Saturday, January 16, 2010

குட்டி எப்படிங்க இருக்கு? சுமார்தான்!



தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுத்த தனுஷ், இப்போ "குட்டி"யா வந்து இருக்கார். திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி மோஹினி, படிக்காதவன் போன்ற படங்கள் அளவுக்கு குட்டி வெற்றிபெறச் சாண்ஸே இல்லைனு சொல்றாங்க. படம் பெரிய டப்பானு யாரும் சொல்லல. ஆனால் ஒண்ணும் பெருசாவும் படத்தைப் பத்தி எதுவும் சொல்லல.

ஆயிரத்தில் ஒருவனுக்கு எல்லாவகையிலும் எதிரப்பதம்தான் குட்டி போல இருக்கு.

ஆயிரத்தில் ஒருவன்: குடும்பத்துடன் (குழந்தைகளுடன்) பார்க்க முடியாதாம். ரீமாசென் ரொம்ப தாராளமாம்.

குட்டி: ஸ்ரேயா இழுத்து போத்திக்கொண்டு வர்ராராம். குடும்பத்தோட பார்க்கலாமாம்.

ஆயிரத்தில் ஒருவன்: 36 கோடி பட்ஜெட் படம். விழுந்தா பெரிய அடி.

குட்டி: சின்ன பட்ஜெட் படம்தான். விழுந்தாலும் குட்டியா ஒரு காயத்தோட சமாளிக்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன், மிகப்பெரிய ஓப்பனிங். குட்டி ரொம்ப அமைதியான ஓப்பனிங்!

சரி, நம்ம வலையுலக விமர்சகர்கள் குட்டிப் பத்தி என்ன சொல்றாங்கனு பார்ப்போம்!

Rediff : ஒரு ரெண்டரை ஸ்டாரைக் கொடுத்து.ஜாலியான படம்னு சொல்றாங்க!

sify : அழகான பொழுது போக்குப்படம்னு சொல்றாங்க.

Indiaglitz: ரொம்ப பெருசா ஒண்ணும் இல்லை. குட்டிதான் னு சொல்றாங்க.

இதுல வேடிக்கை என்னனா, எப்போவும் நல்ல விமர்சனம் மட்டுமே எழுதும் இண்டியா க்லிட்ஸ் ரொம்ப க்ரிட்டிகல்லா விமர்சனம் எழுதுறாங்க. இவங்க விமர்சனம்தான் இந்த மூனுல ரொம்ப க்ரிட்டிக்கல்லா இருக்கு. திருந்தீட்டாங்களா?

சரி, ஓவரால்லா குட்டி சுமார்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை! கலக்சன் எப்படி இருக்குனு பார்ப்போம்.

2 comments:

தேவன் மாயம் said...

குட்டி சுமார்தான்!! சும்மா பார்க்கலாம்!!

வருண் said...

வாங்க, தேவன் மாயம்! பொங்கல் மற்ரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!