Friday, October 23, 2009

கடவுள் இல்லை! ஆனால் பேய் இருக்கு!

கடவுள் நம்பிக்கை இல்லைனா நாத்தீகவாதிகள்! இல்லை, பகுத்தறிவு வாதிகள்! னு இவங்க தங்களை சொல்லிக்கிறாங்க!

இந்த நாத்தீகம், ஆத்தீகம், நம்பிக்கை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜக்ட்! பல நாட்டிலிருந்து வர்றவங்க கிட்ட பேச வாய்ப்பு கிடைக்கிறது . பொதுவா பகுத்தறிவுவாதிகள் கடவுளை நம்புவதில்லை. ஆனால் அப்படி ஒருவர் சொல்றார்னு அவர் பேய்களை நம்பமாட்டார்னு நீங்க அடிச்சு சொல்ல முடியாது!

சீனா, ஈஸ்டர்ன் யூரோப்பி லிருந்து வரும் பலரிடம் பேசும்போது தெரியவந்தது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை! மனதாற கடவுளை இவர்கள் நம்பிவதில்லை. கடவுளோ ரிலிஜனோ இவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிப்பதுமில்லை! உடனே இதை வைத்து நாம் இவர்கள் பேய் நம்பிக்கை இல்லாதவர்கள்னு நினைத்து விடக்கூடாது! நான் அப்படித்தான் முன்னால (ள) எல்லாம் நினைப்பேன். சில பேரிடம் பேசிய பிறகு என் தவறு புரிந்தது.

பலர் என்ன சொல்றாங்கன்னா,

* எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் பேய் (ஃகோஸ்ட்) ல நம்பிக்கை உண்டு!

இவர்களை எந்த வகையில் சேர்ப்பதுனு எனக்குத் தெரியலை! ஆனால் கடவுளும் சரி, பேயும் சரி, ஜோசியமும் சரி, அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று!

6 comments:

வால்பையன் said...

யாராவது பின்னூட்டத்தில் சுவாரஷ்ய தகவல் தர்றாங்களான்னு பார்க்க!

வருண் said...

***வால்பையன் said...

யாராவது பின்னூட்டத்தில் சுவாரஷ்ய தகவல் தர்றாங்களான்னு பார்க்க!

23 October, 2009 10:25 AM***

வாங்க "வால்"! :-)))

அப்படியெல்லாம் யாரும் மனம்திறந்து பேசப்போறதில்லைங்க!

பொதுவா பேய் பார்த்த கதையெல்லாம், யாராவது க்ளோஸ் ஃப்ரெண்டுட்ட மட்டும்தான் சொல்லுவாங்க! :)))

லதானந்த் said...

நெம்பத் தடவை கவனிச்சிடேங்க. “ஆத்தீகம்” ”நாத்தீகம்” அப்படினே எழுதுறீங்க/எழுதுறாங்க. “நாத்திகம்” ”ஆத்திகம்” அப்படிங்கிறதே சரி!

(”கமல்ஹாஷன்”னு முந்தி எழுதி அப்புறம் ஹாசன்னு
திருத்திகிட்ட மாதிரி இதையும் சரி செஞ்சுக்கோங்க.)

பை தி பை இதெல்லாம் தான் ‘கடவுளும்” “பேயும்” ஒண்ணுங்கிறதுக்கு acid test.

வருண் said...

வாங்க,லதானந்த் சார். :)

நல்லவேளை சொன்னீங்க, இல்லைனா வாழ்நாள் முழுவதும் இந்த எழுத்துப்பிழை தொடர்ந்திருக்கும்!

இனிமேல் சரியாக எழுதுறேன். நன்றி :)

லதானந்த் said...

பதில் சொன்னா முழுசுக்கும் சொல்லணும். எனது முந்தைய கமென்டைக் ”கனிவு கூர்ந்து”
முழுமையாகப் படித்து முழுமையாகப் பதில் சொல்லவும்.
(2008 தீபாவளிக்குச் சேட்டில் பேசுனதுக்கப்பறம் எத்தனை நாளாச்சு!)

வருண் said...

உங்களோட "chat" பண்ணியது நானில்லை சார். உங்களுக்கு இன்னும் குழப்பம் தீரலையா!!!

எனக்குப் புரிந்த பகுதிக்கு மட்டும் பதில் சொன்னேன். :)))