாவலுக்கும் என்ன சம்பந்தம்?

பட்டாபட்டி.. said...

நச்-னு சொன்னீங்க..

பின்னோக்கி said...

எனக்கு தெரிஞ்சு பொ.செல்வன் குறைந்தது 10 பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கிறது. வெளிநாடு போல,இந்த புத்தகம் இவ்வளவு விற்றது என்ற தகவல்களை பதிப்பகத்தார் வெளியிடுவதில்லை. விற்கவில்லை என்றால் சொல்கிறார்கள். நிறைய படங்கள் வாய் வழி செய்தி வழியே விமர்சனம் வந்து நன்றாக ஓடுகிறது.

ஒரு புத்தகம் இவ்வளவு ஆயிரம் விற்றது என்று தகவல் வெளியிடுவது கூட அந்த புத்தகத்திற்கு இன்னும் விளம்பரம் தான்.

ஒரு வேளை வரி பிரச்சினை பயமா ? எனக்கு தெரியவில்லை.

ஒரே புத்தகம் ஒரு பதிப்பகத்தில் ரூபாய் 50, இன்னொரு பதிப்பகத்தில் ரூபாய் 200. பிரிண்ட் செய்யப்பட்ட காகித்தின் வித்தியாசம் இதற்கு காரணம்.

tamiluthayam said...

1000 ரூபாய் என்ன... அதுக்கு மேலயும் பணம் கொடுத்தும் வாங்கலாம். அதற்கான மதிப்பு அந்த புத்தகத்துக்கு இருக்கணும்

வருண் said...

*** நிலாரசிகன் said...
//ஒரு பதிப்பு 1000 பிரதினு நீங்க சொல்லித்தான் தெரியும், டீச்சர்.
//

ஒரு பதிப்பு ஆயிரம் பிரதி விற்றாலே பெரிய விஷயம். அதற்கு பயந்தே 500 பிரதிகள்தான் புத்தகம் போடுகிறார்கள். அதிலும் நூலக ஆணையை எதிர்பார்த்தே புத்தகங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.மேலும் கவிதை நூல்கள் எனில் காத தூரம் ஓடிவிடுகிறார்கள் பதிப்பாளர்கள்.அவர்கள் மீது தவறில்லை.கவிதை நூலுக்கு நூல ஆணை கிடைப்பது மிக அரிதான விஷயம் என்பதால்***

புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாரசிகன்! :)

விபரங்களுக்கு நன்றி :)

***//குமுதம், விகடன் எல்லாம் வாங்கிறாங்க இல்லயா டீச்சர்?
//

குமுதம் விகடனுக்கும் நாவலுக்கும் என்ன சம்பந்தம்?***

ஆப்பிலையும் ஆரஞ்சையும் கம்ப்பேர் பண்ணிட்டேனா? :)

வாரப்பத்திரிக்கை எல்லாம் லட்சக்கனக்கில் விற்கிறதே. நல்ல நாவல் ஏன் விற்காதுனு சொல்ல வந்தேன் :)

வருண் said...

***பட்டாபட்டி.. said...
நச்-னு சொன்னீங்க..

1 January 2010 10:12 PM***

பகிர்தலுக்கு நன்றிங்க, பட்டாபட்டி!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

வருண் said...

***பின்னோக்கி said...
எனக்கு தெரிஞ்சு பொ.செல்வன் குறைந்தது 10 பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கிறது. வெளிநாடு போல,இந்த புத்தகம் இவ்வளவு விற்றது என்ற தகவல்களை பதிப்பகத்தார் வெளியிடுவதில்லை. விற்கவில்லை என்றால் சொல்கிறார்கள். நிறைய படங்கள் வாய் வழி செய்தி வழியே விமர்சனம் வந்து நன்றாக ஓடுகிறது.

ஒரு புத்தகம் இவ்வளவு ஆயிரம் விற்றது என்று தகவல் வெளியிடுவது கூட அந்த புத்தகத்திற்கு இன்னும் விளம்பரம் தான்.

ஒரு வேளை வரி பிரச்சினை பயமா ? எனக்கு தெரியவில்லை.

ஒரே புத்தகம் ஒரு பதிப்பகத்தில் ரூபாய் 50, இன்னொரு பதிப்பகத்தில் ரூபாய் 200. பிரிண்ட் செய்யப்பட்ட காகித்தின் வித்தியாசம் இதற்கு காரணம்.

2 January 2010 12:57 AM***

புத்தாண்டு வாந்த்துக்கள், பின்னோக்கி!

நான் பொன்னியின் செல்வன் 13 வது பதிப்பும், அகிலனின் பாவை விளக்கு 15ம் பதிப்பும் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் ஒரு பதிப்பு 1000 பிரதிதான் என்றால், சுமார் 40-50 வருடங்களில் 15,000 பிரதிகள்தான் விற்றிருக்கின்றதென்றால் இது ஒண்ணும் பெரிய சாதனையா தோனலைங்க.

என்ன காரணம்னு தெரியலை, புத்தகங்கள் சேல்ஸ் டீட்டெயில் எங்கேயும் கிடைக்கவில்லை. விக்கிலகூட எத்தனை பிரதி விற்றதென்கிற டேட்டா இல்லை!

பகிர்தலுக்கு நன்றிங்க, பின்னோக்கி :)

வருண் said...

***tamiluthayam said...
1000 ரூபாய் என்ன... அதுக்கு மேலயும் பணம் கொடுத்தும் வாங்கலாம். அதற்கான மதிப்பு அந்த புத்தகத்துக்கு இருக்கணும்

2 January 2010 9:52 AM***

புத்தாண்டு வாழ்த்துக்கள் tamiluthayam!

பொதுவாக ஆண்கள் மற்றும் இளவயதில் உள்ளவர்கள்தான் சாரு கதையை படிப்பார்கள்னு நினைக்கிறேன்.

ரமணிசந்திரன் போன்ற எழுத்தாளர்கள்தான் பெண்களை கவருகிறார்கள்!

கால்கரி சிவா said...

தமிழர்கள் தமிழ் புத்தகங்களை விட ஆங்கிலப் புத்தகங்களையே (சாரு உட்பட) படிக்கிறார்கள்.
வெளிநாட்டில் விமானப்பயணம் பஸ் பயணங்களை புத்தகங்களைப் படிக்கிறார்கள் தமிழர்கள் சினிமா பார்க்கிறார்கள்.
தமிழர்கள் வீட்டில் சீரியல் பார்த்து கருணாநிதிக் குடும்பத்தினரை மேலும் பணக்காரர் ஆக்குகிறார்கள்.

தமிழ் எழுத்தாளான் பணக்காரன் ஆக வேண்டுமென்றால் தமிழன் புத்தகம் படிக்கவேண்டும். அது இப்போதைக்கு நடக்காது

Meriaza said...

Who is Charu Nivedita????

வருண் said...

***கால்கரி சிவா said...

3 January 2010 6:22 PM***

புத்தகம் படிப்பவர்களைவிட சினிமா பார்ப்பவர்கள் எல்லா நாட்டிலும் அதிகம்தாங்க!

இந்தக்காலத்தில் நம்ம மக்கள் டிவி பார்த்தே வாழக்கையை கற்றுக் கொள்கிறார்களோ என்னவோ.:)))

பகிர்தலுக்கு நன்றிங்க, கால்கரி சிவா!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வருண் said...

"Meriaza said...

Who is Charu Nivedita????

4 January 2010 8:08 AM"

You need to "google" sir/madam! LOL!

Happy New Year! :)