Monday, January 11, 2010

ஜக்குபாய், கமல், ரஜினி, அமீர்!


ஜக்குபாய் படம் வெளிய வருமுன்னே சி டி வந்துருச்சாம். என்ன கொடுமை இது? இதல்லாம் நம்ம மக்கள்ட்ட சாதாரண விசயம்தான். நம்ம டெக்னாலஜில ஜப்பான், அமெரிக்காவோட எல்லாம் போட்டி போடுவதில்லை! இப்படித்தான் காப்பி ரைட்ஸ் திருட்டுத்தனம் செய்து வேகமாக முன்னேறுகிறோம். இது மிகப்பெரிய தவறான செயல் என்றாலும், இதை நம்ம தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே சீரியஸா எடுத்துக்கிறது இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை!

மனிதர்கள் மிகவும் காம்ப்லெக்ஸ் பர்சனாலிட்டிகள். விலங்குகள்க்கு எல்லாம் சாப்பாடு, செக்ஸ் இருந்தால் போதும். புகழ் தேவையில்லை! பணம தேவையில்லை! போர்ன் தேவையில்லை! அடுத்தவர்களை கவிழ்த்தித் தன் பிழைப்பை ஓட்டுவதில்லை! பாலிட்டிக்ஸ் பண்ணத் தெரியாது! விலங்குகள் ரேப் பண்ணுவதில்லை! மனிதந்தான் மிகவும் கீழ்த்தரமானவன். அதனால்தானோ என்னவோ நமக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

உங்களுக்கு அறிவுரை பிடிக்குமா? பிடிக்காதா?

இப்போ ஒருவர் அறிவுரை சொல்றாருனு வச்சுக்குவோம்! நம்ம ஆளு பொதுவா அறிவுரை என்னனு பார்ப்பதைவிட யார் சொல்றானுதான் பார்ப்பார்கள்!

ஜக்குபாய் விசய்த்தில் கமல், ரஜினி, ராதிகா எல்லோரும் ஒரே புலம்பல். 15 கோடி வரை செலவழிச்சு இருக்கோம்! என்ன அநியாயம் இது? என்று அழுகிறார் ராதிகா.
ஆனால் உண்மையில் நடிகர், நடிகைகள் புலம்புவதைப் பார்த்து எவனும் கவலைப்படுவதில்லை. என்ன கோடி கோடியா சம்பாரிக்கிறவர்கள் புலம்புவதை எல்லாம் யார் கேட்பார்கள்?

இப்போ ஜக்குபாய் பிரச்சினையில் கமல் சொல்றாரு, இந்த திருட்டு வி சி டியை கறுப்புப்பணமா எண்ணி மக்கள் புறக்கணிக்கனுமாம்! மக்கள் இதை எதிர்க்கனுமாம்!

உலகத்திலேயே நமக்கு ரொம்ப ஈஸியா கிடைக்கிற ஒண்ணு, அறிவுரைகள்! தன் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலைனா ஒரு சிலருக்கு தூக்கம் வராது. ஆனால், பொதுவாக ஒரு சிலரைத்தவிர பலருக்கு அட்வைஸ் கேக்கிறதுனா கசப்பு மருந்து சாப்பிடுவதுபோல! இதில் அடங்குபவர்கள் சிறுவர்கள், பதின்ம வயதில் உள்ளவர்கள், அனுபவமில்லாதவர்கள் மட்டுமல்ல! பல பெரிய மனிதர்களும் அடங்குவார்கள். ஏன் நீங்களும் ஒருவராக இருக்க நெறையவே வாய்ப்பிருக்கு!

ஆமா, கமலு, நீங்க ஹாலிவுட் கதையை திருடாதீங்கனு நாங்க சொன்னா இவர் கேப்பாராக்கும்? என்கிறார் கமலைப் பிடிக்காத ஒருவர்.

கறுப்புப்பணமாம்! காப்பி ரைட்டாம்! இவர்களுக்கு காப்பி ரைட்ஸ்க்கு அர்த்தம் தெரியுமா? நடிகர்கள்ட்ட இல்லாத கறுப்புப் பணமா? என்கிறார் இன்னொருவர். என்னவோ இவர் சம்பாரிக்கிற ஒவ்வொரு பைசாவுக்கும் இன்கம் டேக்ஸ் கட்டுவதுபோல பேசுறார் என்கிறார் இன்னொருவர்.

ரஜினி சொல்றார், இப்படியே நிலைமை போச்சுனா, நான் கண்டக்டரா போக வேண்டியதுதான். போக முடியுமா? ஏன் இவர் கண்டக்டரா திரும்பி போனால்தான் என்ன? உலகம் சுத்துவது நின்னுடுமா என்ன? என்கிறார் ரஜினியைப்பிடிக்காத இன்னொருவர்.

ஒரே அட்வைஸை ரெண்டு பேர் செய்தாலும், ஒருவர் சொன்னால் அதை எடுத்துக்குவாங்க! அதே மேட்டரை இன்னொருவர் சொல்லியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க! ஏன் இது? யார் சொன்னா என்ன? என்ன விசயம்? அது நல்லதா, கெட்டதானு பகுத்தறிஞ்சு ஏற்றுக்கொளவதுதானே திறந்து மனதுள்ள ஒருவரின் புத்திசாலித்தனம்! திறந்த மனதெல்லாம் பொதுவா நம்மில் பலரிடம் கிடையாது. பகுத்தறிவதெல்லாம் சும்மா பகுத்தறிவுவாதி பட்டம் பெறுவதற்காக சும்மா சொல்லிக்கொளவதுதான்! நான் என்கிற அகம்பாவம் நம்முள் மறைந்து இருப்பதை ஒருசில கணங்களில்தான் பார்க்கமுடியும். அது யாராவது அட்வைஸ் பண்ணும்போதுதான் விளங்கும்!

மக்கள் எல்லாம் திருந்தப்போவதில்லை! சட்டம் ஒழுங்கை அமல்ப்படுத்தி, 1 லட்சம் முதல் கோடி வரை அபதாரம் என்று சட்டம் கொண்டு வந்து, ஒரு 10 பேரைப் பிடிச்சு உலகறிய உள்ளே தூக்கிப்போட்டால், காப்பி ரைட்னா என்னனு தெரியும். கதைத் திருட்டு, திருட்டு வி சி டி எல்லாம் ஒழியும்! ஆனா அந்த பத்து பேர்ல, திருட்டு வி சி டி விக்கிறவன் மட்டுமல்ல, க்ரேஸி மோஹன், கமல், கே எஸ் ரவிக்குமார், அமீர் போன்றவர்களும் உண்டு!

7 comments:

லதானந்த் said...

பதிண்ம வயதுனா என்னங்க?

சுடுதண்ணி said...

//பதிண்ம வயதுனா என்னங்க?//

கிட்டத்தட்ட உங்க ஏஜ் குரூப் தான் :).

ராஜ நடராஜன் said...

நேற்று ஜக்குபாய் நகல் கண்ணுல பட்டது.இருந்தும் வாங்கும் ஆர்வம் இல்லை.அசலுக்கு உத்தரவாதம் செஞ்சுட்டு அப்புறம் நகல் வாங்கலாமா?வேண்டாமான்னு விவாதத்தை வைத்துக் கொள்ளலாமே!

வருண் said...

***லதானந்த் said...
பதிண்ம வயதுனா என்னங்க?

12 January 2010 2:58 AM**

லதானந்த் சார்!

அது பதின்மவயதுனு சொல்ல வர்றீங்களா? :)

அதை சரி செய்துவிடுகிறேன். நன்றி:)

வருண் said...

***சுடுதண்ணி said...
//பதிண்ம வயதுனா என்னங்க?//

கிட்டத்தட்ட உங்க ஏஜ் குரூப் தான் :).

12 January 2010 3:18 AM***

வாங்க சுடுதண்ணி! :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***ராஜ நடராஜன் said...
நேற்று ஜக்குபாய் நகல் கண்ணுல பட்டது.இருந்தும் வாங்கும் ஆர்வம் இல்லை.அசலுக்கு உத்தரவாதம் செஞ்சுட்டு அப்புறம் நகல் வாங்கலாமா?வேண்டாமான்னு விவாதத்தை வைத்துக் கொள்ளலாமே!

12 January 2010 3:41 AM***

இன்னும் ரி-ரிக்கார்டிங்கே முடியலைனு சொல்றாங்க. இவங்க ப்ராப்பர்ட்டியை இவங்க ஒழுங்கா ப்ரட்டெக்ட் பண்ணனும்ங்க. வீட்டை திறந்துபோட்டால் கடவுள் கூட உள்ள நுழைந்து திருடிட்டு போயிடுவார். நம்மதான் வீட்டை பூட்டி வைச்சு நம்ம ப்ராப்பர்ட்டியை காப்பாத்தனும்.