Friday, January 29, 2010

கோவா (A) - விமர்சனங்கள்!


வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் புது மாதிரியாக ஒரு முயற்சி செய்து சென்னை-28, சரோஜா என்று ரெண்டு வெற்றிப்படங்களுடன் வந்தார். இந்தக்காலத்து பசங்களுக்கு ஏற்றார்போல படம் எடுப்பவர் இவர்னு சொல்லலாம். முதல் இரண்டு படங்களில் வெற்றிபெற்ற இவர், மூனாவது ஒரு படம், புதுமையான ஒரு "ப்ளாட்" டோட வந்து இருக்கிறார்போல இருக்கு. இசை: யுவன் சங்கர் ராஜா. இந்தக்காலத்துப் பசங்க மனதைக்கவர்ந்தால் இவர் வெற்றி பெறுவார்.

சரி கோவா எப்படி இருக்குனு வலையுலக விமர்சகர்கள் சொல்றாங்கனு பார்ப்போம். விமர்சனங்களில் இருந்து கிடைத்த விசயங்கள் சில.

* அடல்ட்ஸ் ஒன்லி சான்றிதழ் சந்தேகமே இல்லாமல் கொடுக்கப்படவேண்டிய படம்தான் இதுனு தெளிவாக சொல்கிறார்கள் ஒவ்வொரு விமர்சகரும். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை!

* பொதுவாக கதை எல்லாத்தையும் நம்ம விமர்சகர்கள் சொல்லிடுவாங்க இல்லையா?. கதையை சொல்லாமல் விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும் நம்ம மக்கள் முன்னேறவில்லை. நல்லவேளை இந்தப்படத்தில் பெருசா எதுவும் கதையே இல்லையாம், அதனால விமர்சகர்களால் கதையை சொல்ல முடியலை பாவம்!

* மூனு கிராமத்து வெடலப் பசங்க, கோவாவுக்கு போயி, அங்கே உள்ள அரைகுறை வெஸ்டர்ன் கல்ச்சரை பார்த்து அதில் விழுந்து, உருள்வதுதான் படமாம்.

இண்டியா க்ளிட்ஸ் விமர்சனம் பரவாயில்லை!

Sify விமர்சனம் ரொம்ப நெகடிவ்வா இருக்கு!

Rediff விமர்சனம் நல்லாவே இருக்கு! (***)

பொதுவாக Rediff விமர்சனம் நல்லாயிருந்தால் படம் கமர்சியல்லா நல்லாப் போகும் என்பது என்னுடைய அனுபவம். "கோவா" முடிவும் நம்ம இந்தக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கு. அவர்கள் ரசனைக்கேற்ப தீணி போட்டிருந்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கு.

No comments: