Friday, January 8, 2010

மர்மயோகி மறுதயாரிப்புப் பற்றி வதந்தி!


கமலுடைய மர்மயோகி கைவிடப்பட்டு, ப்ரமிட் சாய்மீராவும் கமலும் அடித்துக்கொண்டு உருண்டது உலகமறியும். ஒருவரை ஒருவர் குறைசொல்லி கோர்ட், கேஸ் அது இதுனு போய் ஒரு மாதிரியா இந்தப்பிரச்சினை முடிகிற நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கமல், மர்மயோகி நின்றதால் மனந்தளராமல் தன்னுடைய உன்னைப்போல் ஒருவனை முடித்து, வெளியிட்டு அதை வெற்றிப்படமாக ஆக்கிவிட்டு, தற்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகும் தன் அடுத்த படத்தில் சீரியஸாக இன்வால்வ ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு தற்போதைக்கு "யாவரும் கேளிர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தப்பெயர் இல்லைனு கமல் சொன்னதாகவும் சொல்றாங்க.

சன் நெட்வொர்க் எந்திரனை தயாரித்த ஐங்கரனிடம் இருந்து வாங்கி, ஒருவழியாகத் தயாரித்து முடித்து அதை வெளியிட ரெடியாகிவிட்டார்கள். சப்போஸ் எந்திரன் பெரிய வெற்றியடைந்து, யாவரும் கேளிரும் பெரிய வெற்றியைத் தந்தால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெஹா பட்ஜெட்ப் படமான மர்மயோகியை சன் நெட்வொர்க் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பலர்.

இங்கே நாம் சில விசயங்களை கவனிக்கனும்.

* முதலில் கமல்-சன் நெட் வொர்க் ரிலேஷன்ஷிப் எந்தவிதமான முறிவும் ஏற்படாமல் நல்லாப்போகனும்!

* இரண்டாவது பெரிய பட்ஜெட் படமான எந்திரன் பெரிய வெற்றியடையனும்.

இது இரண்டும் நடக்கனும். அப்படி நடந்தால், மர்மயோகிக்கு மறு வாழ்வு கொடுக்குமாம் சன் நெட்வொர்க்! இதெல்லாம் சும்மா புருடாவா இல்லை உண்மைச் செய்தியா என்பதை காலம்தான் சொல்லனும்!

2 comments:

Rajaraman said...

அஹில உலக காப்பி மேதை கமலிடம் அடுத்து மொட்டை அடித்து கொள்ள போவது சன் நிர்வாகமா.. ஐயோ பாவம்.

வருண் said...

தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, ராஜாராமன். :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)