Sunday, January 31, 2010

அவதார், டைட்டானிக்கை வீழ்த்தியது!



உலக பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சனில் #1 ஆக இருந்த படம் டைட்டானிக், Titanic (direction: James Cameron). இந்த வார கலக்சனில் டைட்டானிக்கை அவதார் Avatar (direction: James Cameron) வீழ்த்தியது! என்னுடைய பதிவில் நான் அவதார் டைட்டானிக்கை பீட் பண்ண முடியாது என்று சொல்லி ஒரு 4 வாரம்கூட இருக்காது. என்னுடைய ப்ரிடிக்ஷனைத் தவறானது என்று நிரூபித்து கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் #1 ஆக இருந்து வந்த டைட்டானிக் கலக்சனை ($ 1.835 பில்லியன்), அதே டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரானுடைய படமான அவதார் ஓவெர்டேக் ($ 1.86 பில்லியன்) செய்து புதிய சாதனை படைத்தது.


1 $ 572.0 (US) $ 1288.0 (other countries) $ 1860.0 Avatar (2009)

2 $ 600.8 (US) $ 1234.6 (other countries) $ 1835.4 Titanic (1997)

Saturday, January 30, 2010

சாருவின் “கடவுளைக்கண்டேனி”ல் கடவுளைக் காணவில்லை!

நான் அறிவியல்த்துறையில் உள்ளவன். பெரிய அறிவியல் மேதையெல்லாம் இல்லை. சும்மா சாதாரண கற்றுக்குட்டி! ஆனால் எதையும் எளிதில் நம்பும் மனபாவம் எனக்குக் கிடையாது. அதுவும் இந்தச் சாமியார்கள் மேட்டர்ல நான் ரொம்பவே மோசம். இந்த சாய்பாபா, சங்கராச்சார்யா, நித்யானந்தா இவர்கள் மேலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன். சமீபத்தில் எழுத்தாளர் சாரு அவருடைய ஒரு கடவுளைக்கண்டேன் பதிப்பில் ஒரு பெரிய அதிசய்ம் பற்றி எழுதியுள்ளார்.

ஒருவருக்கு ஏதோ கட்டி (கேன்சர்) இருந்ததாம். டாக்டர்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்களாம். அவர் உடனே சுவாமி நித்யானந்தாவிடம் சென்றாராம். உடனே சுவாமி நித்யா அந்த கேன்சர் செல்களை மேலே வளரவிடாமல் நிறுத்திவிட்டாராம்!

சரி அவர் கட்டியை எப்படி இந்த சாமியார் க்யூர் பண்ணினார்? கொஞ்சமாவது நம்பும்படியாக உள்ளதா பார்ப்போம்!

* மெடிட்டேஷன்ல, தியானத்தில், மனக்கட்டுப்பாட்டில் அந்த நபருடைய பயத்தை போக்கி அவருக்கு நிம்மதி வழங்கினார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அதுபோல் அவர் செய்யவில்லை!

* ஒரு லேகியம், பச்சிலை (ஐ மீன் ஒரு கெமிக்கல்) கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு அதிலிருந்து அவர் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதுபோலும் சுவாமி செய்யவில்லை!

அப்போ அந்த சாமியார் நித்யானந்தா என்ன செய்தார்????

நோயாளியிடம் அவர் சொன்னது!

“அந்த கவலையை விடுங்கள்! நேராக உங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your tumor."

அதேபோல் செய்து அந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியை நிறுத்திவிட்டாராம் சுவாமி நித்யானந்தா!!!

என்னங்க இது? இந்த 21 ம் நூற்றாண்டில் ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி ஒரு வரியை எழுதுகிறார்? கேன்சர் செல்களின் வளர்ச்சியை ஒருவர் இப்படி தடுக்க முடியுமா என்ன? It is IMPOSSIBLE if you ask me!

We cant let this go as THIS IS NOT one of his FICTIONS! He claims that it is like "TRUE STORY"!

First of all I am not sure whether what he had was a malignant tumor. It could have been a benign one!

We have not achieved anything great in Medical field or in Science as far as I know. I am talking about the ORIGINAL contribution. In this situation, the claimed achievement (curing cancer) of Swamy Nithyanandha can take us much higher than the level of Harvard University Scientists IF IT IS TRUE!

I wonder why can not he publish his work and this procedure of treating cancer to the world? Why do anyone in the world has to waste his time in doing Cancer research and Chemotherapy if Swamy Nithyanandha can accomplish this kind of break throughs without going through any Radiology or Chemotherapy treatment?

சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம். இதுபோல் "கதை" எழுதுவதே இந்த சாமியாருக்கு ஒரு பாப்புளாரிட்டி உருவாக்க இவர் ஒரு நல்ல "கமர்சியல்" கொடுக்கிறார். இதுபோல அதிசயங்களை சாதிக்க முடியும் ஒரு கடவுளுக்கே இந்தக்காலத்தில் இது போல் கமர்சியல் கொடுக்க வேண்டியுள்ளதுதான் இதில் பரிதாபம்.
கொஞ்ச நாளைக்கு முன்பு தரமான தன் புத்தகங்கள் 25,000 பிரதிகள் போல விற்றால்தான் கொஞ்சமாவது மரியாதையா இருக்கும் என்றார் திரு சாரு. சுவாமி நித்யானந்தாவால் இதுபோல் தரமான புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க உதவுமுடியாது போலும். சரி, கேன்சர் செல் வளர்ச்சியை மட்டும்தான் இவரால் கட்டுப்படுத்த முடியுமோ? இல்லை எச் ஐ வி வைரஸையும் இனப்பெருக்கம் பண்ணவிடாமல் நிறுத்தி டமுடியுமா? என்னனு தெரியலை.

நான் இவர் கதையில் நான் கடவுளைக் காணவில்லை! ஆனால் சுவாமி நித்யாந்தாவிற்கு பாப்புளாரிட்டி அதிகமாக்க ஒரு நல்ல “கமர்சியல்” தான் பார்த்தேன்!

It is unfortunate, only in India we have these kind of saamiyaar belief for thousands of years. That is one of the reasons we could not achieve anything in science. I don't know how many thousand years this kind of nonsenses are going to continue like this. It is our responsibility to SERIOUSLY criticize such misleading fraudulent statements and stories and false claims by challenging them no matter who he/she is!

Friday, January 29, 2010

ரஜினி விசிறிகளுக்கு எரிச்சலூட்டும் தமிழ்ப்படம்


ஓம் சாந்தி ஓம் படத்தின் ரீமேக் அல்லது அதை தழுவிய படம்தான் இப்போ வந்திருக்கிற "தமிழ்ப்படம்". இந்த காமெடிப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளையதளபதி விஜய் படங்களை நக்கலடிப்பதுபோல எடுத்துள்ளதால், ரஜினி/விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை ரசிக்கவில்லையாம். மாறாக பயங்கர கடுப்பாகி விட்டார்களாம். என்ன எங்க தலைவரை வச்சு காமெடி பண்ணூறானுகனு கோபத்தில் ரஜினி/விஜய் ரசிகர்கள்/விசிறிகள் இந்தப்படத்தை முழுமையாகப் புறக்கணித்தால் படம் ஃப்ளாபாகிவிடக்கூடும் என்ற பயத்தில் இருக்கிறதாம் படத்தயாரிப்புக்கூட்டம். ரசிகர்களை விடுங்க, ரஜினியும் விஜய்யும் இந்தப் படத்தை ரசிப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

சிரிப்புப்படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். உங்களை கேலிபண்ணி காமெடிபண்ணி சிரிக்காத வரைக்கும். கடவுளுக்கே அவரை கேலி பண்ணினால் அவரால் ரசிக்க முடியாதாம், பிடிக்காதாம்! அப்படியிருக்கும்போது ரஜினியும் விஜய்யும் மனுஷங்கதானே? இதில் பாதிக்கப்படாத நடிகர்களின் விசிறிகள் இந்தப்படத்தை ரசிக்க வாய்ப்புகள் அதிகமாம்!

கோவா (A) - விமர்சனங்கள்!


வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் புது மாதிரியாக ஒரு முயற்சி செய்து சென்னை-28, சரோஜா என்று ரெண்டு வெற்றிப்படங்களுடன் வந்தார். இந்தக்காலத்து பசங்களுக்கு ஏற்றார்போல படம் எடுப்பவர் இவர்னு சொல்லலாம். முதல் இரண்டு படங்களில் வெற்றிபெற்ற இவர், மூனாவது ஒரு படம், புதுமையான ஒரு "ப்ளாட்" டோட வந்து இருக்கிறார்போல இருக்கு. இசை: யுவன் சங்கர் ராஜா. இந்தக்காலத்துப் பசங்க மனதைக்கவர்ந்தால் இவர் வெற்றி பெறுவார்.

சரி கோவா எப்படி இருக்குனு வலையுலக விமர்சகர்கள் சொல்றாங்கனு பார்ப்போம். விமர்சனங்களில் இருந்து கிடைத்த விசயங்கள் சில.

* அடல்ட்ஸ் ஒன்லி சான்றிதழ் சந்தேகமே இல்லாமல் கொடுக்கப்படவேண்டிய படம்தான் இதுனு தெளிவாக சொல்கிறார்கள் ஒவ்வொரு விமர்சகரும். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை!

* பொதுவாக கதை எல்லாத்தையும் நம்ம விமர்சகர்கள் சொல்லிடுவாங்க இல்லையா?. கதையை சொல்லாமல் விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும் நம்ம மக்கள் முன்னேறவில்லை. நல்லவேளை இந்தப்படத்தில் பெருசா எதுவும் கதையே இல்லையாம், அதனால விமர்சகர்களால் கதையை சொல்ல முடியலை பாவம்!

* மூனு கிராமத்து வெடலப் பசங்க, கோவாவுக்கு போயி, அங்கே உள்ள அரைகுறை வெஸ்டர்ன் கல்ச்சரை பார்த்து அதில் விழுந்து, உருள்வதுதான் படமாம்.

இண்டியா க்ளிட்ஸ் விமர்சனம் பரவாயில்லை!

Sify விமர்சனம் ரொம்ப நெகடிவ்வா இருக்கு!

Rediff விமர்சனம் நல்லாவே இருக்கு! (***)

பொதுவாக Rediff விமர்சனம் நல்லாயிருந்தால் படம் கமர்சியல்லா நல்லாப் போகும் என்பது என்னுடைய அனுபவம். "கோவா" முடிவும் நம்ம இந்தக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கு. அவர்கள் ரசனைக்கேற்ப தீணி போட்டிருந்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கு.

உறவுகள் முறியும்!

இ-மெயில் அக்கவுண்ட்ல லாகின் பண்ணினான் சம்பத். அதிசயமாக அன்று லலிதாவிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. சுமார் 1 1/2 வருடத்திற்குப் பிறகு! இப்போது அவளுக்கு திருமணமாகி 2 1/2 வருட காலமாகிவிட்டது.

இனிமேலும், ஏன் அவளை கல்யாணம் செய்துக்க முடியவில்லை? ஏன் கல்யாணம் செய்யமுடியாது என்று தெரிந்துகொண்டே அவளை காதலித்தோம்? என்று நினைத்து நினைத்து வருந்தி வருந்தி, தன்னைத்தானே நொந்துகொள்ள இஷ்டமில்லை அவனுக்கு. "கதம் கதம்" என்று அதைப்பற்றி யோசிக்காமல் விட்டு விட முடிவு செய்துவிட்டான், சம்பத். இப்பொழுதெல்லாம் லலிதாவை ஒரு வழியாக மறக்க, அவள் எண்ணங்களால் தன் மனநிலை பாதிக்கப்படாமல் வாழக்கற்றுக்கொண்டான், சம்பத்.

அவளிடம் இருந்து வந்த மெயிலை நிதானமாக வாசித்தான். அது வழக்கம் போலதான் இருந்தது

Hi Sampath!

How are you doing? I hope you are doing good! It has been long time. I am doing fine. I am busy with my family and, of course happy. I think about you sometime and miss you sometime!

Bye for now!

-Lalitha

திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கலாம் என்று இருவரும் பேசியிருந்தார்கள். ஆனால் அது முடியவே முடியாத காரியம் என்று தெரியாது இருவருக்கும். அது மட்டுமல்ல, முன் அனுபவம் இல்லாததால் நெறைய விசயங்கள் இருவருக்குமே தெரியாமல் இருந்தது. இப்போதுதான் அனுபவித்த பிறகு தங்கள தவறு, முட்டாள்தனம் எல்லாம் புரிந்தது. அறியாமையால், அனுபவமில்லாமல் செய்த "ப்ராமிஸ்" எல்லாம் எப்படி காப்பாத்த முடியும்? அதை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்தான் இப்போது.

நட்புனா என்ன? சும்மா இ-மெயில்ல "ஹாய்" சொல்லிக்கொள்வதா? சும்மா பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிக்கொள்வதா? இல்லைனா சும்மா நியு இயர் க்ரீட்டிங்ஸ் சொல்லிக்கொள்வதா? அதெல்லாம் சும்மா ஃபார்மாலிட்டிக்கு ரெண்டுபேர் சொல்லிக்கொள்வது. நட்பு என்பது சம்பத்தைப்பொறுத்த வரையில் வேறு. ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவிதமான "பேரியர்ஸ்"ம் இருக்கக்கூடாது! எதையுமே இதை சொல்லுவோமா வேணாமானு யோசிக்கக்கூடாது! சண்டை போட்டுக்கொண்டாலும் அதில் அந்த "உரிமை" இருக்கனும். அதுதான் அவனைப்பொறுத்தவரையில் நட்பு! அதுதான் நண்பர்களிடம் அவன் எதிர்பார்ப்பது! அந்த நட்புடன் முன்னால் காதலியான லலிதாவுடன் இருக்கமுடியுமா என்ன ? அதுவும் அவள் இன்னொருவரை மணந்தபிறகு?அவள் இன்னொருவருக்கு தன்னை முழுமையாகத் தந்த பிறகு? இன்னொருவரிடம் தன் இன்ப துன்பங்களை சமமாக பகிர்ந்து கொண்ட பிறகு? அதெப்படி முடியும்? நிச்சயம் முடியாது! என்று தெரிந்து இருந்தும், ஏன் முடியாது? என்று நினைத்தான் அன்று! தன் முட்டாளதனத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சம்பத், இன்று.

பொதுவாக திருமணம் ஆனபிறகு அவளிடம் இருந்து வரும் மெயில்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன. அதாவது, ஏதோ பேருக்கு ஒரு மெயில்! எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல். ஏதோ கடமைக்கு இவனுக்கு ஒரு மெயில் அனுப்பனுமே என்று அனுப்புவது போல! அதுவும் ஏதோ பயங்கர கில்ட்டி காண்ஸியண்ஸுடன் அவள் எழுதுவதுபோல அவனுக்குத் தோனும்! அது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதுக்காக அவளை இப்படி கஷ்டப்பட்டு மெயில் அனுப்ப வைக்கனும்? எதுக்காக அவளை நட்பு என்கிற பெயரில் அவன் தொடர்ந்து கஷ்டப்படுத்தனும்? என்று வருந்துவான், சம்பத்.

அவன் யோசிப்பதுண்டு! பேசாமல் பதில் எழுதாமல் நிறுத்திவிடுவோமா? அதுதான் இரண்டு பேருக்குமே நல்லது. இப்படியெல்லாம் பலமுறை யோசித்துவிட்டு அவள் மெயிலுக்கு நாகரீகமாக பதில் எழுத முயன்று நெறையவே எழுதி அனுப்புவான். ஆனால் அவளிடம் இருந்து அதன்பிறகு பதிலே வராது. பதில் வந்தாலும் அதில் இவன் எழுதியதை அவள் படித்ததாகவே தோனாது. இவன் எழுதி அந்த மெயில் எல்லாம் எழுதி குப்பைத் தொட்டியில் போடுவது போல இவன் எழுதிய எழுத்துக்கள் போகும். எதுக்கு இதெல்லாம்? தேவையே இல்லாத ஒருவரை ஒருவர் கஷடப்படுத்திக் கொள்வது தேவையா ? வேஸ்ட் ஆஃப் டைம்! தேவையில்லாத மனக்குழப்பம். அவளை நிம்மதியா வாழவிட்டால்தான் என்ன? அதுதானே உண்மையான ஜெண்டில்மேனுக்கு அழகு? மரியாதையாக பதிலே எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று எத்தனையோ தடவை நினைத்து இருக்கான். ஆனால் அவனால் முடியாது! அப்படி இருப்பது அவளை கஷ்டப்படுத்தும் என முட்டாள்த்தனமாக நம்பினான். அவனுடைய திருப்திக்காக அவளை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைத்து பதில் எழுதுவான். இவன் எழுதுவதை அவள் படிப்பதே இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விளங்கியது. அவனுக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும். அவள் என்றுமே எல்லாவற்றிலுமே அவனைவிட ஸ்மார்ட் தான்.

சம்பத்துக்கு பெரிய ஈகோ உண்டு. ஆனால் அதை அவளிடம் க்ளோசாக இருக்கும்போது அவன் காட்டியதில்லை. அவளிடம் பேசிக்கொண்டு இருந்தால் ஈகோ எல்லாம் பறந்து போயிடும். இப்போ அவள் பேசுவதில்லை என்பதால் அவன் மெயில்களை இக்னோர் பண்ணுவதைப்பார்த்துப் பார்த்து அவன் ஈகோ தலை விரித்தாடியது. சம்பத் இன்று கொஞ்சம் சீரியஸாகவே யோசித்தான். தர்க்க ரீதியாக. திறந்த மனதுடன்! எதுக்காக இவளிடம் இப்படி ஒரு காண்டாக்ட்? எதுக்காக இவள் சொல்லும் "ஹாய்"க்காக சும்மா நான் வரிந்து வரிந்து கடிதம் எழுதனும்? என்று சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான். சப்போஸ் லலிதாவிடம் காண்டாக்ட் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். அப்படி இருப்பது அவனுக்கு நிச்சயமாக பெட்டராக தோன்றியது. அவளிடம் இருந்து வரும் மெயில்கள் எந்தவிதமான பிடிப்பும், அன்பும் எதுவுமே இல்லாமல்தானே வரும் . அது அவள் தப்பு இல்லைதான்! அவன் தப்புனே இருக்கட்டுமே! யார் தப்பு என்பதை விட்டுவிட்டு இப்போ அந்த மாதிரியான ஒரு தொடர்பு எதுக்கு? என்று யோசித்தான். அவசியமே இல்லை! ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் அவளிடம் இருந்து வரும் இ-மெயில்ல இருந்து அவன் புரிந்து கொள்வது. அவள் உயிரோடு நல்லா இருக்கிறாள் என்பது மட்டும்தான்!

சரி, இன்றைய அவர்கள் நிலையில், சம்பத் உயிரோடு இருந்தால்தான் என்ன? இல்லை செத்தால்தான் அவளுக்கென்ன? எந்த வகையில் லலிதாவை இவன் இருப்பும், இறப்பும் பாதிக்கும் ? சப்போஸ் அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவளை நிச்சயம் அது பாதிக்கும். அவளுக்கு அல்லது அவள் கணவன், கணவன் வீட்டிலுள்ளவர்கள், அவள் தோழிகள், வேலையில் உள்ள கலீக்ஸ் போன்றவர்களுக்கு உடல்நலம் குன்றினால் அவளை பாதிக்கும். ஆனால் சம்பத் செத்தால்கூட எந்தவகையிலும் அவளை பாதிக்காது என்பது அவனுக்கு தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

என்றும் போலில்லாமல் ஒர் தெளிவான மனதுடன் லலிதாவிடம் இருந்து வந்த அந்த மெயிலை டெலீட் செய்துவிட்டு. இ-மெயிலை க்ளோஸ் பண்ணினான். லலிதாவிடம் இருந்து வந்த மெயிலை சம்பத் இப்படி டெலீட் செய்வது இதுதான் முதல் முறை. சம்பத் முட்டாள் போல வாழ்க்கையில் கடந்த காலத்தையே திரும்பிப்பார்க்காமல், முன்னால் வருங்காலத்தைப் பார்க்க ஆரம்பித்தான். தன் இன்ப துன்பங்களை யோசிக்க ஆரம்பித்து, தன் மனநிலை முக்கியம் என்று சுயநலமாக மாற ஆரம்பித்தான். தனக்கும் சுயமரியாதை இருக்கு என்று தன்னுடைய பெரிய ஈகோவை சொல்லிக்கொண்டான்.

அடுத்தநாள் மீட்டிங்க்கு அவன் செய்ய வேண்டிய ப்ரெசெண்டேசன்ல வேலை செய்ய ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும், அவன் பதில் எழுதவில்லை என்றால் லலிதா இனிமேல் அவனை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று. அவளை நிம்மதியாக வாழ வழிசெய்த திருப்தியில் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான். சில உறவுகள் தொடரும். சில உறவுகள் முறியவும் செய்யும்!

Thursday, January 28, 2010

சூப்பர் ஸ்டார் பொண்ணுக்கும் பணப் பிரச்சினையா!


"அண்ணே! சவுந்தர்யாவுடைய படம் கோவா, தமிழ்ப்படம், ஜக்குபாயோட சேர்ந்து 29 தேதி ரிலீஸ் ஆகாதாம்!"

"ஏனாம்?"

" கோவா வுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்துக்கிட்டே இருக்குண்ணே!"

"யு எஸ் ரிலீஸ் ஸ்கெடுல் எல்லாம் வந்துருச்சுப்பா!"

" ரஜினி பொண்ணு 2.3 கோடி ஒரு ஃபைனான்ஸியருக்கு திருப்பிக் கொடுக்கனுமாம். அதை இன்னும் கொடுக்கைலாம்!"

"என்ன கந்து வட்டியா? என்னப்பா பிச்சைக்காரன்ல இருந்து கோடிஸ்வரன் வரை கந்து வட்டிதானா?"

"தெரிலைண்ணே. யாரோ ஒரு ஃபைனான்ஸியர் காசை கொடுத்தாத்தான் படத்தை ரிலீஸ் பண்ண விடுவேன் என்று சட்டப்படி அனுகிறாராம்"

"சட்டப்படியா? 2.3 கோடிதான? இதெல்லாம் அவங்களுக்கு ஜுஜுபிப்பா!"

"ஆமாண்ணே ஆனால் உண்மையிலேயே என்ன பிரச்சினையோ?

"அனேகமாக 2.3 கோடியை அள்ளி எறிஞ்சுட்டு இதை செட்டில் பண்ணிவிட்டு படம் வெளிய வந்தாலும் வந்திடும்னு எனக்குத்தோனுது. சரி அப்போ மூனு படம் வெளிவருதா இந்த வெள்ளிக்கிழமை?'

"அண்ணே மூனு இல்லை, அஞ்சு படமாம்!"

"அஞ்சா?"

"ஆமா, இந்த மூனோட, தைரியம், கதைனு இன்னும் ரெண்டு படங்கள் வெளிவருதாம்!

Wednesday, January 27, 2010

நேற்றைய சூப்பர் ஸ்டார்! இன்றைய பரிதாப ஸ்டார்!


அழகும் இளமையும் நம்மைவிட்டு சீக்கிரம் போயிடம்! யாருமே என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது உலக நியதி!

ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார், மைக்கேல் ஜார்டனை இன்று ஒரு இளம் என் பி எ ப்ளேயர் ஈஸியாக பீட் பண்ண முடியும்! ஏன்னா ஜார்டனுக்கு வயதாகிவிட்டது. அதே நிலைமைதான் டென்னிஸ் வீரர்கள் பீட் சாம்ப்ராஸ், ஆண்ரியா அகாஸி மற்றும் எல்லா ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கும்!

ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல! அதேபோல்தான் சினிமாவும்! ஹாலிவுட் சினிமா சூப்பர் ஸ்டார்கள் இதில் விதிவிலக்கெல்லாம் இல்லை! நடிகைகள் மிளிர்வது ரொம்ப கம்மியான நாட்கள்தான். நடிகர்கள்? அவர்களுக்கும் வயதாக ஆக அவர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வால்யு குறைந்துகொண்டேதான் போகிறது.

ஹாரிசன் ஃபோர்ட் ஸ்டார் வார்ஸ்ல ஹான் ஸோலோ வாக அறிமுகமானார். அதுதான் அவருக்கு டேர்னிங் பாயிண்ட். ஒரு சமயம், எல்லா ஹாலிவுட் ஸ்டார்களையும் விட அதிக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் கொடுத்த அமெரிக்காவின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக இருந்தவர்தான் ஹாரிசன் ஃபோர்ட்.

போனவாரம் ரிலீஸ் ஆன எக்ஸ்ட்ராடினரி மெஷர்ர்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஓபெனிங் வீக் எண்ட் கலக்ஷன் 7 மில்லியன் மட்டுமே. இது மட்டுமல்ல, சமீபத்தில் இவர் நடித்த இண்டி-4 த்தவிர அனைத்துப் படங்களுமே ஃப்ளாப்தான். இண்டியானா-4 வின் வெற்றியும் இவரால் என்று சொல்ல முடியாது. கதை ப்ளாட், டைரெக்டர் போன்ற க்ரிடிட்களால் என்றுதான் சொல்லனும்.

நேற்றைய சூப்பர் ஸ்டாரின் இன்றைய பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கிறது என்பதற்கு ஹாரிசன் ஃபோர்ட் நல்ல உதாரணம்.

அதனால்தானோ என்னவோ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, மிகக்கவனமாக மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கிறார். சாதாரணப் படங்களில் நடித்தால் அவர் சூப்பர் ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் ஸ்டேட்டசை தக்க வைக்க முடியாதோ என்கிற ஐயம்மாக இருக்கலாம்! ஆனால் நம்ம சூப்பர் ஸ்டாரின் இன்றைய நிலைமை ஹாரிசன் ஃபோர்டைவிட ஓரளவுக்கு தேவலாம்தான்! :)

வயதாவது அவர்களுக்கு சாதகமாக அமைவது பொதுவாக எழுத்தாளர்களுக்கு மட்டும்தான்! அனுபவம் அதிகமாவதால் எழுத்தில் நிதானம் அதிகமாவதுண்டு. ஆனால் வயதாக ஆக, அவர்கள் எழுத்தில் "பர்வேர்ஸ்" அதிகமாவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஜானகிராமனுடைய "நளபாகம்" எல்லாம் பலவித விமர்சனத்துக்குள்ளானதாகவும், வயதாக ஆக அவர் எழுத்தில் பர்வேர்ஸ் அதிகாமவாதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்மேல் விழுந்ததாக கேள்வி! ஆனால் இன்றைய எழுத்தாளர்களுக்கு "பர்வேர்ஸ்" அதிகமாக ஆக பல ரசிக ரசிகர்களை அள்ளித்தர வாய்ப்பும் இருக்கு!

Tuesday, January 26, 2010

பாலா பெற்ற தேசிய விருதும், அறிவுரைகளும்!


நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனர் தேசிய விருது பெற்றுள்ளார் பாலா. மனமார்ந்த பாராட்டுக்கள்! அந்த தேசிய விருதை தன் குரு பாலு மஹேந்திராவுக்கும் அவருடைய திருமதிக்கும் சமர்ப்பித்துள்ளார். இது பாலாவின் இரண்டாவது தேசிய விருது- சிறந்த இயக்குனருக்கான!

* பாலா, நான் கடவுளுக்காக தன்னுடன் கடின உழைப்பு உழைத்த நடிகர் நடிகைகளுக்கு தேசிய விருது கிடைக்காததற்காக மிகவும் வருந்தியுள்ளார். முக்கியமா, பூஜாவுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போல இருக்கு.

* இனிமேல் "இருட்டு ஏரியா"வுக்கு போகக்கூடாது என்று இளையராஜாவும், குரு பாலு மஹேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியுள்ளார்கள். அதனால் இனிமேல் அது போன்ற படங்களை இயக்க மாட்டேன் என்கிறார் பாலா!

தற்போது பாலா, "அவன் இவன்" என்கிற ஒரு படத்தை, ஆர்யா, விஷாலை வைத்து இயக்கி வருகிறார். இவர் சொல்வதைப்போல் சத்தியத்தை காப்பாற்றுவதாயிருந்தால் இது வழக்கமான சீரியஸ்படமாக இல்லாமல் க்ளீன் எண்டர்டெயினரா அமையும்போல் தோனுது.

That is going to be a BIG Challenge for him!

Do you guys know why he has been advised not to do such movies any more by IR and BM? (:o) )

ஆயிரத்தில் ஒருவனும் தமிழ் சினிமாவின் எதிரிகளும்!

உலகநாயகன் கமலஹாசனுக்கு அடுத்து தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போகும், ஒரு மிகப்பெரிய கலைஞன்தான் நம்ம செல்வராகவனாம்! யார் சொன்னா? உலக சினிமா/ஹாலிவுட் சினிமா தரத்தை எல்லாம் அறிந்த பல பெரிய மேதைகள் சொன்னது. அதனால? அதனால தமிழ் மக்களான நீங்க என்ன செய்யனும்னா பணத்தைக்கொட்டி தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்க இல்லை ஹாலிவுட் சினிமாவாக்க முயற்சிக்கும் செல்வராகவருடைய கலைவெறியை நீங்க பாராட்டியே ஆகனும்! அதை விட்டுப்புட்டு காசைக்கொடுத்துப்படத்தை பார்த்துப்புட்டு படம்பிடிக்காமல் எவனாவது விமர்சனம் என்கிற பேரில் செல்வராகவருடைய "அரைகுறை அப்ரோச்சை" அல்லது படத்துல திரைக்கதை ஓட்டத்தில் ஓட்டைவிட்டதை கேலியோ, விமர்சனமோ செய்தால் அவன் ஒரு தமிழ் சினிமா வளர்ச்சியை தடுக்கும் துரோகி! ரசனை இல்லாதவன்! திங்கிற சோத்துல மண்ணள்ளிப் போடுறவன் என்கிறது சில பதிவுலக கண்மணிகள்!

படம் பிடிக்கலைனு சொன்னா, "ஆமா ஹாலிவுட் படம்னா "ஆ" னு பார்ப்பீங்க! நம்ம தமிழ் ஜீனியஸ் செல்வராகவர்னா இப்படித்தான் சொல்வீங்க" என்கிறார்கள்.

செல்வராகவர் யார் திங்கிற சோத்துலயும் மண்ணள்ளிப்போடல! அவர் தரமான படைப்புடன் வந்தால் அவர் படைப்பை நிச்சயம் பாராட்டத்தான் செய்வார்கள். நம்ம கெவின் காஸ்டனரும்தான் பல நூறுகோடி செலவழித்து "வாட்டர் வார்ல்ட்"னு ஒரு குப்பையோட வந்தார். விமர்சகர்கள் அவரை சும்மா விடலையே!

உண்மையிலேயே ஹாலிவுட் படத்தை ஆ னு பார்க்கிறது, அதில் முழுநேர ரிசேர்ச் செய்வது கமலஹாசனும் செல்வராகவ்னும்தான்! இவர்கள்தான் ஹாலிவுட படங்கள் டி வி டி களை எல்லாம் வாங்கி, பார்த்து தங்கள் க்ரியேட்டிவிட்டியை வளர்க்கிறார்கள்! இவர்கள் க்ரியேட்டிவிட்டியே ஹாலிவுட் படங்களை பார்த்து வருவதுதான்!

ஆமா, நம்ம க்ரீயேட்டர்கள் ஹாலிவுட் படத்தைப் பார்த்து அதேபோல் சரக்கை இறக்குமதி செய்தால் அது தமிழ்த் தொண்டு! அதே படத்தை ஒரு சராசரி ரசிகன் பார்த்து வியந்தாவோ, ரசித்தாவோ அது தமிழின துரோகம்!

உண்மை என்னனா பி அண்ட் சி செண்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து மக்கள் குழம்பி நிற்கிறார்கள். ஏன்னா அங்கே வாழும் தமிழ் மக்கள் நம்ம கமல், செல்வராகவன் அளவுக்கு ஹாலிவுட் படங்களெல்லாம் பார்ப்பதில்லை! இந்தப்படத்தைப் பார்த்துட்டு அவங்க ஒரேயடியா மண்டைகாஞ்சி போய் என்ன சொல்ல வர்ராரு இவரு? ஏன் நம்ம ஹீரோ, பருத்திவீரன் சண்டியர், இப்படி திராபையா அலைகிறார்னு ஒண்ணுமே புரியலை அவர்களுக்கு. இதில் வரலாறும் சரியில்லை! இதில் வரும் ஃபேண்டசியும், பேய்களும் கொள்ளிவாய் பிசாசுகளும் புரியாத புதிர்!
நான் சொல்லுவது ஒரு சராசரி ரசிகனை! கலையை ரசிக்கவே பிறந்த ஜீனியஸ்களையல்ல! பொழுது போக்குக்காக படம் பார்க்கிறவன், சில படங்களுக்குப்போய் அந்த 2- 3 மணி நேரப் பொழுதைப்போக்கிறதுக்கு கஷ்டப்படுகிறான். எரிச்சல் வராதா அவனுக்கு?

ஆமா செல்வராகவன் எப்படி திடீர்னு ஒரு பெரிய மாபெரும் கலைஞரானார்னு தெரியலை.

* இவர் எடுத்த 7G ரெயின்போ காலணி, காதலை கொச்சைப்படுத்தி அரைவேக்காடுகளை மெண்டலாக்கிய படம்!

* அடுத்து இவர் எடுத்த புதுப்பேட்டை! ஸ்கார் ஃபேஸ்னு ஒரு அல் பச்சினோ படம் வந்தது. அதை எத்தனை தர செல்வராகவன் பார்த்தாரோ தெரியலை! அதன் விளைவுதான் புதுப்பேட்டை! பொதுவா கேங்ஸ்டர் இட்டாலியன் மாஃபியால உள்ளவன் கூட தன் க்ரூப்ல உள்ள சகாக்களின் ஃபேமிலியிலே மட்டும் கை வைக்க மாட்டான். கொலைகாரன் கொள்ளைக்காரனுக்கும் ஒரு சில மாரல்ஸ் உண்டு என்பதை வலியுறுத்தி இருப்பார்கள், இட்டாலியன் மாஃபியா பற்றி எடுக்கும் படங்களில்! ஆனால் நம்ம செல்வாவின் ஸ்கார் ஃபேஸை தழுவிய புதுப்பேட்டையில் அந்த தனுஷ் ரோல் இருக்கே! யப்பா! அந்தப்படம் தமிழனை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போச்சா இல்லை புதைகுழில தள்ளுச்சானு தெரியலை!

* ஆனால் இன்று வந்த ஆயிரத்தில் ஒருவனில் திடீர்னு செல்வராகவன் தமிழ் தியாகியாகிவிட்டார். ஏன் னா அவர் கொட்டிய 36 கோடி, 100 கோடி அள்ள அல்ல! அவர் கலைவெறியை தீர்த்துக்க அல்ல! தமிழ் சினிமாவை ஹாலிவுட் லெவெலுக்கு எடுத்துப்போக இவர் செய்கிற தியாகமாம்! இதெப்படி இருக்கு?

தமிழ் கலாச்சாரத்தில் உருவான 16 வயதினிலே, பருத்திவீரன், கருத்தம்மா எல்லாம் தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்துப்போகலையா என்ன? ஹாலிவுட் சினிமால ரிசேர்ச் பண்ணி, அவர்களை தழுவுறவன்தான் பெரிய கலைஞனா?

சரி, என்ன வேணா பண்ணிக்கோப்பா! கடைசில படம் ஒரு நல்ல ஷேப்ல வரனும். வரலைனா இப்படித்தான் விமர்சனம் வரும்! படம் பிடிக்காதவன் திட்டத்தான் செய்வான்.

ஆ ஒ பற்றி சில விசயங்கள் அப்டேட்!

* சமீபத்தில் வந்த விகடன் விமர்சனத்தில் ஆ ஒ வாங்கிய மதிப்பெண்கள வெறும் 42 மட்டுமே! உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. ஏன்னா தாண்டியது அரைக்கிணறு!

* ஹிந்து விமர்சனத்தில் கார்த்தி வீணாப்போயிட்டார்னு சொல்லப்பட்டுள்ளது! அதுவும் ரொம்ப சுமாரான விமர்சனமதான். திரைக்கதை, முடிவு,ப்ளாட் சரியில்லை என்பதுபோல எழுதப்பட்டிருக்கிறது.

* சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல இதுவரை 2 கோடி வசூல் செய்துள்ளது ஆ ஒ. இன்னும் இது நல்ல ஓப்பெனிங்கோட எஃபக்ட்தான். இன்னும் இரண்டுவாரத்தில் தெரியும் படம் ஹிட்டா இல்லையான்ன்னு!

இன்னொரு விசயம்!

* பதிவுலகில் வரும் விமர்சங்களால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இன்றுவரை சாத்தியமல்ல! ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை 200-500 இருக்கும் அவ்வளவுதான். இதில் பலர் இவன் என்ன எழவைச்சொல்றான்னு பார்ப்போம்னு சும்மா வாசிக்கிறவங்க! உங்க ஒப்பீனியனை சுத்தமாக மதிக்காதவர்கள்!

Saturday, January 23, 2010

"A" for "கோவA" வாம்!



ரஜினி பொண்ணு சவுந்தர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிக்கும் படமான "கோவா" வுக்கு "சென்சார் போர்டால்" "எ" சான்றிதழை தவிர்க்க முடியாதாம்! என்ன இப்படி 21 ம் நூற்றாண்டுல "எ" படம்னா என்ன பெரிய டீலா? இதப்போயி என்னத்தை பெருசாபேசிக்கிட்டு நீங்க யோசிக்கலாம்.

ஆனால், அது ஒரு முக்கியமான மேட்டர்தான்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலா "A" படம் எதுலயுமே நடிக்கத்தயங்குவார். காரணம்? நம்ம ஊரில் குடும்பமா வந்து யாரும் படம் பார்க்க மாட்டாங்க! குழந்தைகள், பெண்கள் வந்து படம் பார்க்கமாட்டாங்க. ரஜினி போன்ற ஹீரோக்களின் கமர்சியல் வெற்றிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும் என்பதால் அடல்ட்ஸ் ஒன்லி படத்தை ரஜினிகாந்த் சமீப காலங்களில் பண்ணுவதில்லை. சிவாஜிக்கு "எ" கிடையாது. எந்திரனுக்கும் அது கவனமாகத் தவிர்க்கப்படும்!

கமர்சியல் சக்ஸஸ்னு பார்க்கலைனா, "எ" படம் என்பது ஒண்ணும் பெரிய டீல் இல்லைதான். பாலசந்தருக்கு நெறைய "எ" படங்கள் தான் க்ரிட்டிக்கல்லா பேர் பெற்று தந்தன.

ஏன், நம்ம ரஜினி ஆரம்பகாலத்தில் நடிக்காத எ படமா?

* காயத்ரி

* தப்புத் தாளங்கள்

* அவள் அப்படித்தான்

* புவனா ஒரு ?

எல்லாமே "எ" படங்கள்தான். பிறகு கமர்சியல் ஹீரோவான பிறகு "எ" படங்களை கவனமாகத் தவிர்த்தார். ஒரு படத்தின் கமர்சியல் வெற்றிக்கு "எ" நிச்சயம் தடையா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

"எ" சான்றிதழுடன் வரும் நம்ம கோவா க்ரிடிக்கலா பெரிய சாதனை படைக்க சாத்தியமுண்டு! கமர்சியல்லா "எ"முத்திரையுடன் பெரிய வெற்றிபெறுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் "எ"படம் என்பதால் கமர்சியல்லா வெற்றிக்கு சாத்தியமே இல்லைனும் சொல்ல முடியாது.

கற்பு, கடவுள், நன்னடத்தை & சுரேஷின் அப்பா!

“என்னடா சுரேஷ்! திடீர்னு யு எஸ் இருந்து வந்து நிக்கிற?”

“வீட்டிலே ஒரு பிரச்சினைங்க, சந்துரு!”

“என்ன ஆச்சுடா?”

“தங்கை கால் பண்ணி உடனே வா னு சொன்னா.”

“எப்போ திரும்பிப் போற?”

“தெரியலைங்க.”

“என்ன பிரச்சினைனு சொல்லுடா?”

“அப்பாவுக்கு ஏதோ ஒரு கொஞ்ச வயசு லேடியோட பழக்கம் ஆகி விசயம் பெருசாயிருச்சுங்க!”

“அப்பாவா! அவருக்கு என்னடா வயசு?”

“அம்பதாச்சுங்க ஆனா, ஹி வில் லுக் லைக் ஃபார்ட்டி!”

“இந்த வயசுல அஃபையரா!”

“ஆமாங்க, தங்கை ஃப்ரெண்டு பீச்ல ரெண்டு பேரையும் பார்த்து இருக்கா. அம்மாவை அவளுக்கு நல்லாத் தெரியும்.”

“கொடுமைடா!”

“அம்மா ஒரே அழுகை. எனக்கு இந்தாளு முகத்தைக்கூடப் பார்க்க முடியலை..அதான் பெங்களூர் வந்துட்டேன்.”

“சரி, இப்போ அப்பாட்ட பேசி ஒரு வழியா பிரச்சினை தீர்ந்ததா?”

“அந்த லேடி இவர்ட்ட வேலை பார்க்கிற செக்ரெட்டரி. அவ ஃபேமிலில பிரச்சினை போல இருக்கு. இவங்க ரெண்டு பேரும் ஃபாரின்ல போயி செட்டில் ஆகிறாப்பிலே ப்ளானாம். இப்போ பெரியவங்க பேசி ஒரு வழியா நிறுத்தீட்டாங்க. சட்டப்படி எதுவும் பண்ணல. ஆனா எனக்கு அவரைப் பார்க்கவே பிடிக்கலை. தங்கைதான் ஓரளவுக்கு பேசி சமாளிக்கிறா. அம்மா எந்நேரமும் அழுகை.”

“எப்படிடா இப்படி இர்ரெஸ்பாண்ஸிபிளா இருக்காரு அப்பா?”

“தெரியலைங்க. நானும் தங்கையும் 25 ப்ளஸ். கல்யாண வயசு எங்களுக்கு. இந்த நேரத்தில் இவர் இப்படி. சொந்த பந்தமெல்லாம் கேவலமாப் பார்க்கிறாங்க.”

“அட் ல்லீஸ்ட் அவரு கில்ட்டியா ஃபீல் பண்றாரா?”

“தெரியலை. ஐ டோண்ட் திங்க் சோ. ஐ ஹேட் ஹிம்!”

“எனக்கு என்ன சொல்றதுனுனே தெரியலைடா, சுரேஷ். என்னால இது மாதிரி ஒரு நிலைமை எனக்கு வருவதா யோசிக்கக்கூட முடியலைடா. ஐ டோண்ட் நோ ஹவ் டு மேக் யு ஃபீல் பெட்டர்.”

“என்னவோ போங்க! ஐ லவ்ட் ஹிம். ஐ ஹாட் லாட்ஸ் ஆஃப் ரெஸ்பக்ட் ஃபார் ஹிம்! ஹி ஃபக்ட் அப் எவ்வெரிதிங் நவ்!”

“இந்த எழவுக்காகத்தான், கற்பு, நன்நடத்தை, மாரல்ஸ், கடவுள்னு நமக்கு நாமா சில கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டியிருக்கு. அப்பா, அம்மா தங்களுடைய சின்றின்பங்களை குழந்தைகளுக்காக சேக்ரிஃபைஸ் பண்ணியே ஆகனும். இல்லைனா தே ஆர் கோயிங் டு ஃபக் அப் எவ்வெரிபடிஸ் லைஃப்!”

“ஒவ்வொரு 10 வருடமும் இவங்களுக்கு புதுசா ஒரு பெண் வேணும்னா எதுக்கு கல்யாணம் பண்றாங்க? இவங்களுக்கு எதுக்கு குழந்தைங்க? சும்மா பேச்சளரா இருந்திருக்கலாம்ல இவரு?”

“இந்தா பாருடா! நடந்தது நடந்துருச்சு. ஒரே ஒருபாடம்தான் நம்ம எடுத்துக்கனும்! நம்ம உங்க அப்பா மாதிரி நம்ம எதிர்காலத்தில் எதுவும் தப்பு செய்யாமல் இருப்போம். உனக்குத்தான் தெரியும் இது எந்த அளவுக்கு உன் குழந்தைகளை பாதிக்கும்னு! சரியா?”

“சரிங்க! வெளிய எம் ஜி ரோட் போவோமா?”

“நான் லாப் வரை போயிட்டு வரவா? ஒரு 10 நிமிஷம் வேலை இருக்கு”

“நானும் வர்றேன். அப்படியே அங்கேயியிருந்து போவோம்.”

Friday, January 22, 2010

ஐ லவ் யு வெர்ரி மச்! கடலை கார்னர் (41)

"பிருந்த்! நேத்து நடந்தது எதுவும் ஸ்டெய்ஸிகிட்ட சொல்லாதே!"

"ஆமா, நேத்து என்ன பெருசா நடந்துருச்சு?"

"அது சரி. அவகிட்ட கொஞ்சம் அடக்கி வாசி. சரியா?"

"அந்த மேடம் கீடம்லாம் ஒரு நாள்தானா? ரொம்பத்தான் அதட்டுறீங்க, கண்ணன்?"

"அந்த ஒரு நாள் போதும் என் லைஃப் டைம்க்கும்!"

"அப்போ நான் மட்டும் காலம்பூராம் உங்க அடிமையா இருக்கனுமா ?"

"நீ என்னைக்கு எனக்கு அடிமையா இருந்தடி? எப்போவுமே என்னை அதட்டி உருட்டிக்கிட்டுதான் இருக்க?"

"சரி , நெக்ஸ்ட் என் டேர்ன்."

"ஏன் ரொம்ப பிடிச்சு இருக்கா?"

"ஆமா."

"ஐ வில் ட்ரீட் யு மச் பெட்டர்!"

"என்ன செய்றீங்கனு பார்க்கலாம்."

"ஓ கே. இந்தா ஸ்டெய்ஸி வர்றா. நான் புறப்படுறேன், எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு."

***************************

"வை கண்ணன் டிஸப்பியர்ஸ் அஸ் சூன் அஸ் ஐ ஷோவ்ட் அப்?"

"ஐ டோண்ட் நோ, ஸ்டெய்ஸி. ஹி டோல்ட் தட் ஹி ஹாஸ் எ மீட்டிங்."

"தட்ஸ் ஃபைன். ஸோ?"

"ஸோ வாட் ஸ்டெய்ஸி?"

"ஸோ, வாட் ஹாப்பெண்ட், யெஸ்டெர்டே?"

"ஹவ் டிட் யு நோ?'

"கண்ணன் டோல்ட் மி தட் யு ஸ்டேயிட் வித் ஹிம், லாஸ்ட் நைட்! "

"ஹி டிட்?"

"டெல் மி, பிருந்தா!"

"ஓ கே. ஹவ் ஷால் ஐ புட் இட்.. ஹியர் யு கோ...கண்ணன் நோஸ் ஹவ் டு ட்ரீட் எ வுமன் இன் த பெட்!"

"ஐ நியு இட்! ஸோ? ஹவ் வாஸ் இட்?"

"ஓ மை காட்!"

"தட் குட்!!! டெல் மி மோர்."

"கம் க்ளோசர், ஸ்டெய்ஸி, ஐ டோண்ட் வாண்ட் அதர்ஸ் டு ஹியர் திஸ், ஸ்டெய்ஸி"

"டெல் மி"

" "

"த்ரீ டைம்ஸ்!! மல்டிப்பிள்?"

"யெஸ்!"

"ஓ மை காட்!"

"ஓ கே. நோ மோர் கொஸ்ச்சன்ஸ், ஸ்டெய்ஸி, ப்ளீஸ்?"

"ஓ கே."

"இஸ் தட் அடிக்டிவ், ஸ்ட்ய்ஸி?"

"யா. இட் இஸ் !"

"ஹவ் டு கெட் தட் ட்ரீட்டெட்?"

"ஒன்லி கண்ணன் கேன் க்யூர் இட். இன் த பெட்!" அவள் சிரித்தாள்.

"ஓ கே. டோண்ட் டீஸ் ஹிம் ஆர் எனிதிங்."

" ஐ வில் ட்ரை டு ப்ரெடெண்ட் லைக் ஐ நோ நத்திங்!"

"தேங்க்ஸ், ஸ்டெய்ஸி."

****************************

"ஏய், அவ ஒரு மாதிரியா சிரிக்கிறா. என்னடி சொன்ன அவகிட்ட?"

"அதெல்லாம் சொல்ல முடியாது!"

"ஏதோ சேர்த்து விட்ருக்க! என்னடி சொன்ன? கூசாமல் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட!"

"நான் என்ன சொன்னேன்னு உங்களிடம் சொல்லப் போவதில்லை, கண்ணன். இது லேடீஸ் மேட்டர்."

"சொல்லு பிருந்த், ப்ளீஸ்டா!"

"இப்படிக் கேட்டா சொல்லிருவேனா?"

"எப்படிக் கேட்டா சொல்லுவ?"

"ஆஃபர் மி அனதெர் டேட் இன் யுவர் ஹோம்!"

"அதுக்குள்ளேயா?'

"இது ரொம்ப அடிக்ட்டிவாம், கண்ணன்."

"யார் சொன்னா?"

"அதெதுக்கு உங்களுக்கு? எனக்கே தெரியுது."

"எனக்கு ஒரு கெஸ்ட் வர்றாங்க இந்த வீக் எண்ட்."

"யார் அது?"

"ஒரு ஃபேமிலி. இந்தியால இருந்து அவங்க மகனைப் பார்க்க வர்றாங்க. இந்த ட்ரிப்ல சிகாகோ ல ஒரு ப்ரேக் ஆம். அவன் வந்து அவங்களை பிக் அப் பண்ணி போறவரைக்கும், நான் அவங்களை பிக் அப் பண்ணி பார்த்துக்கனும்."

"ஐ டோண்ட் நோ, எனக்கு டெய்லி உங்ககூடவே இருக்கனும் போல இருக்கு, கண்ணன்."

"எனி டைம் கால்ப்பண்ணி பேசுடா."

"அது பத்தாது."

"போர் அடிக்கும்போது நீ கால் பண்ணு! ஐ வில் மேக் யு ஃபீல் குட். சரியா?"

"ஓ கே, டார்லிங்!"

"குட் கேர்ள்!"

"ஐ லவ் யு வெர்ரி மச், கண்ணன்."

"ஐ நோ, டார்லிங்."

-தொடரும்

Wednesday, January 20, 2010

இதுதான் எந்திரன் கதையாம்! நல்லாயிருக்கு!



பொதுவாக இண்டியா க்ளிட்ஸ்ல official news தான் ரிலீஸ் பண்ணுவாங்க. இந்த கதை மேட்டரும் official news னு நம்புவோம். எந்திரன் கதை என்னனானு ஆரம்பிச்சு, ரஜினி ரெண்டு ரோலாம்! விஞ்ஞானி ரஜினி அப்புறம் ரோபாட் ரஜினி!

சரி, இது பழைய தெரிந்த "கதை" தானே? புதுசா என்ன?

ரோபாட் ரஜினியை விஞ்ஞானி ரஜினி உருவாக்குவாராம். ரோபாட்டுக்கு நெறைய அறிவை அள்ளி வழங்கி, அதை வச்சு பல நன்மைகளை செய்வதற்காக முயல்வாராம்! ரோபாட் ரஜினி மனிதனாகவே ஓரளவுக்கு மாறிவிடுமாம். "அது" நம்ம ஐஸைப் பார்த்து விழுந்து தன்னுடைய சிலிக்கான் ஹார்ட்டை ஐஸ்ட்ட விட்டுடுமாம். நெனச்சுப்பார்க்கவே நல்லாயிருக்கு இல்லையா? ரோபாட் லவ் லாம் பண்ணி, டூயட் எல்லாம் பாடுவது?

சரி, ரோபாட் நல்ல காரியம் செய்துகொண்டிருக்குமாம். நல்லது செய்தால் வாழவிடுவானா நம்ம ஆளு? ரோபாட்டையும் வாழவிடமாட்டாங்களே ! ரோபாட் ரஜினியை காலிபண்ண முயற்சிப்பாங்களாம் நம்ம வில்லன்கள். நம்ம சயண்டிஸ்ட் ரஜினி, ரோபாட் ரஜினியை வைத்து வில்லன்களை அடி அடினு அடிச்சு நொறுக்கிவிடுவாராம்.

இப்படித்தான் இண்டியா க்ளிட்ஸ்ல கதை சொல்லியிருக்கு. இது உண்மையான கதையோ இல்லை யார்விட்ட கதையோ! இது மாதிரி நெறையக் கதை ஏற்கனவே வந்திருக்குனு நெனைக்கிறேன்!

யு கே பாக்ஸ் ஆஃபிஸில் ஆயிரத்தில் ஒருவன்!


விமர்சனம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஹானஸ்ட் ஒப்பீனியன்! ஆனால் பாக்ஸ் ஆஃபிஸ் முடிவுகள் மக்கள் தீர்ப்பு! எனக்குப் பிடிக்காத பல படங்கள் மிகப்பெரிய வசூலை தந்து பாக்ஸ் ஆஃபிஸ்ல சாதனை செய்துள்ளன!

* சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் ஓப்பனிங் க்ரேட்!

* Behindwoods $ Sify ல அதனுடைய மிகப்பெரிய ஓப்பனிங் பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு கோடிக்குமேல் முதல் வாரத்தில் கலக்சன் செய்துள்ளதாக Sify சொல்லியுள்ளது.

சந்தோசம்தான்! ஆனால் 4 வாரங்களில் எப்படியிருக்கும் என்பதை இன்று சொல்லமுடியாது! அதை பொறுத்துத்தான் பார்க்கனும்!

சரி, யு கேல இந்த பிரம்மாண்டமான படம் எப்படிப்போச்சு? மலேசியால எப்படிப் போகுது? என்று பார்ப்போம்!

* மலேசியா பாக்ஸ் ஆஃபிஸ்ல நல்லாப் போனாலும் சமீபத்தில் அதை ஒழுங்காக அப்டேட் செய்வதில்லை! அதனால் அந்த டேட்டா ஒரு மூனு மாசத்துக்கு கிடைக்காது!

* யு கே பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட் மட்டும் கிடைத்துள்ளது!

22 Aayirathil Oruvan Ind £29,517 Ayngaran 0 1 7 £4,217 £29,517



7 திரையரங்குகள் கலக்ஷன் (29,517 யு கே ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ்)

இந்த வாரத்தில் யு கே பாக்ஸ் ஆபிஸ்ல, ஆயிரத்தில் ஒருவன் 22 வது இடத்தைப்பெற்றுள்ளது!

Tuesday, January 19, 2010

சாருவை ஓவர்டேக் செய்த கேபிள் சங்கர்!

பதிவர் கேபிள் சங்கர் அவர்களின் சினிமாப் பதிவுகள் மற்றும் நிதர்சனக்கதைகள் எழுதுவதை பார்த்து இருக்கேன். ஆனால் பதிவுலகில் அவர் பெரிய ஆள் என்பது என் சிறிய அறிவுக்குத் தெரியாது. கோலிவுட்ல ஏதோ படம் எடுக்க முயற்சிக்கிறார்னு அவர் ப்ரஃபைல்ல படிச்சு இருக்கேன். ஆனால் எனக்குப் போதுமான நேரமின்மையால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்ததில்லை. அவர் வலைதளத்தை தொடர்வதும் இல்லை.

சமீபத்தில் நான் கவனித்தது என்னவென்றால் அலெக்ஷா ட்ராஃபிக் ரிப்போர்ட் அவர் வலைதளத்திலும், சாரு ஆண்லைன்லயும் ஒழுங்காக அப்டேட் செய்யப்படுகிறது.

என்னுடைய ஆச்சர்யம் என்னனா வலைதள பிரபல எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் சாருவின் வலைதலத்தின் ட்ராஃபிக்கைவிட, ஜெயமோஹனின் வலைதளத்தைவிட கேபிள் சங்கருடைய வலைதள ட்ராஃபிக் அதிகமாக உள்ளதாக காட்டப்படுகிறது.

charuonline.com

Traffic Rank
82596

Jeyamohan.in

Traffic Rank
79532

cablesankar.blogspot.com

Traffic Rank
73265


To my little brain, Cable sankar looks like a down-to-earth kind of a guy. May be charu and jeyamohan are also that kind? I dont know much about them. Sankar does not seem to have any big ego or whatsoever as far as I can see. He let others comment on his posts freely. When I find his blog's Alexa rating is higher than well-reputed charuonline and jeyamohan.in, I felt WOW!!!!

பின்குறிப்பு: என்னுடைய முயற்சி, கேபிள் சங்கரை பாராட்டவே ஒழிய, சாருவையோ, ஜெயமோஹனையோ இறக்க அல்ல!

"நானா? என் கவிதையா?" கடலை கார்னர் (40)

"என்ன என் பெட் ல படுத்து இருக்கீங்க, பிருந்தா மேடம்?"

"எனக்கு அந்த "ட்வின் சைஸ்" பெட் பிடிக்கலை!"

"நான் வேணா அங்கே படுத்துக்கவா?"

"ஏன் உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்லையா?"

"அப்படினா?"

"ஒரே பெட்ல படுத்து தூங்கினா என்ன? ஏன் பயப்படுற?"

"உங்க பக்கதிலேயா?"

"நான் யாரோ ஒரு பெண்ணுனு நெனச்சுக்கோ. மனசு சுத்தமா இருந்தா பக்கத்திலேயே படுத்து தூங்கலாம்!"

"இப்போ என்ன சொல்றீங்க, மேடம்?"

"நம்ம ரெண்டு பேரும் ஒரே பெட்லதான் இப்போ தூங்குறோம்!"

"சரி மேடம்! எனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு!"

"அப்போ நான் அலையிறேன்னு சொல்றியா?"

"இல்லை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்! அதுவும் இந்த கெட் அப் ல அதான் கொஞ்சம் பயம்மா இருந்தது."

"உனக்கு கவிதை எழுதத்தெரியுமா?"

'தெரியாது! உங்களுக்கு?"

" எனக்கும் தெரியாது!"

"பொதுவா அறிவியல்ல இண்டெரெஸ்ட் உள்ளவங்களுக்கு கவிதை எல்லாம் வராதாம், மேடம்!"

"ஏனாம்?"

"அதென்னனு தெரியலை. அவங்களுக்கு இயற்கை ரசனை கம்மியாம்!"

"அதெல்லாம் இல்லை! எனக்குத்தெரிய அறிவியல் படித்தவர்கள் நெறையப்பேர் நல்ல கவிதை எழுதி இருக்காங்க! சும்மா விடாதே!"

"அப்படியா? சரி, என் ரசனைக்கு முன்னாடி எந்தக் கவிஞனும் பக்கத்தில்கூட நிக்க முடியாது. உங்களை நான் எப்படி ரசிக்கிறேன் தெரியுமா?"

"எப்படி ரசிக்கிற?"

"ரொம்ப ரொம்ப!"

"நெஜம்மா?"

"எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது மேடம். அதான் உங்களுக்கு எடு பிடி வேலையெல்லாம் செய்றேன்."

"பொய் தானே?"

"நெஜம்மாத்தான்! அதை ஏன் திரும்ப திரும்ப கேக்குறீங்க?'

"சும்மாதான். அப்போ என்னை வச்சு ஒரு கவிதை எழுது!"

"அதுமட்டும் வராதே!"

"என்னை ரசிக்கத் தெரியுதுல?"

"ஆமா"

"அதையே சும்மா எழுத வேண்டியதுதானே?"

"நான் என்ன எழுதினாலும் அதை ஏற்கனவே யாராவது அழகா எழுதி இருப்பாங்க! அதுனால ஒரிஜினல் கவிதையா இருக்காது. அதான் இந்த கவிதைப் பக்கமே போறதில்ல"

"சும்மா ஏதாவது எழுது"

"கவிதை எப்படி எழுதுறதுனு இலக்கண்ம் படிக்கலையே!"

"இலக்கியத்தில் இருந்து வந்ததுதான் இலக்கணம்!"

"அதனால?"

"நீ என்னை வச்சு ஒரு கவிதை எழுது. நீ எழுதுறதுதான் கவிதை. ஹைக்கூ மாதிரி அது ஒரு புதிய இலக்கியம். அதுக்கு பின்னால இலக்கணம் எழுதிக்கலாம்!"

"அய்யோ உங்களுக்கு சுத்திப்போடனும் மேடம்! என்ன ஒரு அறிவு உங்களுக்கு?"

"அதெல்லாம் அப்புறம் போடலாம். மரியாதையா ஒரு கவிதை எழுது! சும்மா ட்ரைப் பண்ணு."

"சரி எழுதுறேன்"

"என்ன என்னையே பார்க்கிற?"

"சரி நீங்க கோவிச்சுக்காம கொஞ்சம் எனக்கு ஒர் டம்ளர்ல தண்ணி எடுத்துட்டு வர்றீங்களா?!

"கவிதை எழுத ஆரம்பிச்சதும் ஆட்டிட்டுடே மாறுது?'

"பொதுவா கவிஞர்கள் எல்லாம் அப்படித்தானே, மேடம்?"

"சும்மா கதை பேசாமல் ஒரு நல்ல கவிதை எழுது. நான் போய் எடுத்துண்டு வர்றேன்!"

"இங்கே வாங்களேன்!"

"என்ன?'

"இல்லை சும்மா ஒன்ஸ் மோர்க்காகத்தான்! இப்போ அழகா நடந்து போங்க!"

"நடக்கிறதை ரசிக்கிறயாக்கும்?"

"ஆமா!"

"கவிதையை எழுது!"

*************************************

"எங்கே பார்க்கலாம்! என்ன கவிதை எழுதி இருக்க?"

"கவிதையே வர மாட்டேங்கிது, மேடம்!"

"ஏன்?"

"எத்தனை தர சொல்றது? நான் அந்த விசயத்தில் மக்கு!"

"முயன்றால் முடியாதது இல்லைனு சொல்றாங்க?"

"அதெல்லாம் பொய் மேடம். ஒரு சிலரால் ஒரு சில விசயம் செய்ய முடியாது!'

"சரி என்ன தான் எழுதி இருக்கனு பார்ப்போம்?"

"யார்ட்டயும் சொல்லக்கூடாது?"

"சரி, காட்டு!"

"சிரிக்கக் கூடாது?"

"சரி, சிரிக்கமாமல் வாசிக்கிறேன்"

"யார்ட்டயும் சொல்லிக் கேவலப்படுத்தக்கூடாது?"

"சே சே அதெல்லாம் பண்ண மாட்டேன்"

"இந்தாங்க மேடம்!"


ஏய் பிருந்து!

நீ லுங்கியில் இருக்கும் அழகு

என் கண்களுக்கு விருந்து!"


ஏய் பிருந்து!

நீ என் இதயத்தை

திருடி வைத்திருக்கும் பருந்து!


ஏய் பிருந்து!

என் இதயவலிக்கு

உன் புன்னகைதான் மருந்து!


"என்ன சிரிப்பு? சொன்ன வார்த்தையை காப்பாத்தனும், மேடம்!"

"எனக்கு சிரிப்பு அடக்க முடியலை!"

"இப்படித்தான் ஏதாவது எழுத வருது!"

"எனக்குப் பிடிச்சு இருக்கு. ஆனால் இது என்ன கவிதையா?"

"யாருக்குத் தெரியும்? உங்களுக்கும் கவிதைனா என்னனு தெரியாதே மேடம்!"

"எனக்குக் கொஞ்சம் தெரியும்!"

"எழுதவா?'

"இல்லை இல்லை, கவிதைனா எதுகை மோனையுடன் இருக்கனும். அது இதுனு படிச்சி இருக்கேன்"

"அதெல்லாம் அந்தக் காலம். இப்போ புதுக்கவிதைலாம் அப்படி இல்லையாம்!"

"ஆனா நிச்சயம் இது கவிதை இல்லை!"

"சரி நான் ஒரு ஏ கவிதை சொல்றேன் கேக்கிறீங்களா?"

"என்னைப் பத்தியா?"

"ஆமா"

"சொல்லு"

"பக்கத்தில் வாங்க! உங்க காதில் சொல்லுறேன்"

" "

"இப்படியெல்லாம் வார்த்தை போட்டு கவிதை எழுதுவாங்களா? ரொம்ப மோசமான கற்பனை! ரொம்ப ரொம்ப மோசம்!"

"நானா? என் கவிதையா?"

"ரெண்டும்தான். ஆனா உனக்கு நல்லா ஏ கவிதை எழுத வருது"

"உங்களைப் பார்த்தால் இந்த மாதிரி கவிதைதான் வருது எனக்கு"

"பார்த்தா பக்கா ஜெண்டில் மேனா இருக்க? இப்படி எல்லாம் கவிதை எழுதுற?"

"சரி நீங்க ஹிப் ஹாப் சாங் ல உள்ள லிரிக்ஸ்லாம் வாசிச்சு இருக்கீங்களா?'

"இல்லையே!"

"லவ் ஹம்ப்ஸ் லிரிக்ஸ் கேட்டுப்பாருங்க!"

"அதெல்லாம் என்ன கவிதையா?'

"கதைக்கா லிரிக்ஸ் இருக்கும்?"

"சரி வந்து படு தூங்கலாம்!"

-தொடரும்

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்! வீணாப்போன கார்த்தி!


முதல்ப்பாதியில் ரீமா சென், ஆண்ட்ரியா, கார்த்தியை வைத்து ஒரு சாப்ட் போர்ன் த்ரீசம் எடுக்க முயற்சி செய்துள்ளார் இந்த சைக்கோ ராகவன்! இல்லைனு சொன்னா அது பச்சைப் பொய்! இது முதல் பாதி. சரி, இரண்டாம் பாதி? ஒருமாதியான போர் அடிக்கும் காமசூத்ரா கான்சப்ட்தான்!

கார்த்தி ஒரு மாவீரனாக பருத்திவீரனில் அறிமுகமாகி இன்னும் நம் மனதில் நிற்கிறார். இன்று இந்த அரைகுறை ஜீனியஸ் செல்வாவின் படத்தில் இப்படி வீணாகிவிட்டார்! 36 கோடி செலவழித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில் பலியாக்கப் பட்டுள்ளார் கார்த்தி!

பிரம்மாண்டம்! இருக்கத்தான் செய்யுது. அதுக்காக? பிரம்மாண்டத்துக்காக பார்க்கனும்! இவர் போட்டிருக்க எஃபர்ட்க்காக பார்க்கனும் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு! அவன் ஆசையை தீர்க்க அவன் முயற்சிக்கிறான்? காசு கொடுத்து படம் பார்க்கிறவனுக்கும் ஆசை இருக்கு! ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வேணும் என்கிற ஆசை. இரண்டாவது பாகத்தில் பொறுமையை சோதித்து சோதித்து கொல்றாங்கப்பா! க்ளைமேக்ஸ்? அதில் ஒண்ணும் பெருசா இல்லை!

* பார்த்திபன்! என்னத்தைச் சொல்ல? He did not do ANYTHING impressive at all!

ஆதிகால கத்திச்சண்டை போடும் ஆதிவாசிகளை துப்பாக்கி பீரங்கி வைத்து கொல்வதில் பிரம்மாண்டம்! எதற்காக இந்த பிரம்மாண்டம்? மாடர்ன் டெக்னாலஜி கத்தியை வெல்வதை வீரபாண்டியகட்டப்பொம்மனிலேயே பார்த்தாச்சு! இதுக்காக ஒரு படமா?

படத்தில் காதலும் இல்லை, எந்த இரண்டுக் கேரக்டர்கள் இடையிலும் எந்த விதமான பிடிப்பும் இல்லை! நட்பும் இல்லை! அன்பும் இல்லை! இதயமே இல்லா மனித மிருக கேரக்டர்கள்தான் மிஞ்சுகிறது.

* Remo Sen acts like a real BITCH!

* Andrea's character is worthless as it has nothing like a loveable or likeable character!

எம் ஜி ஆர் நடிக்க பந்துளு இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு க்ளாசிக்! இன்றும் ரசிக்கலாம்.

ஆனால் இன்று, சைக்கோராகவன் இயக்கத்தில்வந்துள்ள ஆயிரத்தில் ஒருவன்? 36 கோடியை இப்படியும் வேஸ்ட் செய்யலாம் என்கிற ஒரு பாடம்.

இதில் சாதிச்சது ஒண்ணே ஒண்ணுதான். தன் சைக்கோத்தனமான ஆசையை 36 கோடியை செலவழித்து கார்த்தியை பலிகொடுத்து தீர்த்துக்கிட்டார்.
ஆயிரத்தில் ஒருவன் பெரிய அளவில் வெற்றிபெற சாண்ஸே இல்லை!

ஆயிரத்தில் ஒருவன் சாதித்தது? வேட்டைக்காரனுக்கு பாக்ஸ் ஆஃபிசில் மறுவாழ்வு கொடுத்தது!

பின்குறிப்பு: நண்பர் ஒருவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவது தப்பு. அதாவது பல விமர்சனங்களை தொகுத்து வழங்குவது வெட்டி வேலை என்கிறார். பொதுவா என் விமர்சனம் இப்படித்தான் இருக்கும் அதான் மற்றவர்கள் விமர்சனத்தை முதலில் தருவது. :)

Saturday, January 16, 2010

குட்டி எப்படிங்க இருக்கு? சுமார்தான்!



தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுத்த தனுஷ், இப்போ "குட்டி"யா வந்து இருக்கார். திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி மோஹினி, படிக்காதவன் போன்ற படங்கள் அளவுக்கு குட்டி வெற்றிபெறச் சாண்ஸே இல்லைனு சொல்றாங்க. படம் பெரிய டப்பானு யாரும் சொல்லல. ஆனால் ஒண்ணும் பெருசாவும் படத்தைப் பத்தி எதுவும் சொல்லல.

ஆயிரத்தில் ஒருவனுக்கு எல்லாவகையிலும் எதிரப்பதம்தான் குட்டி போல இருக்கு.

ஆயிரத்தில் ஒருவன்: குடும்பத்துடன் (குழந்தைகளுடன்) பார்க்க முடியாதாம். ரீமாசென் ரொம்ப தாராளமாம்.

குட்டி: ஸ்ரேயா இழுத்து போத்திக்கொண்டு வர்ராராம். குடும்பத்தோட பார்க்கலாமாம்.

ஆயிரத்தில் ஒருவன்: 36 கோடி பட்ஜெட் படம். விழுந்தா பெரிய அடி.

குட்டி: சின்ன பட்ஜெட் படம்தான். விழுந்தாலும் குட்டியா ஒரு காயத்தோட சமாளிக்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன், மிகப்பெரிய ஓப்பனிங். குட்டி ரொம்ப அமைதியான ஓப்பனிங்!

சரி, நம்ம வலையுலக விமர்சகர்கள் குட்டிப் பத்தி என்ன சொல்றாங்கனு பார்ப்போம்!

Rediff : ஒரு ரெண்டரை ஸ்டாரைக் கொடுத்து.ஜாலியான படம்னு சொல்றாங்க!

sify : அழகான பொழுது போக்குப்படம்னு சொல்றாங்க.

Indiaglitz: ரொம்ப பெருசா ஒண்ணும் இல்லை. குட்டிதான் னு சொல்றாங்க.

இதுல வேடிக்கை என்னனா, எப்போவும் நல்ல விமர்சனம் மட்டுமே எழுதும் இண்டியா க்லிட்ஸ் ரொம்ப க்ரிட்டிகல்லா விமர்சனம் எழுதுறாங்க. இவங்க விமர்சனம்தான் இந்த மூனுல ரொம்ப க்ரிட்டிக்கல்லா இருக்கு. திருந்தீட்டாங்களா?

சரி, ஓவரால்லா குட்டி சுமார்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை! கலக்சன் எப்படி இருக்குனு பார்ப்போம்.

Friday, January 15, 2010

சினிமாப் பதிவுகள் எழுதுவது தப்பா?


பதிவுலகில் சினிமா பற்றி பதிவுகள் எழுதுவது ஏதோ தரக்குறைவான பதிவை எழுதுவதுபோல ஒரு சில பெரிய மனிதர்கள் விமர்சிக்கிறாங்க. என்னை கேட்டீங்கனா சினிமா சம்மந்தமா எழுதுறதென்னவோ அவ்வளவு தரக்குறைவான விசயம் இல்லை. வியாபார நோக்கில்லாமல், உண்மையைச் சொல்லி உங்கள் மனதில் உள்ளதை எழுதினால் எந்த எழுத்தும் தரமான எழுத்துத்தான். அதான் கல்கி, விகடன் ல கூட சினிமா பத்தி இன்னும் எழுதுறாங்க!

இன்னொரு மேட்டர் என்னன்னா, பொதுவா சினிமாப் பத்தி ஏதாவது எழுதினாத்தான் பலர் உங்க வலைதளப் பக்கமே வர்ராங்க. நீங்க உங்க நெட்வொர்க்கை பில்ட் பண்ண நேரமில்லைனு வச்சுக்கோங்க, நீங்க ஏதாவது நல்ல பதிவு எழுதினாலும் அதை யாரும் கண்டுக்கப் போவதில்லை. அப்படி நீங்க எழுதிய பதிவை பலர் பார்வைக்கு கொண்டு செல்லனும்னா, அதுக்கப்புறம் ஏதாவது சினிமாப் பதிவு எழுதி அவங்களை அழைச்சு வந்து அந்தப்பதிவை பார்க்க வைக்கலாம். சினிமாப்பதிவு ஒரு 'பெய்ட்" மாதிரி. உங்க வலைதளத்துக்கும் நாலு பேர் வர்ராங்கனு ஒரு ஃபீலிங்ஐ கொடுப்பதே சினிமாவும் சினிமாப்பதிவும்தான். சினிமா இல்லாமல் தமிழ் வலையலகம் இல்லவே இல்லை.

சினிமாவ விட்டுப்புட்டு பொதுவா நம்ம என்ன செய்றோம்?


* எனக்குப்பிடித்த பதிவர்னு சொல்லி யாரையோ ஒருவரை சந்தோஷப்படுத்துறோம்னு பல நல்ல பதிவர்களை கஷ்டப்படுத்துகிறோம். உங்களுக்கு பிடிச்ச பதிவரை மைக் போட்டு கூப்பிட்டு சொல்லனுமா என்ன?

* ஜோக் அடிக்கிறோம்னு சொல்லி பல குறையுள்ளவர்களை சங்கடப் படுத்துறோம்

* ஞாநியும் சாருவும் அடிச்சுக்கிட்டு நாறுவதை எழுதுறோம். அவங்க எழுத விசயம் இல்லாமல்தான் இப்படி சண்டை போட்டு கூட்டம் சேர்க்கிறாங்க! நம்ம அவங்க சண்டையை வச்சு கொஞ்சம் கூட்டம் சேர்க்கிறோம்!

* அப்புறம் இந்த மதவெறியன் துக்ளக் சோ, எங்கே பார்ப்பான்னு தேடுறானாம்! ஏதோ ஒருவகையில் பாப்பானை திட்டுவதுபோல பார்ப்பான் பெருமை பேசி, பாப்பானைப்பத்தி ஆராஞ்சி, பாப்பானை விமர்சனம் பண்ணி, நானும் பாப்பான், நானும் பிராமணன் னு சொல்லிக்கொண்டு திரியலலைனா சில லூசுப் பார்ப்பான்களுக்கு தூக்கம் வராது . சரி, அவந்தான் ஏதோ லூசுப்பய, பார்ப்பான், பார்ப்பான்னு சொல்லி தன் பத்திரிக்கையை விக்க வைக்க எழுததுறான் போகட்டும்னு விட்டுறலாம். அதை காப்பி- பேஸ்ட் பண்ணி அதுக்கு ஒரு பெரிய விளம்பரம் இணைத்தில் வேற. ரொம்ப அவசியம் பாருங்க, இல்லாத பார்ப்பாணை தேடிக் கண்டுபிடிக்கிறது!

* அப்புறம் நம்ம அரசியல் சாக்கடை பத்தி விஜய்ல இருந்து விசயகாந்து வரைக்கும் பேசி, நம்ம காலஞ்சென்ற கடவுள் எம் சி ஆர்ல போய் முடிப்போம்! நாட்டை பிடிக்கிறவரைதான அவன் நடிகன் கூத்தாடி! பிடிச்சு ஆண்டுட்டா, அவர் தலைவராயிடுவாரே! இல்லை தெய்வம் ஆயிடுவார்.

இதுபோல மேட்டரெல்லாம் எழுதினால் என்ன பெரிய விசயங்களை அலசி ஆராய்ந்துட்டோமா என்ன?

சினிமாவா இருந்தால் என்ன சில உண்மைகளை அடிப்படையா வைத்து எழுதினால் எந்த எழுத்துமே நல்ல எழுத்துத்தான்!

Thursday, January 14, 2010

அதெப்படி பாத்ரூம் பெட்ரூமாகும்? கடலை கார்னர் (39)

"போய் டைனிங் டேபிள்ல உட்காருங்க பிருந்தா மேடம்! நான் எல்லாவற்றையும் எடுத்துட்டு வந்து டேபிள் செட் பண்ணுறேன்! அப்புறம் சாப்பிடலாம்"

"பாத்ரூம் எங்கே இருக்கு?"

"நீங்க போனமுறை வந்தபோது இருந்த அதே இடத்திலேதான் இருக்கு!"

"என்ன நக்கலா? வந்து காட்டு!"

"நான் வேணா வந்து ஹெல்ப் பண்ணவாங்க மேடம்?"

"பாத்ரூம்ல வந்து என்ன ஹெல்ப் பண்ணப்போற?”

“என்ன ஹெல்ப்னாலும் கேளுங்க, மேடம், பண்ணுறேன்.”

“வந்து எனக்கு பேண்டிஸ் கழட்டிவிடுனு சொன்னா செய்வியா?!"

"உங்க கை நல்லாத்தான இருக்கு, மேடம்?"

"நான் உன் எஜமானி! நான் என்ன சொன்னாலும் செய்யனும்! புரியுதா?"

" நீங்க என்ன கைல மருதாணீயா வச்சு இருக்கீங்க?"

" மருதாணி வச்சிருந்தா செய்வியா?"

"இதெதுக்கு விபரீதம், மேடம்? அப்புறம் உங்க அழகுல நான் மயங்கி, பாத்ரூம் பெட் ரூமாயிடும்! அதான் சொன்னேன்"

"அதெப்படி பாத்ரூம், பெட்ரூம் ஆகும்?"

"அந்த மேட்டரை அப்புறம் சொல்றேன். சீக்கிரம் போயிட்டு வாங்க சாபிடலாம்!"

*************************

"வாங்க! எதிரெரா உட்காருவோமா? இல்லை பக்கதுல பக்கத்தில் உட்காரனுமா, மேடம்?"

"என் பக்கத்திலேயே உடகாரு! அப்போத்தான் ஊட்டிவிட முடியும்?"

"எல்லாம் என் தலை எழுத்து மேடம்!"

"என்ன ரொம்ப சலிச்சுக்கிற?"

"இல்லை மேடம் நான் கொடுத்து வச்சிருக்கனும். சரி சாப்பிடுவோமா? ஒரே ப்ளேட்தான். சரியா?"

"சரி"

"கைலயே தரவா? இல்லை ஸ்பூன்ல தரவா?"

"ஸ்பூன்லாம் வேண்டாம்!"

" ஆ காட்டுங்க!"

"ஆ!"

அவள் வாயில் கிஸ் பண்ணினான் கண்ணன்.

"பொறுக்கி! என்ன கிஸ் பண்ணுற!"

"எனக்கு உங்க வாயைப்பார்த்தா கிஸ் பண்ணத்தான் தோனுது"

"ஏய் ரொம்ப நல்லா இருந்துச்சு"

"அது ஏன் தெரியுமா?"

"ஏன்?"

"நானா ஆசைப்பட்டு கொடுத்தது. உங்க அதட்டலுக்காக இல்லை!"

"சரி, இப்போ எனக்கு பசிக்கலை. இன்னொரு தர கிஸ் பண்ணு!"

"பொய் சொல்லக்கூடாது மேடம். அது சும்மா அப்பெட்டைசர். இப்போ கொஞ்சம் சாப்பிடலாம்"

"நீ ஊட்டிவிடுறதுனால இந்த தயிர்சாதம் ரொம்ப டேஸ்டா இருக்கு!"

"சரி கொஞ்ச நேரம் பேசாமல் சாப்பிடுங்க!"

"எனக்கு ஒரு வாய் உனக்கு ஒண்ணு, சரியா?"

"சரி, மேடம்!"

****************************

"நல்லா சாப்பிட்டீங்களா?"

"உன் சமையல் நல்லா இருந்துச்சு. நீ ஹவ்ஸ் ஹஸ்பண்டா இருக்கலாம்."

"இப்படி ஒரு ஆசையா?"

"ஏன் இருக்ககூடாதா?"

"இருக்கலாம். உங்களுக்கு கை கழுவுற வேலை இல்லை. பக்கத்தில் வாங்க!"

"எதுக்கு?"

"உதட்டில் தயிர் கொஞ்சம் ஒட்டி இருக்கு! அதை மட்டும் க்ளீன் பண்ணி விடுறேன்"

"கிஸ் பண்ணியே என் வாயை க்ளீன் பண்ணி விடுறியா?"

"நல்ல ஐடியா. எதுக்கு, தேவையில்லாமல் வாட்டர் வேஸ்ட் பண்ண?"

"இந்த கிஸ் என்ன டெஸ்ஸேர்ட்டா?"

"ஆமா! எது பிடிச்சது?"

"ரெண்டும்தான்!"

************************

"சரி எனக்கு லுங்கியும் சட்டையும் கொடு! நான் நைட் ட்ரெஸ் போட்டு வரேன்!"

"ஒரு நிமிஷம் இருங்க மேடம்! இந்தா வர்றேன்.”

“நான் பாத்ரூம்ல இருக்கேன். வந்து கதவைத் தட்டு”



*******************

“ட்க் டக் டக்! கதவைத்திறங்க மேடம்!”

“எங்கே என் நைட் ட்ரெஸ் ?”

“இந்தாங்க லுங்கியும், என் சட்டை ஒண்ணும் . இந்த ப்ரிண்ட் அவுட் ல எப்படி லுங்கி கட்றதுனு எப்படினு தெளிவா சொல்லி இருக்கு மேடம். நல்லா சமர்த்தா கட்டிட்டு, சட்டையை மாட்டிட்டு வாங்க!”

“சரி போ. நான் ஹெல்ப் வேணும்னா கேக்கிறேன்.”

**************************

“இந்த லுங்கி கெட் அப் ல ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்!”

“என்ன கொழுப்பா? எனக்கு லுங்கி இடுப்பிலே சரியா நிக்க மாட்டேங்கிது. சும்மா ஏதோ முடிச்சுப்போட்டு வச்சிருக்கேன்”

"திரும்பி நில்லுங்க பின்னால எப்படி இருக்குனு பார்ப்போம்?"

"பின்னாலயா? எதுக்கு?"

"அதான் லுங்கி எப்படி ஃபிட் ஆகி இருக்குனு"

"எப்படி இருக்கு?"

"சட்டை அந்த ஏரியாவை மறைச்சிருச்சு. அதனால சரியா தெரியலை. சரி திரும்பி நில்லுங்க!"

"லுங்கி சரியா இடுப்பிலே நிக்க மாட்டேன்கிது."

“நல்லாத்தானே கட்டி இருக்க மாதிரி இருக்கு? எங்கே சட்டையை மேலே தூக்குங்க! இடுப்பிலே எப்படி கட்டி இருக்கீங்கனு பார்க்கிறேன்?”

" போடா!" ”

"லோ ஹிப்பா ஹை ஹிப்பா?"

"அப்படினா?"

" அப்படினா...என்னதான் செஞ்சிருக்கீங்கனு காட்டுங்க, பார்ப்போம்!"

"இல்லை வேணாம்!"

“ஆமா, அதுக்குள்ள உங்களை யாரு இது ரெண்டையும் கழட்டிப் போடச் சொன்னா?”

“ அதை எல்லாம் தொடாதேடா பொறுக்கி! நைட் எனக்கு ஃப்ரீயா இருந்தாத்தான் பிடிக்கும்.”

“சரி, தொடலை. இது ரெண்டையும் எடுத்து இந்த பாஸ்கட்ல போடுங்க!'

"போட்டாச்சு! ஆமா என்ன நமட்டுச் சிரிப்பு? "

"லுங்கி இடுப்பிலேதான இன்னும் இருக்கு! கழண்டு விழுந்தாலும் சட்டை உங்க உடம்பை மறைச்சுக்கும். கவலைப்படாதீங்க!”

"வேணும்னே என்னை லுங்கிகட்ட வச்சு வேடிக்கை பார்க்கிறயா?”

"நீங்க ரொம்ப மோசம் மேடம்!"

"நானா மோசம்? "

“ஆமா, லுங்கி சரியா கட்டப்பழகிறதுக்கு முன்னாலே உங்க அண்டர்கார்மெண்ஸை எல்லாம் நானா கழட்டச் சொன்னேன்? வேணும்னே அதை கழட்டிப்போட்டு என் கற்பனையை தூண்டி விடுறீங்க.”

"என்ன கற்பனை பண்ணுற இப்போ?"

"இடுப்பிலே எப்படி அந்த லுங்கி நிக்குதுனுதான்"

"பொய்!"

"வேறென்ன நான் கற்பனை பண்ணுறேன்?"

" எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்! நீ ரொம்ப கெட்ட பையன்!"

" சரி, சரி, போய் உங்க பெட்ல உட்காருங்க மேடம். நான் வர்றேன்!"

"சீக்கிரம் வந்து சேரு!"

"பார்த்து! லுங்கி தடுக்கி விழுந்துடாதீங்க!"

"எல்லாம் உன்னால்தான்."

"லுங்கியை மடிச்சுக் கட்டிக்கிறீங்களா?"

"மடிச்சா!"

"ஆமா, எங்க ஊரு ரவ்டிகள் மாதிரி?"

"அதெல்லாம் வேணாம், போ!"

"சரி, பெட் ரூம்க்கு தடுக்கி விழுந்திடாமப் போங்க! நான் கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டு வர்ரேன்."

-தொடரும்

செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன்! விமர்சனங்கள்!


செல்வராகவன் நெறைய பொருட்செலவில் இரண்டுவருடங்களாக எடுத்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப்படம் விழுந்தால் செல்வாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான். கார்த்திக்கும் இது இரண்டாவது படம். இவருடைய எதிர்காலமும் இந்தப்படம் நிர்ணயிக்கலாம். குசேலனில் அறிமுகமான ஜி வி ப்ரகாஷ் தான் இசையமைப்பாளர். பொதுவா செல்வா படத்தில் யுவன் தான் இசையமைப்பார். இது ஒரு மிகப்பெரிய மாற்றம்.

பல இடஞ்சலுக்குப்பிறகு பொங்கல் தினமான தமிழ்ப்புத்தாண்டுக்கு படத்தை எப்படியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க! எங்க ஊரில் படம் ரிலீஸ் ஆகலை!

சரி, ஆன்லைன் பத்திரிக்கை விமர்சனங்கள என்ன சொல்கிறதுனு பார்ப்போம்!

Rediff : 3 1/2 Stars! (+ve review)

Sify: Verdict: Engaging (+ve review)

Indiaglitz:
Aayirathil Oruvan - Sweet and sour (+ve review as usual)


பத்திரிக்கை விமர்சகர்களுக்குப் படம் பிடிச்சி இருக்கு! செல்வராகவன், நிச்சயமாக ஏதோ புதுமையாக பழைமையைப் புகுத்தி இருக்கார் போல இருக்கு. இப்படி ஒரு ஆதிகாலத்து மன்னர்கள் சம்மந்தப்பட்ட கதையா இருக்கும்னு நானும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை! படம் பெரிய ஸ்க்ரீன்ல கட்டாயம் பார்க்கனும்போலதான் இருக்கு.

விமர்சனங்களைப் பார்க்கும்போது குழந்தைகளையும், நம்ம ஊர் பெண்களை படம் அவ்வளவாக் கவராதுனு தோனுது. அதனால ஒண்ணும் பெரிய நட்டம் இல்லை. அப்படியிருந்தும் படம் வெற்றியடைய வாய்ப்பு இருக்க்த்தான் செய்யுது.

பொதுவா ரெடிஃப் (Rediff) விமர்சனம் நல்லா இருந்தால் படம் நல்லாப் போகும்! அதனால் ஆயிரத்தில் ஒருவன் ஒரு வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்!

படம் வெற்றியடையுதோ இல்லையோ, வேட்டைக்காரன் கலக்சனை நிச்சயம் நிறுத்திவிடும் என்பது தெளிவா தெரியுது.

Wednesday, January 13, 2010

தென் அமெரிக்காவில் ஹெய்ட்டியில் நிலநடுக்கம்!


தென் அமெரிக்க தீவுகளில் ஒன்றான ஹெயிட்டியில் நேற்று வரலாறு காணாத மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது (7 மேக்னிட்டூட்)!

ஹெயிட்டியின்

மக்கள் தொகை: 9 மில்லியன்

மக்கள் இனம்: 95% கருப்பர்கள்

மதம்: ரோமன் கத்தோலிக்கர்கள்

பேசும் மொழி: பிரன்சு

ஹெயிட்டி ஒரு ஏழை நாடு. நிலையான அரசியல்வாதிகளோ, நல்ல தலைவர்களோ இல்லாமல் பல அரசியல் குழப்பங்கள் நிறைந்த நாடு. தென் அமெரிக்காவிலேயே மிகவும் ஏழையான நாடு.

யு என் $10 மில்லியன் நிதி உதவி செய்கிறது. அமெரிக்காவும் பண உதவியுடன், மீட்புப்பணிக்கு தங்கள் படையை அனுப்பி உதவுகிறது. ரோமன் கத்தோலிக்க சங்கங்கள் $5 மில்லியன் கொடுத்து உதவியுள்ளார்கள்.

பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. போதுமான மருத்துவ வசதியில்லாமல் மக்கள் பயங்கர கஷ்டப்படுகிறார்கள்.

ஆதவன் சூர்யா vs வேட்டைக்காரன் விஜய்!


ஓரளவுக்கு வேட்டைக்காரன் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஆடி அடங்கிவிட்டான். தமிழ்ப்புத்தாண்டுதினமான பொங்கல் ரிலீஸ்க்கு அப்புறம் கலக்ஷன் குறைந்துவிடும். சரி, விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் னு நான் இன்னும் சொல்லிக்கொண்டு இருந்தாலும். ஆதவனைவிட வேட்டைக்காரன் பெருசா ஒண்ணும் சாதிக்கவில்லை என்பது சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் மற்றும் ஓவெர் சீஸ் பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட்ஸ்ல ல இருந்து தெரிகிறது.

ஒருவேளை பி அண்ட் சி செண்டர்களில் வேட்டைக்காரன் ஓரளவுக்கு கொஞ்சம் கலக்சன் அதிகம் கொடுத்து இருக்கலாம்தான். ஆனால் வேட்டைக்காரன் ஒரு ஹிட் படமே ஒழிய சூப்பர் ஹிட் படமோ, ப்ளாக் பஸ்டரோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது!

இதுவரை சென்னையில் வேட்டைக்காரன் கலக்ஷன் 3.7 கோடிகள். (3 வாரம்)

ஆதவன், 6 வார கலக்சன் 4.66 கோடிகள்!

வேட்டைக்காரன் தமிழ்ப்புத்தாண்டு தினமான பொங்கலுக்கு அப்புறம் நல்லா போனாலும், 6 வாரங்களில் ஆதவன் கலக்சனை தொடும் அவ்வளவுதான். அதைவிட பெரிதாக சாதிக்க சாண்ஸ் இல்லை!

பாக்ஸ் ஆஃபிஸை ல, சூர்யா, விஜய்க்கு மிக அருகில் வந்துவிட்டார் என்பது தெளிவாகத்தெரிகிறது. இதேபோல் நிலைமை தொடர்ந்தால், விக்ரம், அஜீத்தை ஓவெர் டேக் பண்ணிய சூர்யா, விஜயையும் ஓவெர் டேக் பண்ண முடியும் என்றுதான் தோன்றுகிறது.

சிங்கம் எப்படிப் போகுதுனு பார்க்கலாம்!

Tuesday, January 12, 2010

காசுக்காகத்தான் டாக்டர் ஆகிறாங்களாம்!

"ஹலோ ராஜ்! எப்படி இருக்கீங்க? "

"மாதவனா? எப்படிப்பா இருக்க?"

"நல்லா இருக்கேன் ராஜ். உங்களோட பேசி ரொம்ப வருசமாச்சு. நல்லவேளை உங்க செல் # என்னிடம் இருந்தது."

"ஆமா வருசக்கணக்கா ஆயிடுச்சு இல்லயா மாதவா?"

"நான் கேன்ஸஸ் சிட்டி வரேன், ராஜ். உங்களை கட்டாயம் பார்க்கனும். ஃபேமியெல்லாம் எப்படி இருக்கு? பொண்ணுங்க, பிரேமா ஆண்ட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?"

"இங்கே எப்போ வர்ற, மாதவா?"

"இந்த வீக் எண்ட், ராஜ். சாட்டர்டே உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். அதே அட்ரெஸ்லதானே இருக்கீங்க, ராஜ்?"

"இல்ல மாதவா, நான் இப்போ வேற இடத்தில் இருக்கேன். நான் மட்டும் தனியாக ஒரு ஒன் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்ல."

"அப்படியா!"

"ஆமா. சரி, அட்ரெஸ் எழுதிக்கோ. பழைய அட்ரெஸ்ல ப்ரேமாவும், குழந்தைகளும் இருக்காங்க!"

"என்ன ஆச்சு, ராஜ்! எதுவும்..?"

"இல்லை, டைவோர்ஸ் எல்லாம் ஒண்ணும் ஆகல. வர வர ரொம்ப ஒத்துப்போகலை, அதான் தனியா வந்துட்டேன். இங்கே நீ வந்ததும் அதைப்பத்தி பேசலாம். சரியா?"

"சரி ராஜ். நான் சாட்டர்டே ஈவெனிங் வர்ரேன்"

"நான் ஏர்போர்ட் வந்து "பிக் அப்" பண்ணனுமா, மாதவா?"

"இல்லை, ராஜ், நான் கார் ரெண்ட் பண்ணுறேன். என்னைடம் ஜி பி எஸ் இல்லை. கூகிள் மேப்ல டைரக்ஷன்ஸ் எடுத்து நேரா உங்க அப்பார்ட்மெண்ட்க்கு வரேன். சண்டே ஈவெனிங் புறப்பட்டுப்போயிடுவேன்."

"சரி, பார்க்கலாம், மாதவா."

*******************

"வா மாதவா! எப்படி இருந்தது ஃப்ளைட்?"

"எல்லாம் அஸ் ஸ்கெடுல்ட். எந்த பிரச்சினையும் இல்லை, ராஜ்!"

"டின்னர்க்கு இங்கே புதுசா ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். உட்காரு இங்கே"

"என்ன ஆச்சு, ராஜ்? என்ன நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?"

"என்ன ஆச்சா? என் வயதில்தான் உனக்கு குடும்பப் பிரச்சினை எல்லாம் புரியும். நீ அடுத்த மாதம் கல்யாணம் பண்ணப்போறவன். வாழ்க்கையில் ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா இருக்க. உன்னிடம் என் கதையை சொல்லி பயமுறுத்த வேணாம். என்ன சொல்ற?' ராஜ் சிரித்தார்.

"சும்மா சொல்லுங்க ராஜ்!"

"பிரேமாவோட எதைப்பத்தி பேசுனாலும் பிரச்சினை வருது, மாதவா. எல்லாம் போச்சு. ஒருத்தரை ஒருத்தர் சுத்தமாக பிடிக்கலைனு தெரிஞ்சபிறகும் எதுக்கு நாடகம்னுதான்.. "

"உங்க மேரேஜ் லவ் மேரேஜ்தானே, ராஜ்?"

"நல்ல லவ் மேரேஜ் போ. அது எந்தக்காலத்தில அது ? அதே லவ் இன்னும் இருக்குமா என்ன? அதுவும் நம்ம ஊரில் பண்ற லவ் மேரேஜ் பத்தி உனக்குத் தெரியாதா? அதெல்லாம் ஒருமாதிரி இண்பாச்சுவேஷன் தான்ப்பா."

"உங்க மூத்த பொண்ணு, கிரிஜா, என்ன பண்றா? பயங்கர ஃப்ரைட் ஸ்டூடெண்ட் ஆச்சே அவள்?'

"அவளுக்கு 22 வயசாயிருச்சு இப்போ! பெரிய மனுஷி யாகிட்டா. நல்லாதான் படிச்சா. ஆனால் மெடிக்கல், இஞ்னியரிங்லாம் வெறும் "போரா"ம். நான் இங்லிஷ் மேஜர் எடுக்கிறேன்னு எடுத்தாள். இப்போ ஏதோ அடிஷனல் எடுக்கேஷன் டிக்ரீ வேணும்னு ஏதோ படிச்சுக்கிட்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறா. இவளைவிட சுமாராப் படிச்சவ எல்லாம் இப்போ மெடிக்கல் ஸ்கூல்ல இருக்காங்க! இவ இப்படி இருக்கா!"

"ஏன் ராஜ், சயண்ஸ், மெடிக்கல் ஃபீல்ட்ல எல்லாம் இண்டெரெஸ்ட் இல்லையா?"

"அவ எல்லாத்திலயும் "ஏ" தான் வாங்கினாள். நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் ஸ்டூடண்ட். சயண்ஸ்ல ரொம்ப இண்டெரெஸ்ட் இல்லைங்கிறா, ஆனாலும் சயண்ஸ்லயும் ஏ க்ரேட்தான் வாங்கினாள். பிஸினெஸ் ரிலேட்டடா எதுவும் பிடிக்கலையாம். இங்லிஷ் டீச்சராகப்போராளாம்!"

"ஏன் மெடிக்கல் பிடிக்கலையாம்?"

"அவ என்ன சொல்றா தெரியுமா? நான் வாழ்நாள் பூராம் "சிக் பேஷண்ட்"ஸை பார்க்க இஷ்டமில்லையாம். எந்நேரமும் உயிரோட போராடிக்கொண்டு இருக்கவங்களை பார்க்க இஷ்டமில்லையாம். இதெல்லாம் ஒரு ப்ரஃபஷனா? எல்லோரும் பொதுவா காசுக்காகத்தான் டாக்டர் ஆகிறாங்கனு சொல்றா. உண்மையான டெடிக்கேஷன் இருக்கனுமாம், டாக்டராக! மணி இஸ் நாட் எவ்வெரிதிங் னு லெக்சர் அடிக்கிறாள். என்னத்தைப் பண்ண சொல்ற?'

"அது உண்மைதான். நம்ம ஊர்ல பிள்ளைகளுக்கு இண்டெரெஸ்ட் இருக்கோ இல்லையோ, அவங்கள டாக்டர் இல்லை இஞ்னியராத்தான் ஆகுனும்க்கிற ஒரே ஆசைதான் எல்லா அம்மா அப்பாவுக்கும். அது ஒண்ணுதான் படிப்புனு நெனச்சு வீணாப்போகிறோம், ராஜ்."

"இப்போ ஒரு ஆஃப்ரிக்கன் அமெரிக்கனை டேட் பண்ணுறாளாம்! நம்ம இந்தியர்கள் எல்லாம் சுத்தமா பிடிக்கலையாம். இந்தியர்கள் எல்லாம் முட்டாள்களா இருக்காங்களாம். பேசத்தெரியலையாம். எல்லாமே அஃபெண்ஸிவா பேசுறாங்களாம்.."

"நீங்க இந்தியந்தானே?"

"ஆமா, ஆனா அவ அப்பாங்கிறதாலே சரினு போறாளாம்."

"சரி சந்தோசமா இருக்காளா, கிரிஜா?"

"அப்படித்தான் சொல்றா. ஷி இஸ் ஹேப்பி அண்ட் பிஸி வித் ஹெர் வொர்க்!"

"சின்னவள் சங்கீதா?"

"அவ இப்போ 9th க்ரேட் போறா. அவளும் நல்லாத்தான் படிக்கிறா. இதைக்கேளு! போன வருடம் ஒரு வெள்ளைக்கார பையனை வீட்டுக்கு அழச்சுண்டு வந்தாள். அவ க்ளாஸ்மேட்டாம். ரொம்ப நல்லாப் படிப்பானாம். ஆனால், அப்புறம் சொல்றா, அவன் "கே" யாம்! ஆனா ரொம்ப நல்ல பையனாம். இவளுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டாம்"

"இந்த வயசிலேயே தெரியுமா அவனுக்கு?"

"தெரியும்னு சொல்றா, சங்கீதா! ஹி இஸ் டிஃபெரெண்ட் னு சொல்றா. ஏன் அவனோட போயி பழகிறனு கேட்டுட்டேன். என்னை காலி பண்ணிட்டா! பெரிய சண்டையாப்போச்சு!"

"என்ன சொன்னாள்?"

" அவன் "கே" யா இருந்தா உங்களுக்கென்ன? ஸ்ட்ரைட்டா உள்ளவன் ட்ரக் அடிக்ட்டா, ரேப்பிஸ்ட்டா இருந்தா பரவாயில்லையா உங்களுக்கு? அடுத்து நான் "கே" ஆயிடுவேனானு பயமா? னு கேட்டாள். அப்படியே நானும் "கே" ஆனால் என்ன செய்வீங்க? நான் உங்க மகள்னு இல்லாமல் போயிடுமா? னு கேக்கிறா"

"அவ 8th படிக்கும்போதா!"

"ஆமா மாதவா. இந்தக்காலத்து குழந்தைகள் எல்லாம் முந்தி மாதிரி இல்லை மாதவா. நமக்குத் தெரியும் விசயங்களைவிட அவங்களுக்கு எல்லாம் தெரியுது!"

"பேசாமல் இருந்துட்டீங்களா?"

"என்ன சொல்லச் சொல்ற? என்ன மன்னிச்சுக்கோனு சொன்னேன்! அப்புறம்தான் சங்கீதா விட்டா என்னை!"

"என்ன ராஜ் உண்மையிலேயே பயமுறுத்துறீங்க என்னை!"

"மூத்தவள், டேடிங்னு பெர்த் கண்ட்ரோல் பில்ஸோட இருக்கா! செக்ஸ்லாம் தப்பு இல்லையாம். இளையவ என்ன ஆகப்போறானு எனக்குத் தெரியலை! பிரேமாவோட எதுவுமே ஒத்துப்போக மாட்டேங்கிது. எதுக்காக ஃபேமிலி ஃபேமிலினு தியாகம் பண்ணனும் தெரியலை? எதுக்கு சம்பாரிச்சுப் போடனும்னு ஒரே எரிச்சலாடுச்சு. குழந்தைகள், மனைவி எல்லாருமே சுயநலம்தான். பேசாமால் நமக்காக நாம் வழுவோம், சாவோம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்."

"நீங்க அந்த கம்பெணில தானே இருக்கீங்க?"

"இல்லைப்பா இப்போ ஒரு சின்ன காலேஜ்ல டீச் பண்ணுறேன். கம்பெணியில் வாங்கிய சம்பளத்தில் பாதிதான் இப்போ வருது. ஆனால் ஒரு அர்த்தமான வேலை. அதனாலதான் பிரேமாவோட பிரச்சினையே வர ஆரம்பிச்சுச்சு."

"எதனால?"

"ஏன் அதிக சம்பளம் கிடைக்கிற கம்பெணி ஜாப் பண்னலைனு இவ கேக்கிறா. எனக்கு பிடிக்கலைனு சொன்னால், அது இதுனா! இது என் வாழக்கை, நீ பேசாமல் மூடிக்கிட்டு இருனு கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டேன்! அதுல ஆரம்பிச்சதுதான்.."

"ஏன் ராஜ்?"

"இந்த பாரு. எனக்கு பிடிச்சதைதான் நான் பண்ண முடியும். அதிக சம்பளம் கொடுக்கிறான்னு சும்மா குப்பை கூட்ட முடியாது! இவளுகளுக்கு மட்டும் இவளுக லைஃப் முக்கியமாம. நம்ம என்னத்துக்கு இவளுகளுக்காக சும்மா தியாகம் பண்ணனும்? எனக்குப் பிடிச்சதை நானும் பண்ணுறேன். இவங்களுக்காக செய்த தியாகம்லாம் போதும்ப்பா"

"சரி, ராஜ். சாப்பிட போகலாமா?"

"வா அந்த இந்தியன் ரெஸ்டாரண்ட் போகலாம். நான் ட்ரைவ் பண்ணுறேன். என் கார்லயே போகலாம்!"

Monday, January 11, 2010

ஜக்குபாய், கமல், ரஜினி, அமீர்!


ஜக்குபாய் படம் வெளிய வருமுன்னே சி டி வந்துருச்சாம். என்ன கொடுமை இது? இதல்லாம் நம்ம மக்கள்ட்ட சாதாரண விசயம்தான். நம்ம டெக்னாலஜில ஜப்பான், அமெரிக்காவோட எல்லாம் போட்டி போடுவதில்லை! இப்படித்தான் காப்பி ரைட்ஸ் திருட்டுத்தனம் செய்து வேகமாக முன்னேறுகிறோம். இது மிகப்பெரிய தவறான செயல் என்றாலும், இதை நம்ம தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே சீரியஸா எடுத்துக்கிறது இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை!

மனிதர்கள் மிகவும் காம்ப்லெக்ஸ் பர்சனாலிட்டிகள். விலங்குகள்க்கு எல்லாம் சாப்பாடு, செக்ஸ் இருந்தால் போதும். புகழ் தேவையில்லை! பணம தேவையில்லை! போர்ன் தேவையில்லை! அடுத்தவர்களை கவிழ்த்தித் தன் பிழைப்பை ஓட்டுவதில்லை! பாலிட்டிக்ஸ் பண்ணத் தெரியாது! விலங்குகள் ரேப் பண்ணுவதில்லை! மனிதந்தான் மிகவும் கீழ்த்தரமானவன். அதனால்தானோ என்னவோ நமக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

உங்களுக்கு அறிவுரை பிடிக்குமா? பிடிக்காதா?

இப்போ ஒருவர் அறிவுரை சொல்றாருனு வச்சுக்குவோம்! நம்ம ஆளு பொதுவா அறிவுரை என்னனு பார்ப்பதைவிட யார் சொல்றானுதான் பார்ப்பார்கள்!

ஜக்குபாய் விசய்த்தில் கமல், ரஜினி, ராதிகா எல்லோரும் ஒரே புலம்பல். 15 கோடி வரை செலவழிச்சு இருக்கோம்! என்ன அநியாயம் இது? என்று அழுகிறார் ராதிகா.
ஆனால் உண்மையில் நடிகர், நடிகைகள் புலம்புவதைப் பார்த்து எவனும் கவலைப்படுவதில்லை. என்ன கோடி கோடியா சம்பாரிக்கிறவர்கள் புலம்புவதை எல்லாம் யார் கேட்பார்கள்?

இப்போ ஜக்குபாய் பிரச்சினையில் கமல் சொல்றாரு, இந்த திருட்டு வி சி டியை கறுப்புப்பணமா எண்ணி மக்கள் புறக்கணிக்கனுமாம்! மக்கள் இதை எதிர்க்கனுமாம்!

உலகத்திலேயே நமக்கு ரொம்ப ஈஸியா கிடைக்கிற ஒண்ணு, அறிவுரைகள்! தன் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலைனா ஒரு சிலருக்கு தூக்கம் வராது. ஆனால், பொதுவாக ஒரு சிலரைத்தவிர பலருக்கு அட்வைஸ் கேக்கிறதுனா கசப்பு மருந்து சாப்பிடுவதுபோல! இதில் அடங்குபவர்கள் சிறுவர்கள், பதின்ம வயதில் உள்ளவர்கள், அனுபவமில்லாதவர்கள் மட்டுமல்ல! பல பெரிய மனிதர்களும் அடங்குவார்கள். ஏன் நீங்களும் ஒருவராக இருக்க நெறையவே வாய்ப்பிருக்கு!

ஆமா, கமலு, நீங்க ஹாலிவுட் கதையை திருடாதீங்கனு நாங்க சொன்னா இவர் கேப்பாராக்கும்? என்கிறார் கமலைப் பிடிக்காத ஒருவர்.

கறுப்புப்பணமாம்! காப்பி ரைட்டாம்! இவர்களுக்கு காப்பி ரைட்ஸ்க்கு அர்த்தம் தெரியுமா? நடிகர்கள்ட்ட இல்லாத கறுப்புப் பணமா? என்கிறார் இன்னொருவர். என்னவோ இவர் சம்பாரிக்கிற ஒவ்வொரு பைசாவுக்கும் இன்கம் டேக்ஸ் கட்டுவதுபோல பேசுறார் என்கிறார் இன்னொருவர்.

ரஜினி சொல்றார், இப்படியே நிலைமை போச்சுனா, நான் கண்டக்டரா போக வேண்டியதுதான். போக முடியுமா? ஏன் இவர் கண்டக்டரா திரும்பி போனால்தான் என்ன? உலகம் சுத்துவது நின்னுடுமா என்ன? என்கிறார் ரஜினியைப்பிடிக்காத இன்னொருவர்.

ஒரே அட்வைஸை ரெண்டு பேர் செய்தாலும், ஒருவர் சொன்னால் அதை எடுத்துக்குவாங்க! அதே மேட்டரை இன்னொருவர் சொல்லியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க! ஏன் இது? யார் சொன்னா என்ன? என்ன விசயம்? அது நல்லதா, கெட்டதானு பகுத்தறிஞ்சு ஏற்றுக்கொளவதுதானே திறந்து மனதுள்ள ஒருவரின் புத்திசாலித்தனம்! திறந்த மனதெல்லாம் பொதுவா நம்மில் பலரிடம் கிடையாது. பகுத்தறிவதெல்லாம் சும்மா பகுத்தறிவுவாதி பட்டம் பெறுவதற்காக சும்மா சொல்லிக்கொளவதுதான்! நான் என்கிற அகம்பாவம் நம்முள் மறைந்து இருப்பதை ஒருசில கணங்களில்தான் பார்க்கமுடியும். அது யாராவது அட்வைஸ் பண்ணும்போதுதான் விளங்கும்!

மக்கள் எல்லாம் திருந்தப்போவதில்லை! சட்டம் ஒழுங்கை அமல்ப்படுத்தி, 1 லட்சம் முதல் கோடி வரை அபதாரம் என்று சட்டம் கொண்டு வந்து, ஒரு 10 பேரைப் பிடிச்சு உலகறிய உள்ளே தூக்கிப்போட்டால், காப்பி ரைட்னா என்னனு தெரியும். கதைத் திருட்டு, திருட்டு வி சி டி எல்லாம் ஒழியும்! ஆனா அந்த பத்து பேர்ல, திருட்டு வி சி டி விக்கிறவன் மட்டுமல்ல, க்ரேஸி மோஹன், கமல், கே எஸ் ரவிக்குமார், அமீர் போன்றவர்களும் உண்டு!

Sunday, January 10, 2010

அமெரிக்காவில் ஜப்பானிய கார்விற்பனையில் வீழ்ச்சி!



மேலே உள்ளது டொயோட்டா கேம்ரி ( best-selling car in america)

அமெரிக்கா கார் கம்பெனிகள் ஜி எம், ஃபோர்ட், க்ரைஸ்லர் எல்லாவற்றுக்குமே பேன்க்ரப்ட் ஆகும் நிலைவந்தது எல்லோரும் அறிவோம். அப்போ அமெரிக்காவில் ஜப்பானிஸ் ஆட்டோ விற்பனை பாதிக்கப்படலையா? ஜாப்பனிஸ் கார் மட்டும் நல்லா விற்றதா? என்றால் அதுதான் இல்லை!




மேலே ஹாண்டா அக்கார்ட் (best-resale value car in America)

ஜப்பானிய ஆட்டோ கம்பெணிகள் அமெரிக்காலில் பெரிய பாதிப்படைந்து உள்ளார்கள்!

டொயோட்டா கேம்ரி (Toyota Camry), டொயோட்டா கரொல்லா (Toyota Corolla), ஹாண்டா அக்கார்ட் (Honda Accord), ஹாண்டா சிவிக் (Honda Civic) போன்றவை விற்பனையில் அமெரிக்காவில் முதல் நான்கு இடத்தைப்பிடிக்கும் மிட்-சைஸ் மற்றும் காம்பாக்ட் கார்கள் ஆகும். இதில் டொயோட்டா கேம்ரியும், ஹாண்டா அக்கார்டும் மிட்சைஸ் கார்கள். கரொல்லாவும் சிவிக்கும் காம்ப்பாக்ட் கார்கள்.

Dec 2009 % Chg from Dec '08 YTD 2009 % Chg from YTD 2008

Toyota Camry 34,946 38.3 356,824 -18.3

Toyota Corolla 34,220 54.6 296,874 -15.4

Honda Accord 26,159 17.1 287,492 -22.9

Honda Civic 22,319 29.0 259,722 -23.5

2008 விற்பனையுடன் கம்ப்பேர் பண்ணினால், 2009 விற்பனையில் மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வகை காரிலும் சுமார் 100,000 கார்கள் விற்பனையில் வீழ்ந்துள்ளது!

டொயோட்டா கேம்ரி (-18.3 %)

டொயோட்டா கரோல்லா (-15.4%)

ஹாண்டா அக்கார்ட் (-22.9%)

ஹாண்டா சிவிக் (-23.5%)

அமெரிக்கா பொருளாதாரத்தால் ஜப்பான் பொருளாதாரம் மட்டுமல்ல உலகப்பொருளாதாரமே இப்படித்தான் பாதிக்கப்படுகிறது!

Friday, January 8, 2010

மர்மயோகி மறுதயாரிப்புப் பற்றி வதந்தி!


கமலுடைய மர்மயோகி கைவிடப்பட்டு, ப்ரமிட் சாய்மீராவும் கமலும் அடித்துக்கொண்டு உருண்டது உலகமறியும். ஒருவரை ஒருவர் குறைசொல்லி கோர்ட், கேஸ் அது இதுனு போய் ஒரு மாதிரியா இந்தப்பிரச்சினை முடிகிற நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கமல், மர்மயோகி நின்றதால் மனந்தளராமல் தன்னுடைய உன்னைப்போல் ஒருவனை முடித்து, வெளியிட்டு அதை வெற்றிப்படமாக ஆக்கிவிட்டு, தற்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகும் தன் அடுத்த படத்தில் சீரியஸாக இன்வால்வ ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு தற்போதைக்கு "யாவரும் கேளிர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தப்பெயர் இல்லைனு கமல் சொன்னதாகவும் சொல்றாங்க.

சன் நெட்வொர்க் எந்திரனை தயாரித்த ஐங்கரனிடம் இருந்து வாங்கி, ஒருவழியாகத் தயாரித்து முடித்து அதை வெளியிட ரெடியாகிவிட்டார்கள். சப்போஸ் எந்திரன் பெரிய வெற்றியடைந்து, யாவரும் கேளிரும் பெரிய வெற்றியைத் தந்தால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெஹா பட்ஜெட்ப் படமான மர்மயோகியை சன் நெட்வொர்க் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பலர்.

இங்கே நாம் சில விசயங்களை கவனிக்கனும்.

* முதலில் கமல்-சன் நெட் வொர்க் ரிலேஷன்ஷிப் எந்தவிதமான முறிவும் ஏற்படாமல் நல்லாப்போகனும்!

* இரண்டாவது பெரிய பட்ஜெட் படமான எந்திரன் பெரிய வெற்றியடையனும்.

இது இரண்டும் நடக்கனும். அப்படி நடந்தால், மர்மயோகிக்கு மறு வாழ்வு கொடுக்குமாம் சன் நெட்வொர்க்! இதெல்லாம் சும்மா புருடாவா இல்லை உண்மைச் செய்தியா என்பதை காலம்தான் சொல்லனும்!

திரட்டிகளை புறக்கணிக்கும் வலைதளங்கள் சாகின்றன!

வலைதளங்களை வளர்ப்பதுடன் தன்னையும் வளர்த்துக்கொள்பவைதான் திரட்டிகள். வலைதளங்கள் இல்லை என்றால் திரட்டிகளும் தேவையில்லை என்பதும் எல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் வலைதளங்களும் திரட்டிகளும் ஒருவருக்கொருவர் ம்யூச்சுவல் ரெஸ்பக்ட் வச்சிருக்கனும் என்பது வலை உலகில் புரிந்துகொள்ள வேண்டிய, வெளியில் சத்தமாக சொல்லப்படாத, எழுதப்படாத ஒரு சட்டம்.

பொது நன்மைக்காக திரட்டிகளில் நாளுக்கு நாள் மாற்றப்பட்டுவரும் சில, பல சட்டதிட்டங்களையும், மாற்றங்களையும் வலைதளங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக, இல்லை என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்டிகள் உதவியில்லாமலே சாதிக்கும் என்ற தப்புக்கணக்கு போட்டு திரட்டிகளை புறக்கணிக்கும் சில வலைதளங்களில் ட்ராஃபிக் மந்தமாகி விசிட்டர்கள் குறைந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.

சரி, முழு எழுத்துச் சுதந்திரம் என்பது உண்மையிலேயே யாருக்கும் இருக்கிறதா?

முழு எழுத்துச்சுதந்திரம் என்பது எந்தப் பெரிய எழுத்தாளன், க்ரிட்டிக்கும் கிடையாது என்பது எழுத்து உலகம் அறியும். அந்தச் சுதந்திரம் பத்திரிக்கைகளில் பல பிரபலங்களுக்குக்கூட இல்லாததால்தான் ஞாநி விகடனிலிருந்து குமுதம் போனார்.

வலைதளத்தில் எழுதும் ஃப்ரஃபெஷனல் எழுத்தாளர்கள்கூட தன் விசிறிகளை என்றுமே மனதில் கொண்டு, அவர்களை அனுசரித்தே எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசிறிகள் இல்லைனா வலைதளம் ஏது? அதனால் தன் வாசகர்களை இழக்க பயந்துகொண்டு தன் சுதந்திரத்தை இழப்பதும் உண்டு. வலைதளங்களில்கூட ஒருவரும் முழுச்சுதந்திரம் கிடையாது.

சமீபகாலமாக, தன் வலைதளத்தில் நானே ராஜா என்ற அகந்தையுடன் பொய்யையும், ஜோடிக்கப்பட்ட புரட்டுக்ளையும் எழுதி நடந்த உண்மையை மறைத்து எழுதுபவர்கள் நிலைமை இப்போது கேலிக்கூத்தாகிறது. இவர்கள் எழுதும் பொய்களை, உண்மை தெரிந்த பலர் விமர்சிப்பதால் இவர்கள் வலைதளம் இப்போது பெரிதும் பாதிக்க்கப்படுகிறது. இவர்களுக்கு வலைதள உலகில் இருந்த மரியாதை காற்றில் பறக்கிறது. இவ்வளவு நாள் சம்பாரித்த இவர்களுடைய ரெப்யுட்டேஷன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

"எனக்கும் என் வலைதளத்துக்கும் முழு எழுத்துச்சுதந்திரம் வேணும்" என்று மனப்பால் குடிப்பவர்கள், தாங்களே எழுதி தாங்களே படிச்சுக்க வேண்டியதுதான். திரட்டிகளின் சட்ட திட்டங்களையும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு திரட்டிகளின் உதவியுடன் வலைதளம் நடத்துபவர்கள்தான் புத்திசாலி!

Thursday, January 7, 2010

அவதார் ஒரு பில்லியன் டாலர் மூவி!


ஜேம்ஸ் கேமரானின் அவதார், கடந்த 3 வாரங்களில் உலகம் முழுவதும் பில்லியன் டாலருக்கு மேலே ($1,135,245,852) கலக்சன் செய்து சாதனை புரிந்துள்ளது. இதனுடைய பட்ஜெட் $250,000,000 ($250 மில்லியன்)! உலக அளவில் கலக்சனில் 2 வது இடத்தில் உள்ளது.

Theatrical Performance

Total US Gross $374,445,852

International Gross $760,800,000

Worldwide Gross $1,135,245,852


அவதாருக்கு மேலே கலக்சன் எடுத்து உள்ள ஒரே ஒரு படம் இதே ஜேம்ஸ் கேமரானின் டைட்டானிக் மட்டும்தான்!

1) டைடானிக் ($1.8 பில்லியன்)

2) அவதார் ($ 1.135 பில்லியன்)


லாங் ரன் ல அவதார் டைட்டானிக்கின் வசூலை முறியடிக்க முடியுமா என்றால், முறியடிக்க முடியாது என்பது நிச்சயம்தான்.

இருந்தபோதிலும் * லார்ட் ஆஃப் த ரிங் (ரிட்டர்ன் ஆஃப் த கிங்), * டார்க் நைட், * பைரட் ஆஃப் த கரிபியன் போன்ற படங்களை அவதார் பின்னுக்குத்தள்ளியுள்ளது எனபதால் இதுவே பாக்ஸ் ஆஃபிஸ்ல ஒரு மிகப்பெரிய சாதனைதான்!

எந்திரன் விநியோக உரிமை பெற்றுள்ள நடிகர் விக்ரம்!


ஷங்கர்-ரஜினி-ஏ ஆர் ரகுமான்- ஐஸ்வர்யா ராய் என்கிற மிகப்பெரிய கூட்டணியுடன் எந்திரன் வெளிவருகிறது. இதுபோல் மிகப்பெரிய கூட்டணியுடன் வரும் தமிழ்ப்படம் அனேகமாக இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். கமலுடைய மர்மயோகி, மருதநாயகம் போன்ற படங்கள் வருவதுபோல தெரியலை.

எந்திரன் படம், 90% முடிந்துவிட்டதாக ஷங்கர் சொல்கிறார். அவருடைய தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதிலிருந்து ஓரளவுக்கு படத்தை முடித்துவிட்டு கமர்ஸியலைஷாசன்க்கு தயாராகிவிட்டார் என்பது உறுதி.

தோழர் கிரி அழகான பல ஸ்டில்களை வெளியிட்டு தாந்தான் #1 ரஜினி விசிறி என்பதுபோல் மிரட்டிவிட்டார்!

என் எஸ் சி ஏரியா எந்திரன் விநியோக உரிமை, நடிகர் விக்ரம் பெற்றுள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது. விக்ரம் இதுபோல் டிஸ்ட்ரிப்யூஷன் பிஸினெஸ்ல இறங்கிட்டாரா? ரஜினி தன் சொந்தப்படங்களுக்கு தன் சம்பளப்பணமாக என் எஸ் சி ஏரியா டிஸ்ட்ரிப்யூஷன் எடுப்பதுண்டு. ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் எந்திரன் டிஸ்ட்ரிப்யூஷன் என்பது சுமாரான சூதாட்டம்தான். எனிவே ஆஸ் த பெஸ்ட் டு விக்ரம்!

திருத்தம்: மன்னிக்கவும் இது நடிகர் விக்ரம் இல்லையாம். விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவாம்!

அமெரிக்காவின் விநியோக உரிமையும் ஒருவர் ஏற்கனவே வாங்கிவிட்டார் என்கிறார்கள். யு கே உரிமை ஐங்கரனுக்கு நிச்சயம் போகும்போல் உள்ளது. அமெரிக்கா, யு கே யை பொருத்தவரையில் ரிஸ்க் கொஞ்சம் கம்மிதான். ஓபெனிங் வீக் எண்ட் நல்லாப்போனாலே போதும்!

சன் தயாரிப்பில் உருவான மிகப்பெரிய மெஹா பட்ஜெட் படம் எந்திரன் தான். சிவாஜி, ரிலீஸ் ஆன போது, ஒரு 6 வாரங்களுக்கு எந்தப்படமுமே ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் சன் மீடியா அதை த்யாரிக்கவோ, டிஸ்ட்ரிப்யூட் பண்னவோ இல்லை! இப்போ எந்திரன் வெளியாகும்போது என்ன என்ன கூத்து நடக்கப்போகுதோ தெரியவில்லை! அநேகமாக இந்த முறை வேறு பெரிய ஸ்டார் படங்கள் போட்டிபோடும்னு நம்புவோம்!

Wednesday, January 6, 2010

என்ன திரு திரு னு முழிக்கிற?- கடலை கார்னர் (38)

“என்ன சாப்பிடுற பிருந்த்? பீட்சா ஆர்டர் பண்ணவா?”

“எப்போனாலும் பீட்சாதானா? சரி இப்போ நான் வரலைனா நீங்க என்ன சாப்பிடுவீங்க, கண்ணன்?”

“நானா தனியா சாப்பிட்டாவா? தயிர் இருக்கு, ஊறுகாய் இருக்கு, மைக்ரோவேவ்ல அப்பளம் ஃப்ரைப் பண்ணி, கொஞ்சம் ரைஸ் குக்ப்பண்ணி சாப்பிடுவேன்.”

“சரி, நானும் அதே சாப்பிடுறேன். ரைஸ் குக் பண்ணுங்க! ரைஸ் குக்கர்லயா பண்ணுவீங்க?”

“இல்லை! சும்மா ஒரு சட்டியில். அப்புறம் வடிகட்டிடுவேன். ஒரு 20 நிமிஷம் ஆகும்.”

“சரி, பண்ணுங்க! என்ன ரைஸ் இது?”

“பாஸ்மதி ரைஸ்தான். ஒரு அஞ்சுதர தண்ணி ஊத்தி அரிசியை நல்லாக் கழுவி, அலசுவேன். அப்புறம் வாட்டர் டீகேண்ட் பண்ணிட்டு. மறுபடியும் வாட்டர் ஊற்றி "ஹை"ல வச்சு ஹீட் பண்ணுவேன். பாயில் ஆனதும் "சிம்" ல வச்சு ஒரு 10 நிமிசம் விடுவேன். அப்புறம் ஃபில்டெர் பண்ண வேண்டியதுதான்.”

“சரி, நீங்க குக் பண்ணும்போது நான் பக்கத்தில் இருக்கலாமா?”

“அஃப் கோர்ஸ். பக்கத்தில் இருந்தால் அப்பப்போ உன்னை தொட்டுக்கலாம் இல்லையா?”

“ச்சீ! அந்த இடத்திலே எல்லாம் கை வைக்கக்கூடாது!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அப்படியே ஏதாவது ஆனால் நான் அதுக்கு லையபிலிட்டி “பே” பண்ணுறேன்.”

“இதுக்கு என்ன லயபிலிட்டி கொடுப்பீங்க?”

“ஐ வில் கிவ் எ கிஸ் தேர் டு காம்ப்பென்சேட் இட்! ஓ கேவா?”

“ச்சீ! அங்கேயா கிஸ்?”

“என்ன ச்சீ? யு வில் லவ் இட்!”

“ஹவ் டு யு நோ? ஓ மை காட்! யு ஆர் லையிங் தட் யு ஆர் ஸ்டில் எ வெர்ஜின்! ஆர் யு நாட்?”

“நோ! ஐ ஆம் நாட் லையிங்.”

“ஹவ் டு யு நோ ஆல் தீஸ்?”

“ஆமா, உனக்கு ஒண்ணுமே தெரியாது, பாரு! சரி கொஞ்சம் இருடா, நான் ரைஸை வாஷ்ப் பண்ணி, பாய்ல் பண்ண வச்சுட்டு வர்றேன்.”

“சரி, பாய்ல்ப்பண்ண வச்சுட்டு கிஸ் பண்ணப்போறீங்களா?”

“எங்கே?”

“அங்கதான். நீங்க கைவச்ச இடத்திலே. நீங்க சொன்னது உண்மையானு நான் பார்க்க வேணாமா?”

“ச்சீ நீ ரொம்ப ரொம்ப மோசம், பிருந்த்! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால்..”

“இதே வேலையாப்போச்சு உங்களுக்கு. எனக்கு மூடைக் கிளப்பி, க்யூரியாஸிட்டியை கிளப்பி விட்டுட்டு அப்புறம் அதோட விட்டுறது. இது மாதிரி செக்ஸ் டீஸிங் பண்றதுல்லாம் ரொம்பத் தப்பு, பாவம் கண்ணன்!”

“இது பாவமா!"

"ஆமா!"

"ஆண்ட்டிட்ட சொல்றேன், உங்க மகள் என்னை ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கமெல்லாம் சொல்லித்தரச் சொல்லுறானு சொல்றேன்"

"சொல்லுங்களேன்!"

" ஏன்டி இப்படி இருக்கனு கேட்டால் க்யூரியாஸிட்டியாம்! ஆண்ட்டினு சேர்த்து சொல்றேன்”

“உங்க ஆண்ட்டியை இப்பவே ஃபோன்ல கூப்பிடவா? நீங்க அவங்க பொண்ணை என்ன செஞ்சீங்கனு மொதல்ல சொல்லுங்க! அப்புறம் நான் கிஸ் பண்ண சொன்னதை சொல்லுங்க!”

“சொல்லலாம்தான்.. பாவம் ஆண்ட்டி! மயக்கம்போட்டு விழுந்துடுவாங்க!”

“அவங்களுக்கு நான் இன்னும் ஒண்ணுமே தெரியாத குழந்தைதான்.”

"உனக்கு எல்லாம் தெரியுமா, பிருந்த்? சரி, இப்போ அங்கே எல்லாம் கிஸ் வேணாம், பிருந்த்! ஆரம்பிச்சா நிறுத்த முடியாதுடா..”

“அவசரம் இல்லை! ரைஸ் குக் பண்ணிட்டு கொடுத்தால் போதும்.”

“வாட்! ரைஸ் குக் பண்ணிட்டா!”

“சரி, வேணாம் விடுங்க. கேன் யு பி மை ஸ்லேவ் டுடே, கண்ணன்?”

“உன்னுடைய ஸ்லேவா? அப்படினா?”

“அப்படினா.. இன்னைக்கு நைட் மட்டும் நீங்க என் அடிமை! நான் உங்களை அதட்டுவேன், திட்டுவேன், வெர்பல் அப்யூஸ் பண்ணுவேன். நீங்க நான் சொல்றதை எல்லாம் கேட்டுக்கனும். என்னை மேடம்னுதான் கூப்பிடனும்”

"நீ எப்படி என்னை கூப்பிடுவ?"

"பொறுக்கி, வாடா, போடானுதான் கூப்பிடுவேன்!"

“இன்னைக்கு மட்டும்தான? ஓ கே. டீல்!”

“சரி, ரைஸை பாயில்ப் பண்ண வச்சுட்டியாடா,?”

“வச்சாச்சுங்க மேடம்!”

“ இங்கே என் பக்கத்தில் வாடா, பொறுக்கி!”

“இதோ வந்துட்டேன்ங்க பிருந்தா மேடம்! என்னை பொறுக்கி அது இதுனு சொன்னா நான் அழுதுடுவேன் மேடம்..”

“ஐயோ ரொம்பத்தான்!"

"யு ஹர்ட் மை ஃபீலிங்ஸ் மேடம்!"

" சும்மா கண்ட இடத்திலேயும் கைய வைக்கிறது. என் மூடை கிளப்பி விடுறது. அப்புறம் ஏதாவது கதை சொல்லுறது. இதெல்லாம் ஜெண்டில்மேனா பண்ணுவாங்க? பொறுக்கிதான் பண்ணுவான்! அப்புறம் பெரிய இவர மாதிரி இஷ்டத்துக்கு தத்துவம் பேசுறது."

" "

"என்ன திரு தினு முழிக்கிற? என்னை இப்போ கட்டிப் பிடிடா!”

“உங்களையா மேடம்?”

“ஆமா! டு இட் ரைட் நவ்!”

“கட்டிப் பிடிச்சாச்சுங்க மேடம்!”

“நல்லா இருக்கிப்பிடிடா!”

“உங்க உடம்பு ரொம்ப சாஃட்டா இருக்கு மேடம்!”

“என்னடா பண்ணுற?”

“உங்க கழுத்துல ஏதோ மணம் அடிக்குதுங்க மேடம்”

“ஒரு முத்தம் கொடுடா!”

“ச்”

“கன்னத்திலேயா கொடுக்கச் சொன்னேன்?”

“வேறெங்கே மேடம்?”

“இங்கே கொடு!”

“உதட்டிலேயா?”

“ம்ம்”

“ஓ கே, இந்தாங்க”

“ஓ மை காட்! இவ்வளவு நேரமா முத்தம் கொடுப்பாங்க?”

“உதட்டிலேனா அப்படித்தாங்க.. நிறுத்த முடியலை மேடம்!”

“தேங்க் யு! இனிக்குதாடா என் சலைவா?”

“இனிக்கலை ஆனா ரொம்ப யம்மியா டேஸ்ட்டியா இருக்கு மேடம்!”

“ரியல்லி?”

“ஐ ப்ராமிஸ் ஆன் யுவர்..மேடம்”

“மறுபடியும் அங்கேயே கை போகுதுடா பொறுக்கி!? நீ திருந்தவே மாட்டியா?”

“இருங்க மேடம் இந்த ரைஸை வடிச்சுடுறேன். இல்லைனா குழைந்து போகும்.”

“சரிடா.”

“வடிச்சாச்சு!”

“அப்பளம் பொறிக்கப் போறியா?”

“ஒரு நிமிசம் சும்மா மைக்ரோவேவ்ல போட்டு எடுத்துடலாம், மேடம். அப்போத்தான் ஃபேட் ஃப்ரீயா இருக்கும்”

“விருந்து ரெடியா?”

“கடையில் வாங்கிய “ருசி ஊறுகாய்”தான் ஸ்பெஷல்! சமையல் ரெடி! சாப்பிடுவோமா, மேடம்?”

“டேய் பொறுக்கி!”

“என்னங்க மேடம்?”

“ஐ லவ் யு டா!”

“அப்படினா?”

“நீ ரொம்ப கெட்டப்பையனா இருக்கனும் என்னிடம். அப்போத்தான் பிடிக்கும்னு அர்த்தம்.”

"சரி, சாப்பிடலாமா, மேடம்?"

"எனக்கு ஊட்டி விடுறியா?"

"சரி"

-தொடரும்

Tuesday, January 5, 2010

"அசல்" அஜீத்தின் இன்றைய ஸ்டார் வால்யு என்ன?



நடிகர் அஜித், சமீரா ரெட்டியுடன் ஜோடியாக நடிக்கும் அசல் பாடலகள் ரிலீஸ் ஆகிவிட்டது. பாடல்கள் விமர்சனம் வந்துகொண்டு இருக்கின்றன. அசல் படத்தை சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்க, வைரமுத்து பாடல்கள் எழுத பரத்வாஜ் இசையுடன், சரண் இயக்கத்தில் ரெடியாகி வருகிறது. ஆனால் இந்தப்படம், பொங்கலுக்கு வெளிவரும் ஆயிரத்தில் ஒருவன் (கார்த்தி), குட்டி (தனுஷ்), நாணயம், போற்களம் போன்றவைகளுடன் மோதவில்லை! அனேகமாக விஷாலின் தீராதவிளையாட்டுப்பிள்ளையும் அசலும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜீத்தின் இன்றைய ஸ்டார் வால்யு என்ன?

இவருடைய பில்லா நீண்ட நாளைக்குப் பிறகு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், இவர் கடைசிப்படம் ஏகன் சரியாகப்போகவில்லை. இதனால் அசலின் வெற்றி அஜீத்துக்கு ரொம்ப அவசியம். இப்போதைக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா வுக்கு அடுத்த இடத்தில்தான் அஜீத் இருக்கிறார். அஜீத்தின் ஸ்டார் வால்யு கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கு. இவர் இந்த ஒரு நிலைமையில் மிகவும் கவனமான இருக்க வேண்டும். நல்ல படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்கனும். இல்லைனா அஜீத் நிலைமை கஷ்டம்தான்.

சமீபகாலமாக அஜீத், வருடம் ஒரு படம்தான் செய்கிறார். கடந்த 2009 ல் இவர் படம் ஒண்ணுகூட வெளிவரவில்லை! ஆனால் இவருக்கு தீவீர விசிறிகள் கோடிக்கணக்கில் உண்டு. இதுபோல் கோடிக்கணக்கில் விசிறிகள் உள்ளபோது ஏன் இத்தனை இடைவெளினு தெரியலை. தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாம் இப்போ ஹாலிவுட் சினிமா ஹீரோ மாதிரி ஆகிவிட்டாங்க. விக்ரம், அஜீத், விஜய் எல்லாம் ரொம்ப நிதானமாகத்தான் படம் வெளிவிடுறாங்க. ஆனால் இது நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியலை.

சரி, இத்தனைநாள் இடைவெளியில் வருகிற அசல் முதல்ப் பார்வையில் எப்படி இருக்குனு பார்ப்போம்!

* இந்த "அசல்" என்கிற பேரே எதுவும் ரொம்ப கவர்ச்சியா இல்லை! எங்கே இருந்து பிடிச்சாங்கனு தெரியலை இந்தப்பெயரை! ஆனால் பேரைவச்சு படத்தை எடைபோட முடியாதுதான்.

* அஜித் ஒரு பெரிய கிருதாவுடன் வருவது என்னத்துக்குனு தெரியலை! அழகான அஜீத்தை இந்த வேஷம் கண்றாவியா காட்டுது. இந்த மாதிரி ஒரு "முகஅழகுடன்" இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை!

* இன்னும் ஒரு ஸ்டில்ல பெரிய சுருட்டு ஒண்ண வேற குடிக்கிறார். இவர் சினிமால புகைபிடிப்பதை இன்னும் நிறுத்தலையா? இல்லைனா ராமதாஸ் நிலைமை மோசமா இருப்பதால் எல்லோரும் ஒரு தம்மை பத்த வச்சு அவரை சீண்டுறார்களானு தெரியலை!



ஏன்னு தெரியலை, எனக்கு இந்தப்படம் இதுவரைக்கும் நல்லாவோ, ஒரு அப்பீலிங்காவோ தோனலை. இந்த "வியேடான" கெட்-அப் எல்லாம் பார்க்கும்போது எனக்கு இது ஒரு ஏதாவது ஆங்கிலப்பட காப்பியா இருக்குமோனு தோனுது.

சரி, என்னுடைய இந்தப்பார்வை குருட்டுப்பார்வையாகப்போயி நான் நினைப்பது, இங்கே எழுதியது எல்லாமே தவறாகி, அசல் ஒரு வெள்ளிவிழாப்படமாக அஜீத்துக்கு அமையுனும், சிவாஜி ஃபில்ம்ஸ்க்கு இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக ஆகி பலகோடி ரூபாய் இலாபத்தை அள்ளித்தரனும் என்பதுதான் என் ஆசை!