"ஹலோ ராஜ்! எப்படி இருக்கீங்க? "
"மாதவனா? எப்படிப்பா இருக்க?"
"நல்லா இருக்கேன் ராஜ். உங்களோட பேசி ரொம்ப வருசமாச்சு. நல்லவேளை உங்க செல் # என்னிடம் இருந்தது."
"ஆமா வருசக்கணக்கா ஆயிடுச்சு இல்லயா மாதவா?"
"நான் கேன்ஸஸ் சிட்டி வரேன், ராஜ். உங்களை கட்டாயம் பார்க்கனும். ஃபேமியெல்லாம் எப்படி இருக்கு? பொண்ணுங்க, பிரேமா ஆண்ட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?"
"இங்கே எப்போ வர்ற, மாதவா?"
"இந்த வீக் எண்ட், ராஜ். சாட்டர்டே உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். அதே அட்ரெஸ்லதானே இருக்கீங்க, ராஜ்?"
"இல்ல மாதவா, நான் இப்போ வேற இடத்தில் இருக்கேன். நான் மட்டும் தனியாக ஒரு ஒன் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்ல."
"அப்படியா!"
"ஆமா. சரி, அட்ரெஸ் எழுதிக்கோ. பழைய அட்ரெஸ்ல ப்ரேமாவும், குழந்தைகளும் இருக்காங்க!"
"என்ன ஆச்சு, ராஜ்! எதுவும்..?"
"இல்லை, டைவோர்ஸ் எல்லாம் ஒண்ணும் ஆகல. வர வர ரொம்ப ஒத்துப்போகலை, அதான் தனியா வந்துட்டேன். இங்கே நீ வந்ததும் அதைப்பத்தி பேசலாம். சரியா?"
"சரி ராஜ். நான் சாட்டர்டே ஈவெனிங் வர்ரேன்"
"நான் ஏர்போர்ட் வந்து "பிக் அப்" பண்ணனுமா, மாதவா?"
"இல்லை, ராஜ், நான் கார் ரெண்ட் பண்ணுறேன். என்னைடம் ஜி பி எஸ் இல்லை. கூகிள் மேப்ல டைரக்ஷன்ஸ் எடுத்து நேரா உங்க அப்பார்ட்மெண்ட்க்கு வரேன். சண்டே ஈவெனிங் புறப்பட்டுப்போயிடுவேன்."
"சரி, பார்க்கலாம், மாதவா."
*******************
"வா மாதவா! எப்படி இருந்தது ஃப்ளைட்?"
"எல்லாம் அஸ் ஸ்கெடுல்ட். எந்த பிரச்சினையும் இல்லை, ராஜ்!"
"டின்னர்க்கு இங்கே புதுசா ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். உட்காரு இங்கே"
"என்ன ஆச்சு, ராஜ்? என்ன நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?"
"என்ன ஆச்சா? என் வயதில்தான் உனக்கு குடும்பப் பிரச்சினை எல்லாம் புரியும். நீ அடுத்த மாதம் கல்யாணம் பண்ணப்போறவன். வாழ்க்கையில் ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா இருக்க. உன்னிடம் என் கதையை சொல்லி பயமுறுத்த வேணாம். என்ன சொல்ற?' ராஜ் சிரித்தார்.
"சும்மா சொல்லுங்க ராஜ்!"
"பிரேமாவோட எதைப்பத்தி பேசுனாலும் பிரச்சினை வருது, மாதவா. எல்லாம் போச்சு. ஒருத்தரை ஒருத்தர் சுத்தமாக பிடிக்கலைனு தெரிஞ்சபிறகும் எதுக்கு நாடகம்னுதான்.. "
"உங்க மேரேஜ் லவ் மேரேஜ்தானே, ராஜ்?"
"நல்ல லவ் மேரேஜ் போ. அது எந்தக்காலத்தில அது ? அதே லவ் இன்னும் இருக்குமா என்ன? அதுவும் நம்ம ஊரில் பண்ற லவ் மேரேஜ் பத்தி உனக்குத் தெரியாதா? அதெல்லாம் ஒருமாதிரி இண்பாச்சுவேஷன் தான்ப்பா."
"உங்க மூத்த பொண்ணு, கிரிஜா, என்ன பண்றா? பயங்கர ஃப்ரைட் ஸ்டூடெண்ட் ஆச்சே அவள்?'
"அவளுக்கு 22 வயசாயிருச்சு இப்போ! பெரிய மனுஷி யாகிட்டா. நல்லாதான் படிச்சா. ஆனால் மெடிக்கல், இஞ்னியரிங்லாம் வெறும் "போரா"ம். நான் இங்லிஷ் மேஜர் எடுக்கிறேன்னு எடுத்தாள். இப்போ ஏதோ அடிஷனல் எடுக்கேஷன் டிக்ரீ வேணும்னு ஏதோ படிச்சுக்கிட்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறா. இவளைவிட சுமாராப் படிச்சவ எல்லாம் இப்போ மெடிக்கல் ஸ்கூல்ல இருக்காங்க! இவ இப்படி இருக்கா!"
"ஏன் ராஜ், சயண்ஸ், மெடிக்கல் ஃபீல்ட்ல எல்லாம் இண்டெரெஸ்ட் இல்லையா?"
"அவ எல்லாத்திலயும் "ஏ" தான் வாங்கினாள். நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் ஸ்டூடண்ட். சயண்ஸ்ல ரொம்ப இண்டெரெஸ்ட் இல்லைங்கிறா, ஆனாலும் சயண்ஸ்லயும் ஏ க்ரேட்தான் வாங்கினாள். பிஸினெஸ் ரிலேட்டடா எதுவும் பிடிக்கலையாம். இங்லிஷ் டீச்சராகப்போராளாம்!"
"ஏன் மெடிக்கல் பிடிக்கலையாம்?"
"அவ என்ன சொல்றா தெரியுமா? நான் வாழ்நாள் பூராம் "சிக் பேஷண்ட்"ஸை பார்க்க இஷ்டமில்லையாம். எந்நேரமும் உயிரோட போராடிக்கொண்டு இருக்கவங்களை பார்க்க இஷ்டமில்லையாம். இதெல்லாம் ஒரு ப்ரஃபஷனா? எல்லோரும் பொதுவா காசுக்காகத்தான் டாக்டர் ஆகிறாங்கனு சொல்றா. உண்மையான டெடிக்கேஷன் இருக்கனுமாம், டாக்டராக! மணி இஸ் நாட் எவ்வெரிதிங் னு லெக்சர் அடிக்கிறாள். என்னத்தைப் பண்ண சொல்ற?'
"அது உண்மைதான். நம்ம ஊர்ல பிள்ளைகளுக்கு இண்டெரெஸ்ட் இருக்கோ இல்லையோ, அவங்கள டாக்டர் இல்லை இஞ்னியராத்தான் ஆகுனும்க்கிற ஒரே ஆசைதான் எல்லா அம்மா அப்பாவுக்கும். அது ஒண்ணுதான் படிப்புனு நெனச்சு வீணாப்போகிறோம், ராஜ்."
"இப்போ ஒரு ஆஃப்ரிக்கன் அமெரிக்கனை டேட் பண்ணுறாளாம்! நம்ம இந்தியர்கள் எல்லாம் சுத்தமா பிடிக்கலையாம். இந்தியர்கள் எல்லாம் முட்டாள்களா இருக்காங்களாம். பேசத்தெரியலையாம். எல்லாமே அஃபெண்ஸிவா பேசுறாங்களாம்.."
"நீங்க இந்தியந்தானே?"
"ஆமா, ஆனா அவ அப்பாங்கிறதாலே சரினு போறாளாம்."
"சரி சந்தோசமா இருக்காளா, கிரிஜா?"
"அப்படித்தான் சொல்றா. ஷி இஸ் ஹேப்பி அண்ட் பிஸி வித் ஹெர் வொர்க்!"
"சின்னவள் சங்கீதா?"
"அவ இப்போ 9th க்ரேட் போறா. அவளும் நல்லாத்தான் படிக்கிறா. இதைக்கேளு! போன வருடம் ஒரு வெள்ளைக்கார பையனை வீட்டுக்கு அழச்சுண்டு வந்தாள். அவ க்ளாஸ்மேட்டாம். ரொம்ப நல்லாப் படிப்பானாம். ஆனால், அப்புறம் சொல்றா, அவன் "கே" யாம்! ஆனா ரொம்ப நல்ல பையனாம். இவளுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டாம்"
"இந்த வயசிலேயே தெரியுமா அவனுக்கு?"
"தெரியும்னு சொல்றா, சங்கீதா! ஹி இஸ் டிஃபெரெண்ட் னு சொல்றா. ஏன் அவனோட போயி பழகிறனு கேட்டுட்டேன். என்னை காலி பண்ணிட்டா! பெரிய சண்டையாப்போச்சு!"
"என்ன சொன்னாள்?"
" அவன் "கே" யா இருந்தா உங்களுக்கென்ன? ஸ்ட்ரைட்டா உள்ளவன் ட்ரக் அடிக்ட்டா, ரேப்பிஸ்ட்டா இருந்தா பரவாயில்லையா உங்களுக்கு? அடுத்து நான் "கே" ஆயிடுவேனானு பயமா? னு கேட்டாள். அப்படியே நானும் "கே" ஆனால் என்ன செய்வீங்க? நான் உங்க மகள்னு இல்லாமல் போயிடுமா? னு கேக்கிறா"
"அவ 8th படிக்கும்போதா!"
"ஆமா மாதவா. இந்தக்காலத்து குழந்தைகள் எல்லாம் முந்தி மாதிரி இல்லை மாதவா. நமக்குத் தெரியும் விசயங்களைவிட அவங்களுக்கு எல்லாம் தெரியுது!"
"பேசாமல் இருந்துட்டீங்களா?"
"என்ன சொல்லச் சொல்ற? என்ன மன்னிச்சுக்கோனு சொன்னேன்! அப்புறம்தான் சங்கீதா விட்டா என்னை!"
"என்ன ராஜ் உண்மையிலேயே பயமுறுத்துறீங்க என்னை!"
"மூத்தவள், டேடிங்னு பெர்த் கண்ட்ரோல் பில்ஸோட இருக்கா! செக்ஸ்லாம் தப்பு இல்லையாம். இளையவ என்ன ஆகப்போறானு எனக்குத் தெரியலை! பிரேமாவோட எதுவுமே ஒத்துப்போக மாட்டேங்கிது. எதுக்காக ஃபேமிலி ஃபேமிலினு தியாகம் பண்ணனும் தெரியலை? எதுக்கு சம்பாரிச்சுப் போடனும்னு ஒரே எரிச்சலாடுச்சு. குழந்தைகள், மனைவி எல்லாருமே சுயநலம்தான். பேசாமால் நமக்காக நாம் வழுவோம், சாவோம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்."
"நீங்க அந்த கம்பெணில தானே இருக்கீங்க?"
"இல்லைப்பா இப்போ ஒரு சின்ன காலேஜ்ல டீச் பண்ணுறேன். கம்பெணியில் வாங்கிய சம்பளத்தில் பாதிதான் இப்போ வருது. ஆனால் ஒரு அர்த்தமான வேலை. அதனாலதான் பிரேமாவோட பிரச்சினையே வர ஆரம்பிச்சுச்சு."
"எதனால?"
"ஏன் அதிக சம்பளம் கிடைக்கிற கம்பெணி ஜாப் பண்னலைனு இவ கேக்கிறா. எனக்கு பிடிக்கலைனு சொன்னால், அது இதுனா! இது என் வாழக்கை, நீ பேசாமல் மூடிக்கிட்டு இருனு கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டேன்! அதுல ஆரம்பிச்சதுதான்.."
"ஏன் ராஜ்?"
"இந்த பாரு. எனக்கு பிடிச்சதைதான் நான் பண்ண முடியும். அதிக சம்பளம் கொடுக்கிறான்னு சும்மா குப்பை கூட்ட முடியாது! இவளுகளுக்கு மட்டும் இவளுக லைஃப் முக்கியமாம. நம்ம என்னத்துக்கு இவளுகளுக்காக சும்மா தியாகம் பண்ணனும்? எனக்குப் பிடிச்சதை நானும் பண்ணுறேன். இவங்களுக்காக செய்த தியாகம்லாம் போதும்ப்பா"
"சரி, ராஜ். சாப்பிட போகலாமா?"
"வா அந்த இந்தியன் ரெஸ்டாரண்ட் போகலாம். நான் ட்ரைவ் பண்ணுறேன். என் கார்லயே போகலாம்!"
5 comments:
konjam bayamathan irukku neenga ezhuthuratha partha.....
nothing is permanent in this world...
varun.. i have a gud news frm my part to tell u.. can u pls tell me ur email id?
Nila: Pardon me, I dont share my e-mail id in public. Bcos I am afraid some others can note down and abuse it. Is there any other way I can share it without others' knowledge? I could not find your e-mail id either! LOL! Let me see how we can resolve this problem. :)
nila: Can you activate comment moderation in your blog (http://nilamagal-nila.blogspot.com/) for some time? If you do, I can give my email id there in a comment. You can note down and NOT publish the comment. In that way you can get my e-mail id without others' knowledge. Once you get that, you could deactivate comment moderation in your blog and let it go the way it is now.
Take it easy!
hi varun.. I have activated comment moderation... u can post in my blog... thanks
Thanks, nila, I will give my e-mail address in a comment. :)
Post a Comment