Tuesday, January 26, 2010
பாலா பெற்ற தேசிய விருதும், அறிவுரைகளும்!
நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனர் தேசிய விருது பெற்றுள்ளார் பாலா. மனமார்ந்த பாராட்டுக்கள்! அந்த தேசிய விருதை தன் குரு பாலு மஹேந்திராவுக்கும் அவருடைய திருமதிக்கும் சமர்ப்பித்துள்ளார். இது பாலாவின் இரண்டாவது தேசிய விருது- சிறந்த இயக்குனருக்கான!
* பாலா, நான் கடவுளுக்காக தன்னுடன் கடின உழைப்பு உழைத்த நடிகர் நடிகைகளுக்கு தேசிய விருது கிடைக்காததற்காக மிகவும் வருந்தியுள்ளார். முக்கியமா, பூஜாவுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போல இருக்கு.
* இனிமேல் "இருட்டு ஏரியா"வுக்கு போகக்கூடாது என்று இளையராஜாவும், குரு பாலு மஹேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியுள்ளார்கள். அதனால் இனிமேல் அது போன்ற படங்களை இயக்க மாட்டேன் என்கிறார் பாலா!
தற்போது பாலா, "அவன் இவன்" என்கிற ஒரு படத்தை, ஆர்யா, விஷாலை வைத்து இயக்கி வருகிறார். இவர் சொல்வதைப்போல் சத்தியத்தை காப்பாற்றுவதாயிருந்தால் இது வழக்கமான சீரியஸ்படமாக இல்லாமல் க்ளீன் எண்டர்டெயினரா அமையும்போல் தோனுது.
That is going to be a BIG Challenge for him!
Do you guys know why he has been advised not to do such movies any more by IR and BM? (:o) )
Labels:
அனுபவம்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment