Wednesday, January 20, 2010

இதுதான் எந்திரன் கதையாம்! நல்லாயிருக்கு!



பொதுவாக இண்டியா க்ளிட்ஸ்ல official news தான் ரிலீஸ் பண்ணுவாங்க. இந்த கதை மேட்டரும் official news னு நம்புவோம். எந்திரன் கதை என்னனானு ஆரம்பிச்சு, ரஜினி ரெண்டு ரோலாம்! விஞ்ஞானி ரஜினி அப்புறம் ரோபாட் ரஜினி!

சரி, இது பழைய தெரிந்த "கதை" தானே? புதுசா என்ன?

ரோபாட் ரஜினியை விஞ்ஞானி ரஜினி உருவாக்குவாராம். ரோபாட்டுக்கு நெறைய அறிவை அள்ளி வழங்கி, அதை வச்சு பல நன்மைகளை செய்வதற்காக முயல்வாராம்! ரோபாட் ரஜினி மனிதனாகவே ஓரளவுக்கு மாறிவிடுமாம். "அது" நம்ம ஐஸைப் பார்த்து விழுந்து தன்னுடைய சிலிக்கான் ஹார்ட்டை ஐஸ்ட்ட விட்டுடுமாம். நெனச்சுப்பார்க்கவே நல்லாயிருக்கு இல்லையா? ரோபாட் லவ் லாம் பண்ணி, டூயட் எல்லாம் பாடுவது?

சரி, ரோபாட் நல்ல காரியம் செய்துகொண்டிருக்குமாம். நல்லது செய்தால் வாழவிடுவானா நம்ம ஆளு? ரோபாட்டையும் வாழவிடமாட்டாங்களே ! ரோபாட் ரஜினியை காலிபண்ண முயற்சிப்பாங்களாம் நம்ம வில்லன்கள். நம்ம சயண்டிஸ்ட் ரஜினி, ரோபாட் ரஜினியை வைத்து வில்லன்களை அடி அடினு அடிச்சு நொறுக்கிவிடுவாராம்.

இப்படித்தான் இண்டியா க்ளிட்ஸ்ல கதை சொல்லியிருக்கு. இது உண்மையான கதையோ இல்லை யார்விட்ட கதையோ! இது மாதிரி நெறையக் கதை ஏற்கனவே வந்திருக்குனு நெனைக்கிறேன்!

2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. ஜக்குபாய் மாதிரி , கதை
வெளிய வந்துருச்சே..

பாவம்.. யார் யாரெல்லாம் கண்ணக் கசக்கப்போறாங்களோ...
இப்பவே கண்ணு கட்டுதே..

வருண் said...

வாங்க பட்டாபட்டி!

எனக்கென்னவோ இது அஃபிஸியல் ரிலீஸ் மாதிரி தோனுது. இண்டியா க்ளிட்ஸ் இது மாதிரி இல்லீகல் வேலைலாம் செய்வதில்லை!