Thursday, January 7, 2010

எந்திரன் விநியோக உரிமை பெற்றுள்ள நடிகர் விக்ரம்!


ஷங்கர்-ரஜினி-ஏ ஆர் ரகுமான்- ஐஸ்வர்யா ராய் என்கிற மிகப்பெரிய கூட்டணியுடன் எந்திரன் வெளிவருகிறது. இதுபோல் மிகப்பெரிய கூட்டணியுடன் வரும் தமிழ்ப்படம் அனேகமாக இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். கமலுடைய மர்மயோகி, மருதநாயகம் போன்ற படங்கள் வருவதுபோல தெரியலை.

எந்திரன் படம், 90% முடிந்துவிட்டதாக ஷங்கர் சொல்கிறார். அவருடைய தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதிலிருந்து ஓரளவுக்கு படத்தை முடித்துவிட்டு கமர்ஸியலைஷாசன்க்கு தயாராகிவிட்டார் என்பது உறுதி.

தோழர் கிரி அழகான பல ஸ்டில்களை வெளியிட்டு தாந்தான் #1 ரஜினி விசிறி என்பதுபோல் மிரட்டிவிட்டார்!

என் எஸ் சி ஏரியா எந்திரன் விநியோக உரிமை, நடிகர் விக்ரம் பெற்றுள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது. விக்ரம் இதுபோல் டிஸ்ட்ரிப்யூஷன் பிஸினெஸ்ல இறங்கிட்டாரா? ரஜினி தன் சொந்தப்படங்களுக்கு தன் சம்பளப்பணமாக என் எஸ் சி ஏரியா டிஸ்ட்ரிப்யூஷன் எடுப்பதுண்டு. ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் எந்திரன் டிஸ்ட்ரிப்யூஷன் என்பது சுமாரான சூதாட்டம்தான். எனிவே ஆஸ் த பெஸ்ட் டு விக்ரம்!

திருத்தம்: மன்னிக்கவும் இது நடிகர் விக்ரம் இல்லையாம். விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவாம்!

அமெரிக்காவின் விநியோக உரிமையும் ஒருவர் ஏற்கனவே வாங்கிவிட்டார் என்கிறார்கள். யு கே உரிமை ஐங்கரனுக்கு நிச்சயம் போகும்போல் உள்ளது. அமெரிக்கா, யு கே யை பொருத்தவரையில் ரிஸ்க் கொஞ்சம் கம்மிதான். ஓபெனிங் வீக் எண்ட் நல்லாப்போனாலே போதும்!

சன் தயாரிப்பில் உருவான மிகப்பெரிய மெஹா பட்ஜெட் படம் எந்திரன் தான். சிவாஜி, ரிலீஸ் ஆன போது, ஒரு 6 வாரங்களுக்கு எந்தப்படமுமே ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் சன் மீடியா அதை த்யாரிக்கவோ, டிஸ்ட்ரிப்யூட் பண்னவோ இல்லை! இப்போ எந்திரன் வெளியாகும்போது என்ன என்ன கூத்து நடக்கப்போகுதோ தெரியவில்லை! அநேகமாக இந்த முறை வேறு பெரிய ஸ்டார் படங்கள் போட்டிபோடும்னு நம்புவோம்!

3 comments:

வருண் said...

மறுபடியும் ஒரு சின்ன தப்பு நடந்துவிட்டது.

இங்கே சொல்லப்பட்டது நம்ம சீயான் விக்ரம் அல்லவாம், விக்ரம் கிருஷ்ணா. விஷாலுடைய அண்ணன். ஷ்ரேயா ரெட்டியின் கணவர்.

கிரி said...

வருண் இது வதந்தியாகத்தான் இருக்கும்..அதற்குள் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.. காரணம் நாள் நெருங்க விளையும் அதிகமாகும்.

தொடுப்புக்கு நன்றி :-)

வருண் said...

***கிரி said...

வருண் இது வதந்தியாகத்தான் இருக்கும்..அதற்குள் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.. காரணம் நாள் நெருங்க விளையும் அதிகமாகும்.

தொடுப்புக்கு நன்றி :-)***

வாங்க, கிரி!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

யு எஸ் டிஸ்ட்ரிப்யூஷன் ரைட்ஸை அல்ரெடி ஒரு ஆள் வாங்கிவிட்டதாக அடித்துச் சொல்றாங்க கிரி. என் எஸ் ஸி பற்றி உண்மை தெரியலை :)