Tuesday, January 26, 2010

ஆயிரத்தில் ஒருவனும் தமிழ் சினிமாவின் எதிரிகளும்!

உலகநாயகன் கமலஹாசனுக்கு அடுத்து தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போகும், ஒரு மிகப்பெரிய கலைஞன்தான் நம்ம செல்வராகவனாம்! யார் சொன்னா? உலக சினிமா/ஹாலிவுட் சினிமா தரத்தை எல்லாம் அறிந்த பல பெரிய மேதைகள் சொன்னது. அதனால? அதனால தமிழ் மக்களான நீங்க என்ன செய்யனும்னா பணத்தைக்கொட்டி தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்க இல்லை ஹாலிவுட் சினிமாவாக்க முயற்சிக்கும் செல்வராகவருடைய கலைவெறியை நீங்க பாராட்டியே ஆகனும்! அதை விட்டுப்புட்டு காசைக்கொடுத்துப்படத்தை பார்த்துப்புட்டு படம்பிடிக்காமல் எவனாவது விமர்சனம் என்கிற பேரில் செல்வராகவருடைய "அரைகுறை அப்ரோச்சை" அல்லது படத்துல திரைக்கதை ஓட்டத்தில் ஓட்டைவிட்டதை கேலியோ, விமர்சனமோ செய்தால் அவன் ஒரு தமிழ் சினிமா வளர்ச்சியை தடுக்கும் துரோகி! ரசனை இல்லாதவன்! திங்கிற சோத்துல மண்ணள்ளிப் போடுறவன் என்கிறது சில பதிவுலக கண்மணிகள்!

படம் பிடிக்கலைனு சொன்னா, "ஆமா ஹாலிவுட் படம்னா "ஆ" னு பார்ப்பீங்க! நம்ம தமிழ் ஜீனியஸ் செல்வராகவர்னா இப்படித்தான் சொல்வீங்க" என்கிறார்கள்.

செல்வராகவர் யார் திங்கிற சோத்துலயும் மண்ணள்ளிப்போடல! அவர் தரமான படைப்புடன் வந்தால் அவர் படைப்பை நிச்சயம் பாராட்டத்தான் செய்வார்கள். நம்ம கெவின் காஸ்டனரும்தான் பல நூறுகோடி செலவழித்து "வாட்டர் வார்ல்ட்"னு ஒரு குப்பையோட வந்தார். விமர்சகர்கள் அவரை சும்மா விடலையே!

உண்மையிலேயே ஹாலிவுட் படத்தை ஆ னு பார்க்கிறது, அதில் முழுநேர ரிசேர்ச் செய்வது கமலஹாசனும் செல்வராகவ்னும்தான்! இவர்கள்தான் ஹாலிவுட படங்கள் டி வி டி களை எல்லாம் வாங்கி, பார்த்து தங்கள் க்ரியேட்டிவிட்டியை வளர்க்கிறார்கள்! இவர்கள் க்ரியேட்டிவிட்டியே ஹாலிவுட் படங்களை பார்த்து வருவதுதான்!

ஆமா, நம்ம க்ரீயேட்டர்கள் ஹாலிவுட் படத்தைப் பார்த்து அதேபோல் சரக்கை இறக்குமதி செய்தால் அது தமிழ்த் தொண்டு! அதே படத்தை ஒரு சராசரி ரசிகன் பார்த்து வியந்தாவோ, ரசித்தாவோ அது தமிழின துரோகம்!

உண்மை என்னனா பி அண்ட் சி செண்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து மக்கள் குழம்பி நிற்கிறார்கள். ஏன்னா அங்கே வாழும் தமிழ் மக்கள் நம்ம கமல், செல்வராகவன் அளவுக்கு ஹாலிவுட் படங்களெல்லாம் பார்ப்பதில்லை! இந்தப்படத்தைப் பார்த்துட்டு அவங்க ஒரேயடியா மண்டைகாஞ்சி போய் என்ன சொல்ல வர்ராரு இவரு? ஏன் நம்ம ஹீரோ, பருத்திவீரன் சண்டியர், இப்படி திராபையா அலைகிறார்னு ஒண்ணுமே புரியலை அவர்களுக்கு. இதில் வரலாறும் சரியில்லை! இதில் வரும் ஃபேண்டசியும், பேய்களும் கொள்ளிவாய் பிசாசுகளும் புரியாத புதிர்!
நான் சொல்லுவது ஒரு சராசரி ரசிகனை! கலையை ரசிக்கவே பிறந்த ஜீனியஸ்களையல்ல! பொழுது போக்குக்காக படம் பார்க்கிறவன், சில படங்களுக்குப்போய் அந்த 2- 3 மணி நேரப் பொழுதைப்போக்கிறதுக்கு கஷ்டப்படுகிறான். எரிச்சல் வராதா அவனுக்கு?

ஆமா செல்வராகவன் எப்படி திடீர்னு ஒரு பெரிய மாபெரும் கலைஞரானார்னு தெரியலை.

* இவர் எடுத்த 7G ரெயின்போ காலணி, காதலை கொச்சைப்படுத்தி அரைவேக்காடுகளை மெண்டலாக்கிய படம்!

* அடுத்து இவர் எடுத்த புதுப்பேட்டை! ஸ்கார் ஃபேஸ்னு ஒரு அல் பச்சினோ படம் வந்தது. அதை எத்தனை தர செல்வராகவன் பார்த்தாரோ தெரியலை! அதன் விளைவுதான் புதுப்பேட்டை! பொதுவா கேங்ஸ்டர் இட்டாலியன் மாஃபியால உள்ளவன் கூட தன் க்ரூப்ல உள்ள சகாக்களின் ஃபேமிலியிலே மட்டும் கை வைக்க மாட்டான். கொலைகாரன் கொள்ளைக்காரனுக்கும் ஒரு சில மாரல்ஸ் உண்டு என்பதை வலியுறுத்தி இருப்பார்கள், இட்டாலியன் மாஃபியா பற்றி எடுக்கும் படங்களில்! ஆனால் நம்ம செல்வாவின் ஸ்கார் ஃபேஸை தழுவிய புதுப்பேட்டையில் அந்த தனுஷ் ரோல் இருக்கே! யப்பா! அந்தப்படம் தமிழனை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போச்சா இல்லை புதைகுழில தள்ளுச்சானு தெரியலை!

* ஆனால் இன்று வந்த ஆயிரத்தில் ஒருவனில் திடீர்னு செல்வராகவன் தமிழ் தியாகியாகிவிட்டார். ஏன் னா அவர் கொட்டிய 36 கோடி, 100 கோடி அள்ள அல்ல! அவர் கலைவெறியை தீர்த்துக்க அல்ல! தமிழ் சினிமாவை ஹாலிவுட் லெவெலுக்கு எடுத்துப்போக இவர் செய்கிற தியாகமாம்! இதெப்படி இருக்கு?

தமிழ் கலாச்சாரத்தில் உருவான 16 வயதினிலே, பருத்திவீரன், கருத்தம்மா எல்லாம் தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போகலையா என்ன? ஹாலிவுட் சினிமால ரிசேர்ச் பண்ணி, அவர்களை தழுவுறவன்தான் பெரிய கலைஞனா?

சரி, என்ன வேணா பண்ணிக்கோப்பா! கடைசில படம் ஒரு நல்ல ஷேப்ல வரனும். வரலைனா இப்படித்தான் விமர்சனம் வரும்! படம் பிடிக்காதவன் திட்டத்தான் செய்வான்.

ஆ ஒ பற்றி சில விசயங்கள் அப்டேட்!

* சமீபத்தில் வந்த விகடன் விமர்சனத்தில் ஆ ஒ வாங்கிய மதிப்பெண்கள வெறும் 42 மட்டுமே! உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. ஏன்னா தாண்டியது அரைக்கிணறு!

* ஹிந்து விமர்சனத்தில் கார்த்தி வீணாப்போயிட்டார்னு சொல்லப்பட்டுள்ளது! அதுவும் ரொம்ப சுமாரான விமர்சனமதான். திரைக்கதை, முடிவு,ப்ளாட் சரியில்லை என்பதுபோல எழுதப்பட்டிருக்கிறது.

* சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல இதுவரை 2 கோடி வசூல் செய்துள்ளது ஆ ஒ. இன்னும் இது நல்ல ஓப்பெனிங்கோட எஃபக்ட்தான். இன்னும் இரண்டுவாரத்தில் தெரியும் படம் ஹிட்டா இல்லையான்ன்னு!

இன்னொரு விசயம்!

* பதிவுலகில் வரும் விமர்சங்களால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இன்றுவரை சாத்தியமல்ல! ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை 200-500 இருக்கும் அவ்வளவுதான். இதில் பலர் இவன் என்ன எழவைச்சொல்றான்னு பார்ப்போம்னு சும்மா வாசிக்கிறவங்க! உங்க ஒப்பீனியனை சுத்தமாக மதிக்காதவர்கள்!

11 comments:

Kumky said...

உண்மையான ஆதங்கம்..

பழூர் கார்த்தி said...

good views..

//ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை 200-500 இருக்கும் அவ்வளவுதான். இதில் பலர் இவன் என்ன எழவைச்சொல்றான்னு பார்ப்போம்னு சும்மா வாசிக்கிறவங்க! உங்க ஒப்பீனியனை சுத்தமாக மதிக்காதவர்கள்//

:-)))))

Selvakumar said...

உங்களுடைய தொடர்ந்த பதிவுகள் சொல்வது என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவனால் எல்லாரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள்தான். உங்கள் வெறுப்பிற்கு பின்னர் ரீமா சென்னைப் போ :)


Your continuous posts indicate that you are disturbed and moved toooooooooooooooooooooooooooo much.... and you could not take it as just a movie....! Hope you might have a flashback for your vengeance like reema sen. :)

thiyaa said...

பாவம் நீங்கள் ......................

Unknown said...

தல, ஒரு படைப்பாளியின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்யுங்க, அந்த படைப்பாளிய இல்லை. அப்பிடி செஞ்சா அது தரமான விமர்சனமும் இல்லை.

வருண் said...

***Blogger கும்க்கி said...

உண்மையான ஆதங்கம்..

26 January 2010 7:44 AM***

நன்றி, கும்க்கி! :)

வருண் said...

***பழூர் கார்த்தி said...

good views..

//ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை 200-500 இருக்கும் அவ்வளவுதான். இதில் பலர் இவன் என்ன எழவைச்சொல்றான்னு பார்ப்போம்னு சும்மா வாசிக்கிறவங்க! உங்க ஒப்பீனியனை சுத்தமாக மதிக்காதவர்கள்//

:-)))))

26 January 2010 8:26 AM**

நன்றி, கார்த்தி! :)

வருண் said...

***செல்வா said...

உங்களுடைய தொடர்ந்த பதிவுகள் சொல்வது என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவனால் எல்லாரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள்தான். உங்கள் வெறுப்பிற்கு பின்னர் ரீமா சென்னைப் போ :)


Your continuous posts indicate that you are disturbed and moved toooooooooooooooooooooooooooo much.... and you could not take it as just a movie....! Hope you might have a flashback for your vengeance like reema sen. :)

26 January 2010 8:37 AM***

அப்படிங்கிறீங்களா, செல்வா? :-)))

வருண் said...

***தியாவின் பேனா said...

பாவம் நீங்கள் ......................

26 January 2010 9:44 AM**8

நம்ம எல்லோருமே "சின்னர்ஸ்"தான் தியாவின் பேனா! :)))

வருண் said...

***முகிலன் said...

தல, ஒரு படைப்பாளியின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்யுங்க, அந்த படைப்பாளிய இல்லை. அப்பிடி செஞ்சா அது தரமான விமர்சனமும் இல்லை.
26 January 2010 10:52 AM ****

அதாவது தல, நீங்க என்ன சொல்றீங்கனா, one can comment on கடலை கார்னர் but not on வருண்! LOL!

அது ரொம்ப கஷ்டம்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை 200-500 இருக்கும் அவ்வளவுதான்//


நூறு பேர் எழுதிய விமர்சனங்களையும் மொத்தம் இரண்டாயிரத்திருந்து ஐயாயிரம் பேர் வரை மட்டுமே வாசிப்பார்கள்