Tuesday, January 19, 2010

சாருவை ஓவர்டேக் செய்த கேபிள் சங்கர்!

பதிவர் கேபிள் சங்கர் அவர்களின் சினிமாப் பதிவுகள் மற்றும் நிதர்சனக்கதைகள் எழுதுவதை பார்த்து இருக்கேன். ஆனால் பதிவுலகில் அவர் பெரிய ஆள் என்பது என் சிறிய அறிவுக்குத் தெரியாது. கோலிவுட்ல ஏதோ படம் எடுக்க முயற்சிக்கிறார்னு அவர் ப்ரஃபைல்ல படிச்சு இருக்கேன். ஆனால் எனக்குப் போதுமான நேரமின்மையால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்ததில்லை. அவர் வலைதளத்தை தொடர்வதும் இல்லை.

சமீபத்தில் நான் கவனித்தது என்னவென்றால் அலெக்ஷா ட்ராஃபிக் ரிப்போர்ட் அவர் வலைதளத்திலும், சாரு ஆண்லைன்லயும் ஒழுங்காக அப்டேட் செய்யப்படுகிறது.

என்னுடைய ஆச்சர்யம் என்னனா வலைதள பிரபல எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் சாருவின் வலைதலத்தின் ட்ராஃபிக்கைவிட, ஜெயமோஹனின் வலைதளத்தைவிட கேபிள் சங்கருடைய வலைதள ட்ராஃபிக் அதிகமாக உள்ளதாக காட்டப்படுகிறது.

charuonline.com

Traffic Rank
82596

Jeyamohan.in

Traffic Rank
79532

cablesankar.blogspot.com

Traffic Rank
73265


To my little brain, Cable sankar looks like a down-to-earth kind of a guy. May be charu and jeyamohan are also that kind? I dont know much about them. Sankar does not seem to have any big ego or whatsoever as far as I can see. He let others comment on his posts freely. When I find his blog's Alexa rating is higher than well-reputed charuonline and jeyamohan.in, I felt WOW!!!!

பின்குறிப்பு: என்னுடைய முயற்சி, கேபிள் சங்கரை பாராட்டவே ஒழிய, சாருவையோ, ஜெயமோஹனையோ இறக்க அல்ல!

30 comments:

Cable சங்கர் said...

என்னையும் கவனித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே..

சி. சரவணகார்த்திகேயன் said...

It's not an absolute rating..
It is based on the usage patterns of Alexa Toolbar users only (not all the website users - only if your browser has alexa tool bar installed, the hit is counted)..
And most of the general uses don't have alexa tool bar installed in their browsers..
So, the impression is higher alexa rank doesn't mean that high high rate (it only means the high hit rate among the persons who installed alexa tool in their browser)

http://www.alexa.com/help/traffic-learn-more

Bruno said...

சி. சரவணகார்த்திகேயன் சார்

நீங்க சொல்வது சரிதான்
ஆனால்

நீங்க என்ன சொல்ல வர்றீங்க
அது தான் புரியல

சி. சரவணகார்த்திகேயன் said...

புருனோ Bruno சார்..

அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருப்பவர்களிடையேயான ரேட்டிங் தான் ரேங்க் என்பது (மொத்த பேரில் அது ஒரு 5 முதல் 10 சதவிகிதம் வரை இருக்கக்கூடும்).. உலக முழுக்க இருக்கும் ஒட்டு மொத்த இணையதள‌ பயன்பாட்டாளர்களிடையேயான செல்வாக்கைக் குறிப்பதல்ல என்பதைத் தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

அதாவது மொத்தம் 100 பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 10 பேர் மட்டுமே அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். நூறில் மொத்தம் 80 பேர் உங்களின் தளத்தைப் பார்க்கிறார்கள்; அவற்றில் ஒருவர் மட்டுமே அலெக்ஸா கருவியை தன் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார் என‌க் கொள்வோம். என்னுடைய தளத்தையோ 20 பேர் தான் பார்க்கிறார்கள்; ஆனால் அதில் 8 பேர் அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம்.

இந்தக் கணக்கில் அடிப்படையில், இப்போது வெறும் 20 பேர் பார்க்கும் எனது தளத்தின் அலெக்ஸா ரேங்க் 80 பேர் பார்க்கும் உங்கள் தளத்தை விட அதிகமாக (அதாவது முன்ன‌ணியில்) இருக்கும். இது தான் நான் பிரஸ்தாபிக்க நினைத்தது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//(it only means the high hit rate among the persons who installed alexa tool in their browser)//


//என்னுடைய முயற்சி, கேபிள் சங்கரை பாராட்டவே //

ஆகா கேபிள் சங்கர் முண்ணனியில்தான் இருக்கிறார் என்பதை வழிமொழிகிறீர்கள் என்றே சொல்லுங்கள்

சங்கர் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

எந்த முன்னணி தல?

Bruno said...

//இந்தக் கணக்கில் அடிப்படையில், இப்போது வெறும் 20 பேர் பார்க்கும் எனது தளத்தின் அலெக்ஸா ரேங்க் 80 பேர் பார்க்கும் உங்கள் தளத்தை விட அதிகமாக (அதாவது முன்ன‌ணியில்) இருக்கும்.//

இது முதலிலேயே புரிந்தது !!

இதில் எந்த பிரச்சனையிம் கிடையாது

--


//அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருப்பவர்களிடையேயான ரேட்டிங் தான் ரேங்க் என்பது (மொத்த பேரில் அது ஒரு 5 முதல் 10 சதவிகிதம் வரை இருக்கக்கூடும்).. உலக முழுக்க இருக்கும் ஒட்டு மொத்த இணையதள‌ பயன்பாட்டாளர்களிடையேயான செல்வாக்கைக் குறிப்பதல்ல என்பதைத் தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.
//

இதுவும் புரிகிறது

இங்கும் பிரச்சனை கிடையாது

--

//அதாவது மொத்தம் 100 பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 10 பேர் மட்டுமே அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். நூறில் மொத்தம் 80 பேர் உங்களின் தளத்தைப் பார்க்கிறார்கள்; அவற்றில் ஒருவர் மட்டுமே அலெக்ஸா கருவியை தன் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார் என‌க் கொள்வோம். என்னுடைய தளத்தையோ 20 பேர் தான் பார்க்கிறார்கள்; ஆனால் அதில் 8 பேர் அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம்.//

அதாவது அலெக்சா கருவிப்பட்டை வைத்திருப்பவர்களின் டெமொகிராபி வேறு

வைத்திருக்காதவர்களின் டெமொகிராபி வேறு

--

உதாரணமா தமிழக அரசின் பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தளத்தை பார்ப்பவர்கள் வேறு இவர்களில் பலரிடம் அலெக்சா இருக்காது (உதாரணத்திற்காக)

அமெரிக்க விசா தளத்தை பார்பவர்கள் வேறு. இவர்களில் பலர் அலெக்சா வைத்திருப்பார்கள் (உதாரணத்திற்காக)

எனவே

அமெரிக்க விசா தளம் தமிழக அரசின் முடிவுகள் இணையதளத்தை விட அதிகம் பாப்புலர் என்று அலெக்சா சொன்னால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது

அப்படித்தானே

இது வரை சரி

ஆனால் கேபிள், சாரு, ஜெமோ ஆகியோரை படிப்பவர்கள் ஒரே டெமொகிராபியா வேறு டெமொகிராபியா ???

எனக்கு தெரிந்த வரை ஒரே டெமொகிராபி தான்

எனவே

நீங்க என்ன சொல்ல வர்றீங்க
அது தான் புரியல

:) :)

Unknown said...

Varun you are wrong.

Check sankar website on alexa. http://www.alexa.com/siteinfo/cablesankar.blogspot.com#trafficstats

it has more than 8% nigerian visits for an tamil blog. it is really impossible. I guess he may use automated hit robots. Automated hit robots normally gives Nigerian hits only.

Then check Charu, Jeyamohan sites. You cannot see nigeria kind of hits. I hope its genuine.

Ashok D said...

நைஜிரியன்சும் படிக்கறாங்களா... ஹிஹிஹி படம் பாக்கறாங்களோ என்னமோ..

சி. சரவணகார்த்திகேயன் said...

ஜெமோ, சாரு ஆகியோரைப் படிப்பவர்களும், கேபிள் சங்கரைப் படிப்பவர்களும் கிட்டதட்ட ஒன்றாக இருக்கும் என்கிற அனுமானம் தர்க்கப்படி ஓர‌ளவுக்கு சரியானதே..

ஆனால் முழுக்க அதையே உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இல்லாமல் இருக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஜெமோ, சாருவின் வாசகர்கள் கணிசமானோர் பதிவர் வட்டமல்லாத பொது வாசகராக இருக்கும் சாத்தியமுண்டு.. அதே போல் சங்கரின் வாசகர்கள் பெரும்பான்மையானோர் ப‌திவர்களாகவும், அவருக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்க நிறைய வாய்ப்புண்டு.

இந்த அடிப்படையில் பார்த்தால், கேபிள் மற்றும் சாரு ஜெமோவின் பொது வாசகர்களில் அலெக்ஸா வைத்திருப்பவர்கள் இந்த ரேங்கை தீர்மானிப்பதில்லை. இதைத் தவிர்த்த அந்த வேறுபடும் கூட்டத்தில் அலெக்ஸா வைத்திருப்பவர்கள் தான் ரேங்க்கைத் தீர்மானிக்கிறார்கள். அத்தகையவர்கள் சங்கருக்கு சாரு ஜெமோவை விட அதிகம் இருக்கிறார்கள் என்பது மட்டுமே இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் (சாருவை விட ஜெமோ தான் எனக்குப் பிடிக்கும் என்ற போதிலும்), சாருவை விட ஜெமோ முன்னணி அலெக்ஸா ரேங்க் வைத்திருக்கிறார் என்பதே முதல் ஆச்சரியம் (அதாவது சாருவின் வாசகர் எண்ணிகையை விட ஜெமோவினுடையது அதிகம் என்பது ஒத்து வரவில்லை). சங்கரின் ரேங்க் இவர்கள் இருவரையும் விட அதிகம் என்ற இரண்டாவது ஆச்சரியம், மேற்குறிப்பிட்ட இந்த முதல் ஆச்சரியத்தில் அடங்கிப் போகிறது.

இங்கே நான் சங்கர் மற்றும் சாரு, ஜெமோவின் பதிவுகளின் தரத்தை எவ்விததிலும் ஒப்பிடவில்லை. வாசகர் எண்ணிக்கை தான் இங்கு விவாதப் பொருள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சமீப காலத்தில் சாரு இணையத்தில் குறைவாகவும் ஜெமோ அதிகமாகவும் எழுதுகிறார். அதனால் (தற்போது) ஜெமோவிற்கு அதிகப்படியான ரேங்கிக் இருக்கலாம். நான் எப்போதோ ஒரு சமயம் பார்க்கும்போது சாரு ரேங்கிக் ஐம்பதாயிரத்தைவிட குறைவாக இருந்தது.

கேபிள் சங்கர் அதிகமாக இருக்குமென்றே நினைக்கிறேன். அதற்குத் தமிழ்மணம், தமிலிஷ் போன்ற திரட்டிளும், தொடர்ச்சியான சினிமா விமர்சனங்களும் காரணமாயிருக்கலாம்.

Minimus said...

visit the daily page hits of all

cablesankar.blogspot.com

http://www.websiteoutlook.com/www.cablesankar.blogspot.com

Charu

http://www.websiteoutlook.com/www.charuonline.com

jeyamohan

http://www.websiteoutlook.com/www.jeyamohan.in

ரோஸ்விக் said...

Cable Sankar is the down to earth person. Really he is a nice person to have the friendship.

I Wish him to achieve his ambittion.

வருண் said...

***Cable Sankar said...

என்னையும் கவனித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே..
19 January 2010 9:17 PM ***

You are most welcome, Mr. Sankar! :)

காலம் கடந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

வருண் said...

சி.சரவண கார்த்திகேயன் மற்றும் டாக்டர் புருனோ!

உங்கள் விவாதத்தை வாசித்து சில விசயங்களை புரிந்து கொண்டேன்.

I am learning little more details. However, I think it is true Cable Sankar's blog gets lost of attention if he write movie reviews! That is what we see here.

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

//(it only means the high hit rate among the persons who installed alexa tool in their browser)//


//என்னுடைய முயற்சி, கேபிள் சங்கரை பாராட்டவே //

ஆகா கேபிள் சங்கர் முண்ணனியில்தான் இருக்கிறார் என்பதை வழிமொழிகிறீர்கள் என்றே சொல்லுங்கள்

20 January 2010 1:27 AM***

வாங்க சுரேஷ்!

அவருடைய ரிவியூ நெறையப்பேர் வாசிக்கிறாங்க என்பது மறுக்கமுடியாத உண்மைதான் சுரேஷ்!

வருண் said...

***Blogger சங்கர் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

எந்த முன்னணி தல?

20 January 2010 1:47 AM***

வாங்க சங்கர்! :)

வருண் said...

sayanthan said...
***Varun you are wrong.

Check sankar website on alexa. http://www.alexa.com/siteinfo/cablesankar.blogspot.com#trafficstats

it has more than 8% nigerian visits for an tamil blog. it is really impossible. I guess he may use automated hit robots. Automated hit robots normally gives Nigerian hits only.

Then check Charu, Jeyamohan sites. You cannot see nigeria kind of hits. I hope its genuine.

20 January 2010 2:24 AM***

Sayanathan,

I have seen nigerian visitors even for charuonline sometime ago but not now.

Anyway, thanks for educating me!

வருண் said...

***Blogger D.R.Ashok said...

நைஜிரியன்சும் படிக்கறாங்களா... ஹிஹிஹி படம் பாக்கறாங்களோ என்னமோ..

20 January 2010 2:39 AM***

I have seen other well-known bloggers getting nigerian visitors, Mr. Ashok!

Happy pongal and NY to you! :)

வருண் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சமீப காலத்தில் சாரு இணையத்தில் குறைவாகவும் ஜெமோ அதிகமாகவும் எழுதுகிறார். அதனால் (தற்போது) ஜெமோவிற்கு அதிகப்படியான ரேங்கிக் இருக்கலாம். நான் எப்போதோ ஒரு சமயம் பார்க்கும்போது சாரு ரேங்கிக் ஐம்பதாயிரத்தைவிட குறைவாக இருந்தது.

கேபிள் சங்கர் அதிகமாக இருக்குமென்றே நினைக்கிறேன். அதற்குத் தமிழ்மணம், தமிலிஷ் போன்ற திரட்டிளும், தொடர்ச்சியான சினிமா விமர்சனங்களும் காரணமாயிருக்கலாம்.

20 January 2010 3:05 AM**

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, சுந்தர்! :)

வருண் said...

திர்வாளர்கள் சி. சரவண் கார்திகேயன் & டாக்டர் புருனோ, சுந்தர், சயந்தன், அஷோக், மினிமஸ்!

காலம்கடந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

வருண் said...

*** Minimus said...

visit the daily page hits of all

cablesankar.blogspot.com

http://www.websiteoutlook.com/www.cablesankar.blogspot.com

Charu

http://www.websiteoutlook.com/www.charuonline.com

jeyamohan

http://www.websiteoutlook.com/www.jeyamohan.in

20 January 2010 4:43 AM***

நன்றி, மினிமஸ்!

வருண் said...

**ரோஸ்விக் said...

Cable Sankar is the down to earth person. Really he is a nice person to have the friendship.

I Wish him to achieve his ambittion.

20 January 2010 6:08 AM***

So do I, Rosevick! :)

வருண் said...

காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் ரோஸ்விக்! :)

Prosaic said...

Magnanimous post dude. :)

And congrats to Cable sankar.

Alexa is a statistics just like TRP rating or Opinon polls. If someone is rated high in such a statistical rating, we should note here that alexa is one of the most popular statistics in internet world, it should be congratulated. People who are trying to question the authenticity of the hits like quoting nigeria visitors or reasoning that writing about movies made Cable sankar popular, are simply showing their narrow mindedness. When the author has clearly mentioned that his objective is just recognize this acheivement and congratulate him, whats the need for all these things?

வருண் said...

*** Prosaic said...
Magnanimous post dude. :)

And congrats to Cable sankar.***

Thanks, Prosaic! :)

பனித்துளி சங்கர் said...

இங்கு எதையும் சொல்லி இந்த தளத்தின் அழகை கெடுக்க விரும்ப வில்லை . இங்கு எனது மவுனம் மட்டுமே .இதற்கு சரியான பதிலாக அமையும் என்று நம்புகிறேன் .

வருண் said...

***வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

இங்கு எதையும் சொல்லி இந்த தளத்தின் அழகை கெடுக்க விரும்ப வில்லை . இங்கு எனது மவுனம் மட்டுமே .இதற்கு சரியான பதிலாக அமையும் என்று நம்புகிறேன் .

26 January 2010 3:31 AM***

Just take it easy! :)))

butterfly Surya said...

கேபிள் என் இனிய நண்பர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே.

தல.. கலக்குங்க..

பதிவுலகின் சூப்பர் ஸ்டார் கேபிளுக்கு ஜே..

butterfly Surya said...

பகிர்விற்கும் நன்றி வருண்.